பானங்கள் என்பது மனிதன் தன் தாகத்தை நிறைவேற்றிக் கொள்ளவும் உற்சாகமாக இருப்பதற்கும் பயன்படுத்தி கொள்வதாகும். சூடான சூழலை சமாளிக்க குளிர்பானங்களும் குளிரான சூழ்நிலைகளை சமாளிக்க சூடுபறக்கும் பானங்களும் எமக்கு உதவி புரிகின்றன. நீங்களும் நானும் இன்றும் ஏதாவது ஒரு பானத்தை பயன்படுத்தி இருப்போம். அந்த அளவுக்கு அனைவரின் வாழ்க்கையிலும் இது இடம் பிடிக்கிறது. உலகில் அதிக அளவாக மனிதர்கள் பாவிக்கும்ள் பானங்கள் எவை என்று தெரியுமா?
1. நீர்
நீரின்றி உயிரோ உடலோ உயிரினங்களோ அமையாது. மனிதன் விரும்பியோ விரும்பாமலோ உலகில் அதிகளவு பயன்படுத்தப்படும் குடிபானங்களில் நீர் முதலிடம் பெறுகிறது. உணவின்றி சிறிது காலம் வாழ்ந்தாலும் நீர் இன்றி யாரும் வாழ முடியாது. மனித உடலுக்குத் தேவையான கனியுப்புகள் நீர் மூலம் கிடைக்கப் பெறுகின்றன.
2. தேநீர்
உலகில் அதிகம் விரும்பி அருந்தும் பானங்களில் தேனீர் முதலிடம் பெறுகிறது. தனித்துவமான வாசனை கலந்த இந்த பானம் தேயிலையின் மேல் சுடு நீர் ஊற்றுவது மூலம் பெறப்படுகிறது. தேநீரில் பல வகைகள் உண்டு. டார்ஜிலிங் மற்றும் சைனா கிரீன் டீ ஆகியன சிறிது கசப்பு கலந்த சுவையில் அதிகம் விரும்பப்படும் தேநீர் வகைகள் ஆகும்.
3. கோப்பி
தேனீருக்கு அடுத்ததாக மக்களால் அதிகம் விரும்பப்படும் பானம் காபி ஆகும். காபி மரத்தின் விதைகளை பதமாக வறுத்து அதைத் திரிப்பது மூலம் பெறப்படுகிறது. இது 85 வீதம் பெரியவர்களை அருந்துகின்றனர். குளிர் தாங்கும் சக்தி இதற்கு அதிகம். மருத்துவ குணங்கள் கொண்டது. nescafe என்ற கோப்பி வகை மிகப் பிரபலமானது.
4. சூப்
சூப் என்பது மரக்கறிகள் கோழி அல்லது இறைச்சிகளை நீரில் போட்டு பதமாக வேக வைப்பது கிடைக்கப்பெறுகிறது. சிக்கன் சூப், மட்டன் சூப், பீப் சூப், டொமேட்டோ சூப், வெஜ் சூப், ஸ்வீட் கார்ன் சூப், டொம் யம் சூப் என ஏராளமான வகைகளில் இது கிடைக்கப்பெறுகிறது. அதிகம் வெயிட்டை சமாளிக்க மக்கள் சிறிது சாப்பாட்டுடன் சூப்பை விரும்பி அருந்துகின்றனர்.
5. எனர்ஜி ட்ரிங்க்
அதிகளவான மக்களால் உடனடி சக்திக்காக இந்த பானம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதில் அதிகளவான சைக்கோவேடிவ் வேதிப்பொருட்கள் அதாவது காப்ஃபைன் போன்றவைகள் அடங்கியுள்ளன. எனவே இதன் மூலம் சிறிய energy boost பண்ண படுவதாக நம்பப்படுகிறது. பெருமளவாக உடலுக்கு கெடுதல் என பேசப்படுகிறது. இதில் காபனேற்றப்பட்ட நீர், சர்க்கரை மற்றும் செயற்கையான வாசனைப் பொருட்கள் அடங்கியுள்ளன.
6. கொக்கா கோலா
நூற்றுக்கணக்கான வெளியீடுகளை கொக்கா கோலா நிறுவனம் உற்பத்தி செய்கிறது. பழரசங்கள் மென்பானங்கள் மற்றும் வேறு பல பானங்கள் இதில் உள்ளடங்குகின்றது. இது carbon ஏற்றம் செய்யப்பட்ட ஒருவகை பானம். இது கடைகள் உணவகங்கள் மற்றும் தானியங்கி இயந்திரங்கள் மூலம் உலகில் ஒரு நாளைக்கு 1.9 பில்லியன் ரூபாய்களுக்கு விற்பனை ஆகிறது. அண்மையில் கொக்ககோலாவின் ஆல்கஹால் கலந்ததாக சர்ச்சை எழுப்பப்பட்டது நீங்கள் அறிந்ததே..
7. பால்
அமெரிக்காவில் மாத்திரம் ஒரு வருடத்திற்கு சராசரியாக 20.2 Gallon பால் நுகரப்படுகிறது. சோடாவிற்கு பதிலாக பால் பரிந்துரை செய்யப்படுகிறது பாடசாலை மாணவர்களுக்கு சமச்சீரான ஊட்டச்சத்து வழங்குவதில் இது முக்கிய இடம் பிடிக்கிறது. மேலும் பாலில் புரோட்டீன் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.
8. ஆரஞ்சு ஜூஸ்
ஆரஞ்சு ஜூஸ் ஆரஞ்சு பழங்களை பிழிந்து நீர் சேர்த்து செய்யப்படுகிறது. செயற்கையான ஆரஞ்சு பானங்களைவிட இயற்கையான ஆரஞ்சு பானத்தையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். விட்டமின் சி எல் அதிகமாக இருக்கும் இந்த பானத்தை மில்லியன்ள் காலன்கள் மக்கள் பயன்படுத்துகின்றனர். இது விட்டமின் சீ சிறந்ததாக அவர்களால் கருதப்படுகிறது.
9. எலுமிச்சை பானம்
மற்றுமொரு விட்டமின் சி அதிகமாக கொண்டது இந்த பானம். அனைத்து தர மக்களும் மிக விரும்பி அருந்தும் பானமாக இது கருதப்படுகிறது. ஆசிய நாடுகளில் அதிகமாக உலக காலநிலை உள்ள பகுதிகளில் தாகம் தீர்ப்பதற்காக இது பயன்படுத்தப்படுகிறது.
10.லெஸி
இந்திய பான வகைகளில் ஒன்றாக கருதப்படும் இது உடம்பை குளிர்மையாக வைக்க பயன்படுத்தப்படுகிறது. காரமான சாப்பாட்டுக்குப் பிறகு தயிர் அல்லது யோகட்டினால் செய்யப்படும் இது சீரகம் மற்றும் கொத்தமல்லி பயன்படுத்தி காரை சுவையிலும் ரோஸ் வாட்டர் மற்றும் சர்க்கரை பயன்படுத்தி இனிப்பு சுவை யிலும் உட்கொள்ளப்படுகிறது.
11. மில்க் ஷேக்
பாலில் பல சுவையூட்டி மற்றும் இனிப்பு பழரசங்கள் சேர்த்து செய்யப்படுகிறது. இந்திய மற்றும் ஆசிய நாடுகளில் மிகவும் பிரபல்யமாக உணவகங்களில் பரிமாறப்படுகிறது. பலவகையான பல ரசங்களின் சுவைகளில் இது கிடைக்கக்கூடியது. அனைத்து தரப்பினராலும் விரும்பி குடிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment