Latest news in tamil தமிழில் சிறந்த அறிவியல்பூர்வமான தகவல்கள்
உலகின் அதிக டேடி பெயர்களை வைத்து இருப்பவர் யார் தெரியுமா? Do you know who have most teddy bears in the world?
டெடி பேர் என்பது சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் ஒரு விளையாட்டு பொருள் ஆகும். சில அதை படுக்கையறையிலும் ஏன் படுக்கையிலும் கூட வைத்து ரசித்து பார்த்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். பெரியவர்களும் கூட குறிப்பாக பல பெண்களைக் கவர்ந்த விளையாட்டுப் பொருள் டெடி பேர் ஆகும். விளையாட்டுப் பொருள் என்று சொல்லுவதை விட செல்ல பிள்ளை என்றே சொல்லலாம்.
வகை வகையான டெடி பேர்கள் உலகில் நிறைய உண்டு. அதை நிறைய சேர்த்து வைத்த ஒரு நபரை பற்றி தற்போது பார்க்கப் போகிறோம்.
அவரின் பெயர்"ஜேக்கி மைலி" ஆகும். பொழுதுபோக்காக போகுமிடமெல்லாம் கண்களில் கண்ட டெடி பியர்களை 2000 ஆண்டு முதல் சேமித்து வருகிறார்.
இவரிடம் மிகச்சிறிய 3/4 இஞ்ச் நீளம் முதல் மிகப்பெரிய 8 அடி உயரமுள்ள டெடி பேரளை சேர்த்துள்ளார். தற்போது அவரிடம் 8025 டெடி பேர்கள் உண்டு. இவர் அமெரிக்காவின் ஹில் சிட்டி டகோட்டாவில் வாழ்ந்து வருகிறார்.
இவரின் முதல் டெடி பேரின் பெயர் 'grandma Jackie' என்பதாகும். தற்போது 8025 டெடி பேர்களுடன் 2018 ல் அதிக டெடி பேர் வைத்திருப்பவர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் டித்துள்ளார்இந்த 68 வயது பாட்டி. அந்த டெடி பேர்களை பார்வைக்காகவும் வைத்துள்ளார்.
இவர் தனது டெடி பேர் கலெக்சன் பற்றி இவ்வாறு கூறுகிறார்.
"நான் சிறு வயதில் இருந்தே டெடிபேரை பார்த்ததுமில்லை கேள்விப்பட்டதுமில்லை. என்னுடைய எட்டு வயதில் மினஸொடா ஸ்டேட் பெயார் (Minnesota state fair) என்ற சந்தையில் முதன் முறையாக கண்டேன்." என்கிறார்.
சிறுவயது ஆசை தான் இவரை இவ்வளவு சேமிக்க வைத்தது போல...
உலகின் மிக உயர்ந்த கட்டிடங்கள் world tallest buildings
உலகின் ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு சில தனிப்பட்ட சிறப்பம்சங்கள் உண்டு. அதை நிரூபிப்பதற்கும் பல நாடுகள் போட்டி போடுகின்றனர். ஏனெனில் அவர்களின் சுற்றுலா துறையும் பொருளாதார முன்னேற்றங்களும் அதைப் பொறுத்தே உள்ளன. உலகின் சில நாட்டு கட்டிடங்கள் இதற்கு உதாரணமாகும். இதைப் பார்க்கவே பல சுற்றுலா பயணிகள் அந்தந்த இடங்களுக்கு விஜயம் செய்வதுண்டு. நாமும் அந்தக் கட்டிடங்கள் என்னவென்று பார்ப்போமா?
புரூஜ் கலீபா-Burj Khalifa
இது ஐக்கிய அரபு ராச்சியத்தில் துபாய் நகரில் அமைந்துள்ளது. இதன் உயரம் 828 மீட்டர் அல்லது 2,717 அடி ஆகும். மிகவும் மெல்லிய உயரமான இந்த கட்டிடம் 2010 ஜனவரி 4ம் திகதி கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்பட்டது இதில் 163 மாடிகள் உள்ளன. இதைச் செய்து முடிக்க ஆன செலவு அமெரிக்கா டாலர்$1.5 பில்லியன் ஆகும்.
ஷாங்காய் டவர்- Shanghai Tower
இந்தக் கட்டிடம் சீன நாட்டின் ஷாங்காய் நகரத்தில் அமைந்துள்ளது. இதன் உயரம் 632 மீட்டர் அல்லது 2073 அடி ஆகும். 128 மாடிகள் கொண்ட இந்த கட்டிடம் 2015 இல் திறக்கப்பட்டது. இதனை நிர்மாணிக்க செய்யப்பட்ட செலவு 15 .7 பில்லியன் சீன யுவான்கள் ஆகும்.
