உலகின் பயங்கரமான பாலங்கள் world dangerous bridges


பாலங்கள் என்பது அக்காலம் முதல் இக்காலம் வரை மனிதர்களால் நீர் நிலைகளையோ பள்ளங்களையோ கடக்க உபயோகப்படுத்தப்படுகிறது. தென்னை மரக் கட்டை மரத்தின் தடித்த தண்டு பகுதிகளில் பாலம் கட்ட தொடங்கி தற்போது கட்டிடக்கலை வளர வளர பாலங்களின் தன்மைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டது. தற்காலத்தில் உபயோகமாகும் பாலங்களில் ஆபத்தான பாலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Millau viaduet, France

உலகின் மிக உயர்ந்த பாலமாக கருதப்படுகிறது. இது அந்நாட்டின் ஈபிள் டவரை விட உயரமானது. அண்ணா நாட்டின் முக்கியமான A7F வாகன வீதியாக உள்ளது. இதன் கட்டிடக் கலையின் அழகு தனி ரசனை உடையதாகும். மேகத்தில் மிதப்பது போன்ற தோற்றம் கொண்ட இது அழகானது போலவே ஆபத்தானதும் கூட...

Langkawi Sky Bridge, Kedar ,Malaysia

2004 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலம் ஒரு பாதசாரிகள் பாலமாகும். கடல் மட்டத்தில் இருந்து 700 மீட்டர் உயரமான இந்த பாலம் தற்போது பாவனைக்கு இல்லாமல் மூடப்பட்டது துக்கமான செய்தியே..

Canopy walk ,Ghana

இந்தப் பாலம் கக்கும் தேசிய பூங்காவில் அமைந்துள்ளது. இதுவே ஆப்பிரிக்கக் காட்டு பகுதியில் அமைந்துள்ள ஒரே நடைபாதை ஆகும். இது பல மர உச்சிகளை இணைத்து கட்டப்பட்டுள்ளதால் பயங்கரமான மிருகங்களையும் காட்டு யானைகளையும் டயானா குரங்குகளையும் இங்கிருந்து கண்டு ரசிக்கலாம்.

Trift Bridge, Switzerland

இந்தப் பாலம் சுவிட்சர்லாந்தின் கட்மன் மலைத்தொடரில் அமைந்துள்ளது (Alps of gadman). இந்தப் பாலம் 180 மீட்டர் நீளமானது 110 மீட்டர் உயரமானது.

Royal gorge Bridge, Colorado, USA

இந்தப் பாலம் 1929 இல் கட்டப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் மனம் கவர்ந்த இந்த பாலம் 2001 வரை உலகின் உயர்ந்த பாலமாக இருந்து வந்தது. இதற்குக் கீழே உள்ள பூங்காவையும் மிருகக்காட்சிசலையையும் கண்டுகளிக்கலாம். மக்கள் நெரிசல் மிகுந்த இடமாக இருந்த இந்த பாலம் 2013 காட்டுத் தீயில் பெருமளவு பாதிக்கப்பட்டது. பின் 2014இல் புனர்நிர்மானம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Capilano suspension bridge, Canada

இந்த கேப்பில் ஆனோ பாலம் வடக்கு வன்கூவரில் கொலம்பியாவில் அமைந்துள்ளது. இந்தப் பாலம் 450 அடி நீளமானது. 230 அடி உயரமானது. மயிர்க்கூச்செறியும் இந்த தொங்குபாலமானது உலகின் மிக ஆபத்தானதாக கருதப்படுகிறது.

Ghasa , Nepal

காசா என்ற படுபயங்கரமான இந்த பாலம் கஸ் என்ற கிராமத்தில் நேபாளத்தில் அமைந்துள்ளது மிகவும் மோசமாக கட்டப்பட்ட இந்த பாலம் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. இது மனித பாவனைக்கு மட்டுமன்றி கால்நடைகள் போக்குவரத்திற்கும் பயன்படுகிறது.

Marian bruke, Germany

மற்றுமொரு அதிபயங்கரமான இந்தப் பாலம் ஜெர்மனியில் அமைந்துள்ளது. இரண்டு மலைகளின் உச்சிகளில் இணைப்பது போன்று அமைந்துள்ள இந்த பாலம் பவேரியன் மலைத்தொடர் அருகே கட்டப்பட்டுள்ளது.

Deception pass Bridge, Washington

இந்தப் பாலம் டிசெப்ஷன் நகர பூங்கா வாஷிங்டனில் அமைந்துள்ளது. இது 1486 அடி நீளமாகவும் 180 அடி நீர் நிலையிலிருந்து உயரமாகவும் உள்ளது. இந்த ஆபத்தான பாலத்தை உபயோகிக்கும் போது மயிர்க்கூச்செரிவது நிச்சயமே..

Zhangjiaji glass Bridge, China

இது சீனாவின் வுலிங்குயான் என்ற இடத்தில் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முற்றிலும் ஒளி ஊடறுக்கும் கண்ணாடியினால் இந்தப் பாலத்தின் கீழ் பகுதி கட்டப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் 20,2016 ல் கட்டப்பட்டுள்ளது. 430 மீட்டர் நீளமாகவும் 6 மீட்டர் அகலமாகவும் 260 மீட்டர் நிலத்திலிருந்து உயரமாகவும் இந்தப் பாலம் உள்ளது. இந்தப் பாலம் சங்ஜியாஜி என்ற தேசிய பூங்காவை ஊடறுத்து ஹூனான் என்ற மாகாணத்தில் கட்டப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 800 பேரை தாங்கக்கூடியது.

இந்தப் பாலத்தின் நடக்கும்போது மக்கள் சிலர் பயந்து மயிர்க்கூச்செறியும் விதமாக நடந்து கொண்டதை பல youtube வீடியோக்களில் வைரலாக பரவியதை காணலாம்.

No comments:

Post a Comment

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா??

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா வடிகட்டி-உணணும் திமிங்கலங்கள் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டை உட்கொள்கின்றன, ஒரு...