நீங்கள் எந்த நிற கண்களை கொண்டவர் ? What is your eye colour?


நாம் அன்றாடம் நம் வாழ்வில் பல நபர்களை சந்தித்து இருப்போம். அவர்களின் கண்கள் ஒவ்வொரு நிறத்தில் இருப்பதை அவதானித்து இருப்போம். குறிப்பிட்ட சில நிறக் கண்கள் அதிர்ஷ்டம் என்று சிலர் குறிப்பிடுவார்கள். இது உண்மையா? நம் கண்களின் நிறம் எவ்வாறு மாறுபடுகிறது?

நம் தோலைப் போலவே கண்களுக்கும் நிறத்தைத் தீர்மானிப்பது நமது மெலனின் தான். கண்ணின் ஐரிஸ் (கருவிழி) என்னும் பகுதி கண்ணின் கோர்னியா என அழைக்கப்படும் வெளிப்புற அடுக்கிற்கு பின்னால் அமைந்துள்ளது. கோர்னியா பல அடுக்குகளை கொண்டது. கடைசி இரண்டு அடுக்குகளும் ஒருசேர முன்புற அல்லது வெளிப்புற எல்லை என அழைக்கப்படுகிறது (anterior border). இந்த அடுக்கில் மெலனோ சைட்டுகள் என்று அழைக்கப்படும் நிறமி உற்பத்தி செல்கள் உள்ளன. எல்லோருக்கும் மெலனோ சைட்டுகள் ஒரே அளவு உள்ளது. எனினும் நமது நிறத்தை தீர்மானிக்கும் மெலனின் எவ்வளவு நிறமிகளை தீர்மானிக்கின்றன என்பதை பொறுத்தே கண்களின் நிறம் அமைகிறது.

இருண்ட அல்லது கருத்த நிறமுடைய வரின் கண்கள் பிரவுன் எனப்படும் கபில நிறத்தை அடைகின்றன. வெளிர் நிறத்தை உடையவர்கள் நீலம் அல்லது பச்சை கண்களுக்கு சொந்தம் ஆகின்றனர்.
நீல நிற கண்கள் எவ்வாறு தோன்றுகின்றன?
நீலநிறக் கண்களின் வெளிப்புற எல்லை வழியாக ஒளி செல்கிறது. கருவிழியின் உள்ள சாம்பல் நிற செல்களுடன
 இந்த ஒளி குறைந்த மெலனின் கொண்ட கண்மணிகளில் பட்டு தெறிக்கும்  போது நீல நிற கண்கள் தோன்றுகின்றன.

No comments:

Post a Comment

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா??

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா வடிகட்டி-உணணும் திமிங்கலங்கள் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டை உட்கொள்கின்றன, ஒரு...