யாருக்குத்தான் உலகின் செல்வந்தர்களாக ஆசை இருக்காது? அல்லும் பகலும் அயராது உழைப்பினும் நமது நாட்டின் பொருளாதாரமும் செல்வத்தை திரட்டுவதில் செல்வாக்குச் செலுத்துகின்றது. உலகின் கனிய எண்ணெய் பொருளாதாரத்தை முதல் இடமாக கொண்ட நாடுகள் செல்வத்தில் உயர்ந்து இருக்கிறார்கள்அபாரமாக..
உலகின் பணக்கார நாடுகள் பற்றிய பட்டியலைப் பார்ப்போமா?
தனிநபர் வருமானத்தை வைத்து இது அளவிடப்பட்டுள்ளது. இதுIMF (international money funds October-2017) சர்வதேச நாணய நிதியத்தினால் தரவரிசை படுத்தப்பட்டுள்ளது.
15. ஐஸ்லாந்து ($52,150)
சுற்றுலாத்துறயும் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு துறையும் இதன் நாணய மதிப்பில் செல்வாக்கு செலுத்துகின்றது. சுற்றுலாத்துறை இந்நாட்டில் எல்லையில்லாமல் வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
14. நெதர்லாந்து ($53,580)
2016 பொருளாதார கொள்கைகளுக்கு பிறகு நெதர்லாந்து அரசாங்கத்தின் பொருளாதாரம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாக IMF தெரிவிக்கின்றது. நெதர்லாந்து, சுரூபா,கூரா, மற்றும் சென்ட் மார்டின் போன்ற தீவுகள் சேர்ந்த நெதர்லாந்து அரசாங்கத்தின் மக்கள் தொகை 17 மில்லியன் மட்டுமே..
13. சவுதி அரேபியா ($55,260)
கனிம எண்ணெய் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளது. கனிமவள எண்ணெய் தவிர்ந்த மற்ற துறைகளிலும் நாடு பொருளாதார ரீதியாக முன்னேறி வருகிறது." Vision 2030" என்ற திட்டத்தின் மூலம் கனிமவளம் சாராத ஏனைய துறைகளிலும் முன்னேற்றம் காணும் திட்டத்தில் நாடு முன்னோக்கி செல்கிறது.
12. அமெரிக்கா (59,500)
1850ம் ஆண்டு செய்யப்பட்ட பொருளாதாரக் கொள்கை காரணமாக 325 மில்லியன் மக்களின் பொருளாதார இருப்பிடமாக அமெரிக்கா இருக்கின்றது என IMF குறிப்பிடுகிறது . 2016 ன் அதன் அறிக்கையின் படி வேலையற்றவர்களின் வீதம் குறைந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
11. சென் மெரினோ ($60,360)
வேலைவாய்ப்பு வீதங்கள் அதிகரிப்பு மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு உதவிகளாலும் இதன் மொத்த உற்பத்திகள் அதிகரித்துள்ளதாலும் பொருளாதாரம் சிறந்த முன்னேற்றம் கண்டுள்ளது.
10. ஹாங்காங் ($61,020)
ஹாங்காங்கின் வளர்ச்சி 2016 ஆம் ஆண்டில் குறைந்துள்ளதாக IMF தெரிவித்து இருப்பினும் அது உலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் உள்ளது. உலக வர்த்தகத்திலும் சுற்றுலா துறையிலும் அதன் வளர்ச்சி குறைவை சந்தித்துள்ள போதும் 2017 ல் அது மீண்டும் வளர்ச்சி பெற்றுள்ளது. இந்த நாட்டின் மக்கள் தொகை 7 மில்லியன் ஆகும்.
9. சுவிஸ்லாந்து ($61,360)
இந்த நாட்டில் 8 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர். இதன் மத்திய வங்கி 2015ஆம் ஆண்டு$52 பில்லியன் நஷ்டம் அடைந்தது. 2016ஆம் ஆண்டில் சுவிஸின் வளர்ச்சி 1 1/2% என IMF அறிக்கை வெளியிட்டுள்ளது. அங்க நாடு மேலும் பல பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை கொண்டுள்ளது.
8. ஐக்கிய அரபு இராச்சியம்(U.A.E.)($68,250)
இது உலகின் பணக்கார நாடுகளில் உள்ள தாகும். இதன் பொருளாதாரம் எண்ணெய் வளத்தில் உயர்வதாகIMF குறிப்பிடுகிறது. 2016 இல் எண்ணெய் விலை குறைவு இதன் பொருளாதாரத்தை பாதித்திருந்தாலும் தற்போது அது சீரடைந்து வருகிறது. இன் நாட்டின் மக்கள் தொகை பத்து மில்லியன் ஆகும்.
