உலகின் அதிக டேடி பெயர்களை வைத்து இருப்பவர் யார் தெரியுமா? Do you know who have most teddy bears in the world?


டெடி பேர் என்பது சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு விளையாட்டு பொருள் ஆகும். சில அதை படுக்கையறையிலும் ஏன் படுக்கையிலும் கூட வைத்து ரசித்து பார்த்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். பெரியவர்களும் கூட குறிப்பாக பல பெண்களைக் கவர்ந்த விளையாட்டுப் பொருள் டெடி பேர் ஆகும். விளையாட்டுப் பொருள் என்று சொல்லுவதை விட செல்ல பிள்ளை என்றே சொல்லலாம்.
வகை வகையான டெடி பேர்கள் உலகில் நிறைய உண்டு. அதை நிறைய சேர்த்து வைத்த ஒரு நபரை பற்றி தற்போது பார்க்கப் போகிறோம்.
அவரின் பெயர்"ஜேக்கி மைலி" ஆகும். பொழுதுபோக்காக போகுமிடமெல்லாம் கண்களில் கண்ட டெடி பியர்களை 2000 ஆண்டு முதல் சேமித்து வருகிறார்.
இவரிடம் மிகச்சிறிய 3/4 இஞ்ச் நீளம் முதல் மிகப்பெரிய 8 அடி உயரமுள்ள டெடி பேரளை சேர்த்துள்ளார். தற்போது அவரிடம் 8025 டெடி பேர்கள் உண்டு. இவர் அமெரிக்காவின் ஹில் சிட்டி டகோட்டாவில் வாழ்ந்து வருகிறார்.

இவரின் முதல் டெடி பேரின் பெயர் 'grandma Jackie' என்பதாகும். தற்போது 8025 டெடி பேர்களுடன் 2018 ல் அதிக டெடி பேர் வைத்திருப்பவர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் டித்துள்ளார்இந்த 68 வயது பாட்டி. அந்த டெடி பேர்களை பார்வைக்காகவும் வைத்துள்ளார்.

இவர் தனது டெடி பேர் கலெக்சன் பற்றி இவ்வாறு கூறுகிறார்.
"நான் சிறு வயதில் இருந்தே டெடிபேரை பார்த்ததுமில்லை கேள்விப்பட்டதுமில்லை. என்னுடைய எட்டு வயதில் மினஸொடா ஸ்டேட் பெயார் (Minnesota state fair) என்ற சந்தையில் முதன்  முறையாக கண்டேன்." என்கிறார்.

சிறுவயது ஆசை தான் இவரை இவ்வளவு சேமிக்க வைத்தது போல...

No comments:

Post a Comment

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா??

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா வடிகட்டி-உணணும் திமிங்கலங்கள் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டை உட்கொள்கின்றன, ஒரு...