நீண்ட நாட்களுக்கு ஒரு முறை பூக்கும் பூக்கள்
பிரம்ம கமலம்
இது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் ஒரு வகை பூ. அதுவும் இரவில் மட்டுமே பூத்து ஒரே நாளில் வாடிவிடும். அப்படி பூக்கும் போது சில மீட்டர் தூரத்திற்கு இதன் வாசனை வீசும். இதன் நறுமணமும் மிக வித்தியாசமானது. பூத்து நாலு மணி நேரத்தில் உதிர்ந்துவிடும்.
குயின் ஆப் தெயான்டீஸ்
காட்டுப்பூச் செடியான இந்த மலர் நூறாண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் வகையாகும். பனை மர வடிவில் 30 அடி வரை நீண்டு உயர்ந்து செல்லும் இதன் மரமானது நடுப்பகுதியில் கற்றாழை போல் தோன்றும் இதன் செதில்களில் இருந்து வெளிவரும் தாழைகள் நீண்ட மட்டை போல காணப்படும். இந்த மரங்களில் ஒரே சமயத்தில் 30 ஆயிரம் பூக்கள் பூக்கும். ஒருமுறை பூத்து விட்டு மரமே அழிந்துவிடும்.
குறிஞ்சி மலர்
2 முதல் 3 அடி வரை வளரக்கூடிய செடிகளில் நீல நிறத்தில் பூ பூப்பவை குறிஞ்சி மலர்கள் ஆகும். இதன் சிறப்பம்சம் என்னவெனில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே பூக்கும். இதில் 32 வகைகள் உள்ளன. கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரம் தாண்டி வளரக்கூடியது. ஆகஸ்ட் -நவம்பர் காலத்தில் பூக்கக்கூடிய இந்த தாவரம் உடனே தேனீக்களால் ஆற்கொள்ளப்படுகின்றன. பல மருத்துவப் பயன்களைக் கொண்டது.
அழகிய ஆபத்தான விஷ பூக்கள்
கெஸ்டர் பூக்கள்
ஆமணக்கு எண்ணெய் செய்யப்படும் இந்த செடியில் சிவப்பு நிறத்தில் பூக்கள் பூத்திருக்கும். பூக்கள் விஷத்தன்மை கொண்டது. இதன் விதைகளை சாப்பிட்டால் மரணம் நேரிட வாய்ப்புண்டு. கின்னஸ் புத்தகத்தில் அதிக விஷமுடைய பூவென பதியப்பட்டுள்ளது. இந்தியாவின் இது பரவலாகக் காணப்படுகிறது.
ஏன்ஜல் ட்ரம்பட்
இந்தப் பூவின் அமைப்பு ட் ரம்பட் இசைக்கருவி போன்று காணப்படுகிறதால்இப் பெயரைப் பெற்றுள்ளது. தென்னமெரிக்கக் காடுகளில் அதிகமாக காணப்படுகிறது. கொடிய விஷத்தன்மை கொண்ட இந்த பூக்களை பயன்படுத்தினால் இதன் விஷம் காரணமாக உளவியல் ரீதியாக பாதிப்புகள் ஏற்படும்.
சங்குனேரியா கனாடெனிஸிஸ்
பெயரளவில் சங்கு வைத்திருக்கும் இந்த செடி மனிதனுக்கு உண்மையில் சங்கு ஊதும் அளவுக்கு விஷத்தன்மை கொண்டது. இப்பூக்கள் தோலில் உள்ள செல்களை தாக்கி அழித்து விடக்கூடியது. கர்ப்பிணிப் பெண்கள் இதனை முகர்ந்தால்
தாய்மை நிலை பாதிக்கப்படும். கரு கலையும் வாய்ப்புண்டு.
மிகப்பெரிய பூ
உலகின் மிகப் பெரிய பூ ரவலேசியா ஆனல்ட் ஆகும். இந்த அரியவகை பூ இந்தோனேஷியாவின் இறைவனே காடுகளில் உள்ளது. தனி பூவாகவே வளரும் இந்தச் செடி 3 அடி உயரமும் 15 பவுண்ட் பாரமும் கொண்டது. இது மலர்ந்தவுடன் நறுமணம் வீசும் அதற்கு பதிலாக அழகிய இறைச்சியின் துர்மணம் வீசுகிறது. ஏனெனில் இரைகளை கவர்ந்திழுத்து மகரந்த சேர்க்கை நடத்தவே..
உலகின் மிகவும் துர்நாற்றம் கொண்ட பூ
டைட்டன் ஆரம் என்ற பெயர்கொண்ட இந்த பூ உலகின் மற்றும் ஒரு பெரிய வகை பூவாகும். எனினும் துர்மணத்தில் முதலிடத்தை பிடிக்க வல்லது. மென்மையான இந்த மலர் பிணம் பூ என்ற பெயரையும் கொண்டது. அரிதான இந்த வகை பூவின் வாசம் அழுகிய சதையினை ஒத்ததாக உள்ளது. இதன் உயரம் கிட்டத்தட்ட 10 அடிகளாகும். இதன் அழுகிய வாசனை பூச்சிகளையும் ஈக்களையும் மகரந்த சேர்க்கைக்காக ஈர்ப்பதாக உள்ளது. இது மேற்கு இந்தோனேஷியாவின் மழை காடுகளில் காணப்படுகிறது.
No comments:
Post a Comment