பிளாஸ்டிக் யூஸ் பன்றீங்கலா? இதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று உலகமெங்கும் பிளாஸ்டிக் சர்வ சாதாரணமாக
உபயோகிக்கப்படுகிறது. அதன் மீள் சுழற்சியே ஒரு சில நாடுகளில் கேள்விக்குள்ளாக்கப் பட்டுள்ளது. கடலில் மலைப்போல் சேர்ந்த பிளாஸ்டிக் குப்பைகளை என்ன செய்வது எனத் தெரியாமல்  அகற்றுவது பற்றி யோசிக்க படுகிறது.

இவ்வளவு சிக்கல்கள் மத்தியிலும் நாம் பிளாஸ்டிக் உபயோகிக்காமல் இருப்பதாக இல்லை. எமது வாழ்விலும் அது தனி இடத்தைப் பிடித்துவிட்டது. அதன் உறுதித்தன்மை மற்றும் மலிவாக கிடைப்பதே இதற்குக் காரணமாகும்.

நீங்கள் உபயோகிக்கும் பிளாஸ்டிக்கில் இருக்கும் முக்கோண குறியீடுகள் அதன் எண்கள் பற்றி தெரியுமா? இது பெரும்பாலும் பிளாஸ்டிக் பொருட்கள் அடியில் இருக்கும்.

No 1 PET(polyethylene Terephthalate)


இது மினரல் வாட்டர் போத்தலகளிலும், மென் பானங்கள் குளிர்பானங்கள் சமையல் எண்ணெய் போத்தல்களிலும்   உபயோகிக்கப்படுகிறது. ஆனால் உபயோகிக்கப்படும் பொருட்களுடனும் அதிக சூடு , குளிர் காரணமாக பிளாஸ்டிக் ஊடுருவோ அல்லது பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. மீள் சுழற்சி செய்யலாம். (Recycle). மீள் பாவனை செய்யக் கூடாது.(reuse).

No2 HDPE(high density polyethylene]


இது பால், சுத்தமாக்கும் திரவங்கள், சலவை திரவங்கள், வெளிற்றும் திரவங்கள், ஷாம்பு போத்தல்களிலும்
உபயோகிக்கப்படுகிறது. இது கடினமான தன்மை உடையதால் குளிர் சூடு தாங்கும் வகை ஆகும். எனினும் சுத்தம் செய்ய மறக்கக் கூடாது. சில பாடசாலை போத்தல்களிலும் இவ்வகையில் உண்டு. இது மீள் சுழற்சி செய்யலாம். மீள்ப்பாவனை செய்யலாம்.

No3 PVC(polyvinyl chloride]


இது  இனிப்பு தட்டுக்கள், பழங்களை சுற்றும் bubble foil, foil paperகளாகவும்,
சமையல்எண்ணை போத்தல்கள், சில குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் செய்யவும், பிளாஸ்டிக் குழாய்களிலும், (PVC pipe) நீர் குழாய் களிலும் பயன்படுகிறது.
இதற்கு இன்னொரு பெயர் poison plastic அதாவது நஞ்சு பிளாஸ்டிக். இதில் எண்ணிலடங்கா நச்சுப்பொருட்கள் பாவிக்கும் திரவங்களுடன் விட வாய்ப்புண்டு.
இதில் 1% குறைவானpvc வகையை சேர்ந்த பிளாஸ்டிக் வகைகளை மாத்திரம் மீள்சுழற்சி செய்யலாம்.
மற்ற வகைகளை மீள் சுழற்சி செய்யவோ மீள் பாவனை செய்யவோ முடியாது.

No4-LDPE (low density polyethylene)


அழுத்தும் போத்தல்கள்(sauce mayonnaise bottles)ஷாப்பிங் பேக் , சாக்குகள் போன்றவை செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.
மற்ற வகைகளுடன் ஒப்பிடும்போது குறைந்த நச்சுத்தன்மை கொண்டது. பாவனைக்கும் உகந்தது. மீள் பாவனைக்கும் உகந்தது. பொதுவாக பெரும்பாலும் மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது.

No5 -PP(polypropylene)


இது பாரமற்ற தன்மையும் சூடு பிடித்து நிற்கும் தன்மை கொண்டது. இது குழந்தை டயாபர் களிலும் , வாளி, பிளாஸ்டிக் போத்தல்களின் மூடி, மார்ஜரின் யோகட் கப் வகைகளிலும்
உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்,ஸ்ட்ரா போன்றவைகளை செய்வதற்கு உபயோகிக்கப்படுகிறது. இது ஈரப்பதனை உறிஞ்சும் தன்மையும் சாப்பாடு பொருட்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும் தன்மையும் கொண்டது. இது மீள்சுழற்சி குரியதாக பெரும்பாலோனாரால் ஏற்றுக்கொண்ட பட்டுள்ளது. மீள் பாவனையும் செய்யலாம்.

No6 PS (polystyrene)



இது விலை மலிவானது. பாரம் குறைந்தது. இது ஒருமுறை பாவிக்க கூடிய பிளாஸ்டிக் கப், சாப்பாடு பொதி, முட்டை பொதி, பிளாஸ்டிக் கரண்டி, முள்ளுக் கரண்டி, போன்றவைகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

இது இலகுவாக உடையக் கூடியது. இதில் 'ஸ்டய்ரின்' எனும் திரவம் உணவில் சூடு பண்ணும்போது கசியும் தன்மை கொண்டது. இதில் இருக்கும் கெமிக்கல்கள் மனித ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிப்பதுடன் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தவல்லது.
இதற்கு மீள் சுழற்சிக்கு சந்தை வாய்ப்புக்கள் குறைவு. மீள்பாவனைக்கும் பெரிதளவாக ஏற்றது அல்ல. தவிர்ப்பது நலம்.


No 7 other (BPA, polycarbonate and LEXAN)


இது குழந்தை பாட்டில்கள், கோப்பைகள், நீர் உலர் போத்தல்கள், காரின் உதிரிப் பாகங்கள் செய்வதற்கும் பயன்படுத்தப்படும்.
இது மீள் பாவனை மீள் சுழற்சிக்கு வரையறுக்கப்படாத து. இதில் இருக்கும் விஷத்தன்மை சாப்பாட்டு பொருட்களுடன் ஊடுருவக் கூடியது.இதில் 'BPA' என்ற நச்சுப் பொருள் அடங்கியுள்ளது.BPA என்பது மூளை வளர்ச்சியையும் உடல் வளர்ச்சியையும் பாதிக்கும் பொதுவாக குழந்தைகளுக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
இதில் சூடாகவோ குளிராகவோ பொருட்கள் பரிமாறப்படும் போது நச்சு கசியும் வாய்ப்புள்ளது. உங்கள் குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இதனை மீள்சுழற்சி பண்ண முடியாது.

1,2,4 வகையான பிளாஸ்டிகள் பாதுகாப்பான தெரிவாக இருந்தாலும் பிளாஸ்டிக் பாவனையை குறைப்பது நல்லது. இதன் கோட்(code) களை புரிந்து  தெரிவு செய்துகொளங்கள். எவ்வளவுதான் நீங்கள் தெரிவு செய்து வாங்கினாலும் சூடு, குளிர் போன்ற காரணிகள் பிளாஸ்டிக்கில் தாக்கம் செலுத்துவதால் அதை தவிர்த்து வேறு ஊடகத்திற்கு மாறுவதே சிறந்தது.

No comments:

Post a Comment

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா??

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா வடிகட்டி-உணணும் திமிங்கலங்கள் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டை உட்கொள்கின்றன, ஒரு...