உலகின் அதிகம் சம்பளம் கிடைக்கும் தொழில்கள் high paid jobs in the world..


மனிதன் ஒருவன் உலகில் வாழ்வது என்றால் கட்டாயம் பணம் தேவை. பணத்தை தேட ஏதாவது ஒரு தொழில் தேவை. நாம் அன்றாடம் ஏதாவது தொழில் செய்து கொண்டே இருக்கிறோம். வரும் வருமானம் வாழ்க்கையை நடத்தவே சரியாக உள்ளது. இல்லை போதுமானதாக இல்லை. சிலருக்கு அளவுக்கு மிஞ்சி உள்ளது.
எனினும் கல்வி சொத்தை தொழிலாகக் கொண்டவர்களுக்கே அதிக சம்பளம் கிடைப்பதாகU.S. news மற்றும் 2018 ன் சிறந்த தொழில் உலக அறிக்கை ஆகியன இணைந்து நடத்திய ஒரு ஆய்வில் தெரியவருகிறது.
தற்போது அதிக வருமானம் தரும் தொழில்களாக பொறியியல் (இன்ஜினியரிங்) மற்றும் வியாபாரம் உள்ளதாகவும் 2026 ம் ஆண்டளவில் சுகாதாரத் துறை சார்ந்த தொழில்களால் அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும் என  u.s. news ன் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
உலகின் அதிக சம்பளம் பெறும் தொழில்கள்25 ஐ நாம் தற்போது பார்க்கலாம்.

  1. அறுவை சிகிச்சை மயக்க மருந்து நிபுணர்  (anesthesiologist )வருட வருமானம்-$269,600
  2. அறுவை சிகிச்சை நிபுணர் (surgeon) வருட வருமானம்-$252,910
  3. மகப்பேறு குழந்தை நல மருத்துவர்(obstetrician and gynaecologist) வருட வருமானம்-$234,310
  4. வாய் மற்றும் முக அறுவை சிகிச்சை நிபுணர் (oral and maxillofacial) வருட வருமானம்-$232,870
  5. பல் அமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் (orthodontist) வருட வருமானம்-$228,782
  6. பொதுமருத்துவர் (physician) வருட வருமானம்-$201,840
  7. உளவியல் நிபுணர் (psychiatrist) வருட வருமானம்-$200,220
  8. குழந்தை நல மருத்துவர்(pediatrician) வருட வருமானம்-$184,240
  9. பல் வைத்தியர்(dentist) வருட வருமானம்-$173,860
  10. முக அமைப்பு பல்லமைப்பு சீராக்கும் நிபுணர்(prosthodontist) வருட வருமானம்-$168,140
  11. தாதி மயக்க மருந்து நிபுணர்(nurse anesthetist) வருட வருமானம்-$164,030
  12. பெட்ரோலிய பொறியியலாளர் (petroleum engineer) வருட வருமானம்-$147,030
  13. ஐ.டீ. முகாமையாளர் (IT manager) வருட வருமானம்-$145,740
  14. சந்தை முகாமையாளர் (marketing manager) வருட வருமானம்-$144,140
  15. கால் பாத சிகிச்சை நிபுணர்(podiatrist) வருட வருமானம்-$144,110
  16. வழக்கறிஞர்(lawyer) வருட வருமானம்-$139,880
  17. நிதி முகாமையாளர் (financial manager) வருட வருமானம்-$139,720
  18. விற்பனை முகாமையாளர் (sales manager) வருட வருமானம் -$135,090
  19. நிதி ஆலோசகர்(financial advisor) வருட வருமானம்-$123,100
  20. வியாபார நடவடிக்கை முகாமையாளர் (business operations manager) வருட வருமானம்-$122,090
  21. மருந்து விற்பனையாளர்(pharmacist) வருட வருமானம்-$120,270
  22. கண் சிகிச்சை நிபுணர் (optometrist) வருட வருமானம்-$117,580
  23. முதலீட்டு முகாமைத்துவ நிபுணர்(actuary) வருட வருமானம்-$114,120
  24. அரசியல் விஞ்ஞானி(political scientist) வருட வருமானம்-$112,250
  25. மருத்துவ மற்றும் சுகாதார சேவை முகாமையாளர்(Medical and Health Services manager) வருட வருமானம்-$109,370
வீட்டில் டாக்டர் படிக்கச்்் சொன்னால் படித்துவிடுங்கள். ஏனெனில் top25ல் சுகாதாரம் சார்ந்த தொழில்களே முன்னணியில் உள்ளன.

2 comments:

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா??

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா வடிகட்டி-உணணும் திமிங்கலங்கள் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டை உட்கொள்கின்றன, ஒரு...