உலகின் மிக அழகான 10 இடங்கள் world most beautiful place


கெவ்கென்ஹொப் கார்டன்ஸ் நெதர்லாந்து
(Keukenhof gardens Netherlands)

இதை உலகின் மிக அழகான இலைத்துளிர் பூங்கா (spring garden) என அழைப்பர். இங்கே 7 மில்லியன் டியுலிப் பூக்கள் ஒரே தடவையாக பூக்கும். காணக்கண்கோடி வேண்டும் இந்த இயற்கை அழகை... ஆனால் இது மார்ச் முதல் மே மாதம் வரையே பூத்துக் குலுங்கும். எனவே இதைச் சென்று பார்ப்பவர்கள் அந்த நேரங்களிலே தமது பயணங்களை அமைத்துக் கொள்ளலாம்.

அன்டிலோப் கன்யொன்- அரிசோனா
Antelope canyon- Arizon



அன்டிலோப் என்பது ஒருவகையான மான். மான் நிறத்தில் இருப்பதாலோ என்னவோ ' மான் பள்ளத்தாக்குகள்' என்ற பெயரைப் பெற்றுள்ளது. இது மணலில் சென்ற மழைநீரால் பெற்றுக்கொள்ளப்பட்ட வடிவம் அல்லது காற்று மணலை அள்ளி அடுக்கப்பட்டிருப்பதால் கிடைக்கப் பெற்ற வடிவமாக இருக்கலாம். புகைப்பட கலைஞர்களை கவர்ந்த இடமாக உள்ளது. இதன் ஊடாக சூரிய கதிர்கள் ஊடுருவும்போது அந்த ஒளி பட்டுத் தெறிக்கும் போது வரும் அழகை இரசிக்க காணக் கண்கோடி போதாது.

பிலிட்வைஸ் லேக் - குரோஷியா
Plitvice lake- Croatia


இது குரோஷிய நாட்டின் மிகப்பெரிய தேசிய பூங்கா ஆகும். இங்கே  நீர்வீழ்ச்சிகளும் குகைகளும் குளியல் குளங்களும் இயற்கையாகவே அமையப் பெற்றுள்ளன. இந்த மகத்தான அழகை கண்டு களிக்க வசந்தகாலம்(summer) செல்வது சிறந்த காலம். ஏனெனில் குளிர்காலத்தில் இந்த நீர்வீழ்ச்சிகளிலும் குளங்களிலும் உள்ள நீர்  ஐஸ்கட்டியாக மாறிவிடும்.(அதுவும் ஓர் அழகே...)
(ஐஸ் கட்டியாக மாறிய படம்)

வயிட் ஹெவன் பீச்- அவுஸ்த்ரேலியா
Whitehaven beach- Australia


'வெள்ளைச் சுவனம்' என அர்த்தம் கொள்ளும் பெயருடைய இந்த கடற்கரை
ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ளது. பரந்து விரிந்த கடலில் வெள்ளை மணலை விரித்தது போல காணப்படும்.
இதன் பரப்பு 7 கிலோமீட்டர் ஆகும். இதைப் பர்க்கும்போது சகல கவலைகளையும் மறந்து மன அமைதி ஏற்படும் என்பதில் ஐயமில்லை. ஹாமில்டன் தீவுகளிலிருந்து படகு வழியாகவும் ஷூட் துரைமுகம் மற்றும் ஏர்லி பீச் துறைமுகங்களிலிருந்தும் இந்த கடற்கரையை அணுகலாம். சிறந்த
பார்வை காட்சிகள் அனுபவிக்க டங் பாயிண்ட் என்ற இடத்திலிருந்தும் அணுகலாம்.