7. குவைத் ($69,670)
இந்த நாட்டின் மக்கள் தொகை நாலு மில்லியன்களாகும். இதன் பொருளாதாரமும் கனிய எண்ணெய் விலை சரிவால் பாதிப்படைந்து இருந்தாலும் என்னை சாராத பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும் என்னை சாராத பொருளாதாரத்தில் முன்னேறவே நாடு திட்டமிட்டுள்ளது.
6. நோர்வே ($70,590)
இந்த நாட்டின் மக்கள் தொகையில் ஐந்து மில்லியனுக்கும் அதிகமாகும். இந்த நாட்டின் பொருளாதாரம் 2008 2009 ஆம் ஆண்டுகளில் அதிக சரிவை சந்தித்தது. அதுவும் குறைந்த மசகு எண்ணெய் விலை தாக்கமும் வேலையில்லா விகிதம் இந்நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.
5. அயர்லாந்து ($72,630)
ஐரோப்பாவின் அதீத வளர்ச்சியை காட்டும் நாடுகளில் ஒன்றாக அயர்லாந்து உள்ளது. அதன் வளர்ச்சி வீதம் top 5 பணக்கார இடங்களுக்கு அதனை தள்ளி உள்ளது. செலவு முதலீடு மற்றும் கட்டுமானம் ஆகிய துறைகளில் அயர்லாந்து மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி எட்டியுள்ளதாக IMF குறிப்பிடுகிறது.
4. புருனை ($76,740)
இந்த நாடு 2016 ஆம் ஆண்டு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எதிர்பாராத அளவு எட்டியுள்ளது. மசகு எண்ணெய் மற்றும் எரிவாயுவில் இதன் பொருளாதாரம் 90% தங்கி உள்ள போதிலும் அதன் விலைகள் சரிவடைந்த போதும் சரிவர சமாளித்து இந்த நாடு முன்னேற்றம் கண்டது. இதன் மக்கள்தொகை 400,000 ஆகும்.
3. சிங்கப்பூர் ($90,530)
உலகின் மூன்றாவது இடத்தில் உள்ள பணக்கார நாடுகளில் ஒன்றான சிங்கப்பூர் 2.7% பொருளாதார வளர்ச்சியை 2017 காலாண்டுகளில் எட்டியுள்ளது. நகரமயமான இந்த நாட்டின் மக்கள் தொகை 5.6 மில்லியன்களாகும். கடந்த வருடத்தில் மின்சாதன பொருட்கள் ஏற்றுமதியில் இதன் பொருளாதாரம் வளர்ச்சி கண்டுள்ளது. எனினும் அதன் வளர்ச்சி முக்கியமாக நிபுணத்துவம் சார்ந்த துறைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என IMF குறிப்பிட்டுள்ளது.
2. லக்ஸம்பேர்க்($109,190)
லக்சம்பர்க் உலகின் 2வதுபணக்கார நாட்டின் பட்டியலை பிடித்துள்ளது. இதன் மக்கள்தொகை 600,000 ஆகும். நாடு வலுவான தொழிலாளர் சக்தியை கொண்டுள்ளது. மற்றும் அதன் 2016 ஆம் ஆண்டின் வளர்ச்சி ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை விட அதிகமாகும். எனினும்IMF ன் Brexit இலிருந்து மாறும் நிலப்பரப்பை மாற்றுதல் மற்றும் U.Sக்கு வரும் கொள்கை மாற்றங்களினால் சந்தை உறுதியற்ற தன்மையை உருவாக்க முடியும் எனக் குறிப்பிடுகிறது.
1. கத்தார் ($124,930)
உலகின் மத்திய கிழக்கின் சிறிய நாடுகளில் ஒன்றான கட்டார் உலகின் பணக்கார நாடுகளில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதன் மக்கள்தொகை 2.27 மில்லியன்களாகும். கத்தாருக்கு ஒரு முக்கிய வருவாயாக உள்ள hydrocarbon (எரிபொருளுக்கு பயன்படுத்தப்படும்) குறைவடைந்த போதிலும் அந்த சவால்களுக்கு முகம் கொடுத்து வெற்றியடைந்துள்ளது. கத்தார் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2017 இன்னும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2017 இன்னும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment