மனிதன் தனது தொழில்நுட்பத்தை பாவித்து இருப்பதை அழிக்கிறான். இல்லாததை உருவாக்குகிறான். இதற்கு நன்மை தீமை போன்று இறு பக்கங்கள் இருப்பினும் தொழில்நுட்ப வளர்ச்சி எல்லையில்லாமல் வளர்ந்து கொண்டே போகிறது என்பது மட்டும் நிச்சயம். கருவில் குழந்தையின் தன்மையை அறிகிறான். அதுபோலவே வானவெளியில் கோள்களைப் பற்றி ஆராய்கிறான். அணுகுண்டையும் கண்டுபிடிக்கிறான். அளவிலா இன்பம் தரும் களியாட்ட பூங்காக்களையும் உருவாக்குகிறான்(theme parks). இதுபோன்று ஜப்பான் நாட்டில் உருவாக்கப்பட்ட ஒரு ஒளி சொர்க்கம் பற்றி தெரியுமா?
இது டிஜிட்டல் ஆர்ட் மியூசியம் என அழைக்கப்படுகிறது(full name-Mori building digital Art Museum teamlab borderless). இது டோக்கியோவில் உள்ள ஒடைபா என்ற நகரில் அமைந்துள்ளது.
ஆக்கப்பூர்வ கலைத் திறமை மிக்க 400 ஜப்பனீஸ் தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த அருங்காட்சியகம். இது கிட்டத்தட்ட பத்தாயிரம் சதுர மீட்டர் (107,639 சதுர அடி) கொண்ட மனிதனால் உருவாக்கப்பட்ட டோக்கியோ விரிகுடாவில் பெலட் டவுன் (pallet town) ல் அமைந்துள்ளது.
இது கலை ஆர்வம் கொண்டவர்களை நிச்சயமாக கவர்ந்திழுக்கும் வகையிலும் திகைப்பூட்டும் சூழலில் செல்பி எடுப்பவர்களுக்கு கலைத் தீனியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
இதன் சிறப்பம்சம் என்னவெனில் டிஜிட்டல் ஒளியில் சில இயற்கை காட்சிகள், பூந்தோட்ட காட்சிகள், நீர் அருவி காட்சிகள், செயற்கையாக உருவாக்கப்பட்ட வண்ணமயமான காட்சிகளை தொழில்நுட்பம் மூலம் உருவாக்கி அதில் நன்மை நடக்க வைத்து அனுபவிக்க வைப்பதுதான். உண்மையிலே இதனை அனுபவிக்க எத்தனை கோடி கொடுத்தாலும் தகுமே..
இந்த இடம் கண்டுபிடிக்க மூலகாரணமாக இருந்தவர் Toshiyuki Inoko என்ற கணித பொறியியலாளராவார். இவர் மட்டுமன்றி கலை நிபுணர்கள், கணனி வடிவமைப்பாளர்கள், அனிமேட்டர்கள், பொறியியலாளர்கள் போன்ற பலர் சேர்ந்து கூட்டுமுயற்சியில் உருவாகியுள்ளது. இதன் முழு அழகு கீழ்காணும் வீடியோவில் கண்டு ரசிக்கலாம்.
No comments:
Post a Comment