சலார் டீ உயூனி-பொலிவியா
Salar de uyuni- Bolivia


உலகின் மிகப்பெரிய உப்புச் சுரங்கமான இது அழகிய அதிசயங்களில் ஒன்று. இது தென் அமெரிக்காவின் தீட்டப்பட்ட சித்திரங்கள் போன்று பார்ப்பதற்கு ஓர் எழில் கொஞ்சும் இடம். ஒரு நீரூற்று வற்றியதால் ஏற்பட்ட இடம் பதினோராயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கே சுற்றிவர வறட்சியாகவும் பாலைவன நிலப்பரப்பு உள்ளதால் அதிகப்படியான உயிரினங்களைக் காணமுடியாது ஒருவகையான நாரை இனங்களை தவிர.. வெள்ளை படுக்கை போன்று காட்சியளிக்கும் இந்த இடத்தில் திட்டுதிட்டாக உப்புப் படிந்துள்ளதை காணலாம்.

மொரைன் லேக்- கனடா
Moraine lake- Canada


கனடாவின் குன்றுகளின் 10 சிகரங்களின் பள்ளத்தாக்கில் தொலைவான ஒரு பகுதியில் அமைந்துள்ளது. இந்த 'மொரைன் லேக்' மரகத அழகு என வர்ணிக்கப்படும். இந்த இடத்தைச் சூழவும் மலைகள், சிறிய பெரிய பனிப்பாறைகள், பெரும் நீர்வீழ்ச்சிகள், பழங்கால குன்றுகள், என்பவை காணப்படுகின்றன.
பனிப்பாறைகள் உருகினால் ஏரிநீர் உயர்ந்து  காணப்படும். பல வித்தியாசமான இயற்கைக் காட்சிகளை இங்கு கண்டு ரசிக்க முடியும்.'கயாக்' அல்லது 'கோனோ' பகுதிகளிலிருந்து அதன் அழகை முழுமையாக அனுபவிக்க முடியும்.

யெல்லோ ஸ்டோன் நேசனல் பாக் -யூ .எஸ்.ஏ
Yellowstone National Park-U.S.A


இது மிகவும் பழமையான தேசியப் பூங்கா அமெரிக்காவில் உள்ளது. இது 3500 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. சுற்றி வரக் காடுகளும் கட்டுக்கடங்காத இயற்கை அழகையும் கொண்டுள்ளது. வேறுபட்ட இயற்கை அம்சங்களைக் கொண்ட பொழுதுபோக்கு பகுதி. அதிக வேகம் கொண்ட ஆறுகள், நீறு பூத்த நெருப்பு போன்ற எரிமலைகள், வெந்நீரூற்றுக்கள், ஆழமான பள்ளத்தாக்குகள், அடர்த்தியான பண்டைய காடுகள், பனிமூடிய மலையுச்சி கள் பாதைகள் முழுதும் திணறவைக்கும் காட்சிகள் நிறைந்தது.

மேலும் இங்கு சில உயிரினங்களின் உறைவிடங்கள் உண்டு. கரடி, ஓநாய், காட்டெருமை, மான்மறைகள் போன்றவைகள் இங்கே வாழ்கின்றன. இது ஒரு சிறந்த மகிழ்ச்சி நிறைந்த பொழுதுபோக்கு இடமாகும். அதுமட்டுமன்றி தேசிய சொத்தாகும்.


கிரேட் பெரியர் ரீப்- ஆஸ்திரேலியா
Great Barrier Reef- Australia


கிரேட் பெரியர் ரீப் கடற்கரை மிகப்பெரியது.குயின்ஸ்லாந்தின் கடற்கரைக்கு அருகிலுள்ள வடகிழக்கு ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள இந்த இடம் 2300 கிலோமீட்டர் நீளம் கொண்டது.
3000ற்கும் மேற்பட்ட பாறை அமைப்புகள்,
பவளப்பாறைகள் மற்றும் நூற்றுக்கணக்கான மிகச் சிறிய பெரிய தீவுகள் வெள்ளை நிறமான மணற் கடற்கரைகளை இங்கே காணலாம்.
இதன் உண்மையான அழகே கடலுக்கடியில் உள்ள பவளப்பாறைகள் தான். இங்கு 600க்கும் அதிகமான வகைகள் மென்மையான மற்றும் வன்மையான பவளப்பாறைகளை காணலாம். இந்த வசீகர அழகுடன் உள்ள இந்த இடத்தில் கடல் மீன்கள், நட்சத்திர மீன்கள், மொல்லஸ்க் , டால்பின், மற்றும் சுறாமீன்கள் ஆமைகள் ஆகிய உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது.
இந்த இடத்தின் அழகை அரை கண்ணாடி படகின் மூலம் சுற்றிப் பார்ப்பது, படகு சவாரி செய்வது, அரை நீர்மூழ்கிக் கப்பலில் பயணிப்பது, மற்றும் வெற்று நீச்சல் ஆகியவற்றின் மூலம் பார்க்கலாம் அனுபவிக்கலாம்.

