உலகின் மிக உயர்ந்த கட்டிடங்கள் world tallest buildings


உலகின் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சில தனிப்பட்ட சிறப்பம்சங்கள் உண்டு. அதை நிரூபிப்பதற்கும் பல நாடுகள் போட்டி போடுகின்றனர். ஏனெனில் அவர்களின் சுற்றுலா துறையும் பொருளாதார முன்னேற்றங்களும் அதைப் பொறுத்தே உள்ளன. உலகின் சில நாட்டு கட்டிடங்கள் இதற்கு உதாரணமாகும். இதைப் பார்க்கவே பல சுற்றுலா பயணிகள் அந்தந்த இடங்களுக்கு விஜயம் செய்வதுண்டு. நாமும் அந்தக் கட்டிடங்கள் என்னவென்று பார்ப்போமா?

புரூஜ் கலீபா-Burj Khalifa

இது ஐக்கிய அரபு ராச்சியத்தில் துபாய் நகரில் அமைந்துள்ளது. இதன் உயரம் 828 மீட்டர் அல்லது 2,717 அடி ஆகும். மிகவும் மெல்லிய உயரமான இந்த கட்டிடம் 2010 ஜனவரி 4ம் திகதி கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது இதில் 163 மாடிகள் உள்ளன. இதைச் செய்து முடிக்க ஆன செலவு அமெரிக்கா டாலர்$1.5 பில்லியன் ஆகும்.

ஷாங்காய் டவர்- Shanghai Tower

இந்தக் கட்டிடம் சீன நாட்டின் ஷாங்காய் நகரத்தில் அமைந்துள்ளது. இதன் உயரம் 632 மீட்டர் அல்லது 2073 அடி ஆகும். 128 மாடிகள் கொண்ட இந்த கட்டிடம் 2015 இல் திறக்கப்பட்டது. இதனை நிர்மாணிக்க செய்யப்பட்ட செலவு 15 .7 பில்லியன் சீன யுவான்கள் ஆகும்.


அப்ராஜ் அல் பைத் -abraj Al bait

இந்தக் கட்டிடம் மக்காவில் அமைந்துள்ள ஒரு மணிக்கூட்டு கோபுரம் ஆகும். இது சவுதி அரேபியா நாட்டில் அமைந்துள்ளது. இதன் உயரம் 601m அல்லது 1971அடி ஆகும். இந்தக் கட்டிடத்தில் 120 மாடிகள் உள்ளன. இந்தக் கட்டிடம் 2012ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதை நிர்மாணம் செய்வதற்கான செலவு 115 பில்லியன்அமெரிக்க டொலர்களாகும்.

பிங் அன் பினான்ஸ் சென்டர்- ping an Finance Centre

இது சீன நாட்டில் ஷென்சென்ஸ் நகரில் அமைந்துள்ளது. இதன் உயரம் 599 மீட்டர் அல்லது 1965 அடிகள் ஆகும். 115 மாடிகள் கொண்ட இந்த கட்டிடம் 2017ம் கட்டிமுடிக்கப்பட்டது. இதை கட்டுவதற்கான செலவு அமெரிக்கா டாலர் 1.5 பில்லியன் ஆகும்.

லோட்டே வேர்ல்ட் டவர்-Lotte World Tower

இது தென் கொரியா நாட்டில் அமைந்துள்ள சியோல் நகரத்தில் உள்ளது. இதன் உயரம் 554 .5மீட்டர் அல்லது 1819 அடி ஆகும். இதில் 123 மாடிகள் அமைந்துள்ளன 2016ல் கட்டிமுடிக்கப்பட்டது.


வன் வேல்ர்ட் டிரேட் சென்டர்-One World Trade Centre


இது அமெரிக்க நாட்டின் நியூயோர்க் நகரத்தில் அமைந்துள்ளது. இதன் உயரம் 541.3 மீட்டர் அல்லது 1776 அடிகளாகும். இதில் 104 மாடிகள் உள்ளன. 2014ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த கட்டிடத்தின் நிர்மான செலவு 3.9 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.

குவாங்சவ் சீ.டீ.எப். பினான்ஸ்-Guangzhou ctf Finance

இந்தக் கட்டிடம் சீன நாட்டின் குவாங்சவ் மாநிலத்தில் அமைந்துள்ளது. இதன் உயரம் 530 மீட்டர் அல்லது 1 739 அடிகளாகும். இந்தக் கட்டிடம் 2016ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதில் 111 மாடிகள் உள்ளன.

டியாங்ஜின் சீ.டீ.எப். பினான்ஸ்-tianjin ctf Finance Centre



இது சீன நாட்டில் தியான்ஜின் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் உயரம் 530 மீட்டர் அல்லது 1739 அடிகளாகும். இந்தக் கட்டிடம் மேலே கூறப்பட்ட கட்டிடமும் ஒரே உயரம் ஆகும். இதில் 98 மாடிகள் உள்ளன. இந்த கட்டிடம் 2018 லேயே கட்டி முடிக்கப்பட்டது.

சீனா சுங்-China zun

இது சீன நாட்டின் பீஜிங் நகரில் அமைந்துள்ளது. இதன் உயரம் 528 மீட்டர் அல்லது1 732 அடிகளாகும். 108 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடம் 2018 இல் கட்டி முடிக்கப்பட்டது.

தாய் பே -101(பினான்ஸ் சென்டர்)
Taipei 101(Finance Centre)

இந்தக் கட்டிடம் தாய்வான் நாட்டின் தாய்பெய் நகரத்தில் அமைந்துள்ளது. இந்தக் கட்டிடம் 508 மீட்டர் உயரம் அல்லது1 667 அடிகள் ஆகும். 101 மாடிகள் கொண்ட இந்த கட்டிடம் 2004ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தக் கட்டிடம் நிர்மாணிக்க செய்யப்பட்ட செலவு 58 பில்லியன் புதிய தாய்வான் டாலர்களாகும். இது கிட்டத்தட்ட 1.934 அமெரிக்க டாலர்கள் ஆகும்.
உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிபா அறிவிக்கப்பட முன் இந்த கட்டிடமே உலகின் மிக உயர்ந்த கட்டிடமாக இருந்தது.


No comments:

Post a Comment

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா??

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா வடிகட்டி-உணணும் திமிங்கலங்கள் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டை உட்கொள்கின்றன, ஒரு...