விஸ்டேரியா டனல்-கவாசி புஜி காடன் ஜப்பான்
Wisteria tunnel- kawachi Fuji garden Japan



இது பூக்களால் வேயப்பட்ட வேலி பாதை போன்று செய்யப்பட்ட ஒரு இடமாகும். வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த இடம் டோக்கியோவில் இருந்து ஐந்து மணிநேர தூரத்தில் அமைந்துள்ளது.
இங்கே 150 விஸ்டேரியா என்ற வகை பூ தாவரங்களினால் கிட்டத்தட்ட 20 வகையான பூக்கள் பயன்படுத்தப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெள்ளை, நீலம், கருநீலம், ஊதா மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் காட்சியளிக்கிறது. இதனால் இங்கே வண்ணமயமாகவும் அழகாகவும் உள்ளது
இங்கே விஜயம் செய்வதற்கு பொருத்தமான நேரம் ஏப்ரல் முதல்மே நடுப்பகுதிவரை. அந்நேரமே பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஏப்ரல் 21 முதல் மே 6 வரை இங்கே விடுமுறை (கோல்டன் வீக்) அனுஷ்டிக்கப்படுகிறது. எனவே கூட்டம் அலைமோதும்.
500 முதல் 1000 ஜப்பானிய யென்கள் வரை பூக்கள் பூப்பதற்கு ஏற்ப  அறவிடப்படுகிறது. முற் பதிவு டிக்கெட் மூலமே உள்ளே அனுமதிக்கப்படகிறார்கள்.


இந்தப் பாதையால் நடந்து போனால் வாழ்வின் அனைத்து துன்பங்களும் மறந்து சொர்க்கத்தின் நடப்பதுபோல தோன்றுமே..


ரேன்போ மவுண்டென்-சீனா
Rainbow mountain-China



வானவில் மலை எனப் பெயர் கொண்ட 'சங்கய் டங்சியா லேண்ட்போம் பாக்' என்ற பெயர் கொண்ட புவியியல் பூங்காவில் சீனா கன்சூ மாகாணத்தில் அமைந்துள்ளது. மணலும் கனிமங்களும் கலந்து பல வருடங்கள் அழுத்தப்பட்ட தாலும் இயற்கை சீற்றங்கள், அரிப்பு  போன்றவற்றுக்கு உள்ளான தாலும் வரிவரியான வானவில் போன்ற கோடுகள் இந்த மலைமேல் உருவானது. இது வித்தியாசமான நிறங்கள் சிவப்பு, பச்சை, நீலம் மற்றும் மஞ்சள் நிறங்களில் அமைந்தன. பார்ப்பதற்கு வானவில் போன்று இந்த கோடுகள் உயிரோட்டமாகவும் துடிப்பாகவும் அமைந்துள்ளன. யுனெஸ்கோ இதை உலக பாரம்பரிய இடம் பட்டியலில் சேர்த்துள்ளது. காண்பதற்குக் கண்களுக்குக் குளிர்ச்சி யூட்டும் பிரமிப்பூட்டும் வனப்புடன் அமைந்துள்ளது.

இந்த தலையங்கத்தை top 10 அழகான இடங்கள் என எழுத நினைத்தேன். இடங்களின் அழகைப் பார்த்ததும் ஒவ்வொன்றும் அதற்குரிய தனித்தன்மை வாய்ந்ததாக இருப்பதால் தரம் பிரிக்க (rating பண்ண) மனது வரவில்லை.

No comments:

Post a Comment

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா??

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா வடிகட்டி-உணணும் திமிங்கலங்கள் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டை உட்கொள்கின்றன, ஒரு...