இந்தக் கட்டிடம் மக்காவில் அமைந்துள்ள ஒரு மணிக்கூட்டு கோபுரம் ஆகும். இது சவுதி அரேபியா நாட்டில் அமைந்துள்ளது. இதன் உயரம் 601m அல்லது 1971அடி ஆகும். இந்தக் கட்டிடத்தில் 120 மாடிகள் உள்ளன. இந்தக் கட்டிடம் 2012ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. இதை நிர்மாணம் செய்வதற்கான செலவு 115 பில்லியன்அமெரிக்க டொலர்களாகும்.
பிங் அன் பினான்ஸ் சென்டர்- ping an Finance Centre
இது சீன நாட்டில் ஷென்சென்ஸ் நகரில் அமைந்துள்ளது. இதன் உயரம் 599 மீட்டர் அல்லது 1965 அடிகள் ஆகும். 115 மாடிகள் கொண்ட இந்த கட்டிடம் 2017ம் கட்டிமுடிக்கப்பட்டது. இதை கட்டுவதற்கான செலவு அமெரிக்கா டாலர் 1.5 பில்லியன் ஆகும்.
லோட்டே வேர்ல்ட் டவர்-Lotte World Tower
இது தென் கொரியா நாட்டில் அமைந்துள்ள சியோல் நகரத்தில் உள்ளது. இதன் உயரம் 554 .5மீட்டர் அல்லது 1819 அடி ஆகும். இதில் 123 மாடிகள் அமைந்துள்ளன 2016ல் கட்டிமுடிக்கப்பட்டது.
இது அமெரிக்க நாட்டின் நியூயோர்க் நகரத்தில் அமைந்துள்ளது. இதன் உயரம் 541.3 மீட்டர் அல்லது 1776 அடிகளாகும். இதில் 104 மாடிகள் உள்ளன. 2014ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த கட்டிடத்தின் நிர்மான செலவு 3.9 பில்லியன் அமெரிக்க டாலர் ஆகும்.
குவாங்சவ் சீ.டீ.எப். பினான்ஸ்-Guangzhou ctf Finance
இந்தக் கட்டிடம் சீன நாட்டின் குவாங்சவ் மாநிலத்தில் அமைந்துள்ளது. இதன் உயரம் 530 மீட்டர் அல்லது 1 739 அடிகளாகும். இந்தக் கட்டிடம் 2016ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதில் 111 மாடிகள் உள்ளன.
டியாங்ஜின் சீ.டீ.எப். பினான்ஸ்-tianjin ctf Finance Centre
இது சீன நாட்டில் தியான்ஜின் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் உயரம் 530 மீட்டர் அல்லது 1739 அடிகளாகும். இந்தக் கட்டிடம் மேலே கூறப்பட்ட கட்டிடமும் ஒரே உயரம் ஆகும். இதில் 98 மாடிகள் உள்ளன. இந்த கட்டிடம் 2018 லேயே கட்டி முடிக்கப்பட்டது.
சீனா சுங்-China zun
இது சீன நாட்டின் பீஜிங் நகரில் அமைந்துள்ளது. இதன் உயரம் 528 மீட்டர் அல்லது1 732 அடிகளாகும். 108 மாடிகளைக் கொண்ட இந்த கட்டிடம் 2018 இல் கட்டி முடிக்கப்பட்டது.
தாய் பே -101(பினான்ஸ் சென்டர்)
Taipei 101(Finance Centre)
இந்தக் கட்டிடம் தாய்வான் நாட்டின் தாய்பெய் நகரத்தில் அமைந்துள்ளது. இந்தக் கட்டிடம் 508 மீட்டர் உயரம் அல்லது1 667 அடிகள் ஆகும். 101 மாடிகள் கொண்ட இந்த கட்டிடம் 2004ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தக் கட்டிடம் நிர்மாணிக்க செய்யப்பட்ட செலவு 58 பில்லியன் புதிய தாய்வான் டாலர்களாகும். இது கிட்டத்தட்ட 1.934 அமெரிக்க டாலர்கள் ஆகும்.
உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிபா அறிவிக்கப்பட முன் இந்த கட்டிடமே உலகின் மிக உயர்ந்த கட்டிடமாக இருந்தது.
ATM பயன்படுத்துவோருக்கு FBI கொடுக்கும் அவசர எச்சரிக்கை Red Alert for ATM users from FBI
உலகத்தில் ஏ.டி.எம் பயன்படுத்துவோருக்கு FBI அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. கணக்கு உரிமையாளருக்கு வழங்கப்பட்டுள்ள ATM அட்டைகளைப் போல் போலியான அட்டைகளை பயன்படுத்தி சைபர் தாக்குதல் நடத்தி பணம் திருடும் பாரிய சைபர்கரைம் நடக்க வாய்ப்புள்ளதாக FBI தெரிவித்துள்ளது. நிதி நிறுவனங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்காக ஏடிஎம் அட்டை பயன்படுத்துவோம் அட்டை உரிமையாளரின் விபரங்களையும் வங்கிகளிலிருந்து லாவகமாக திருடுகிறது.
இதன்பின் வார இறுதி சனி ஞாயிறு தினங்களில் வங்கி மூடப்பட்டுள்ளதால் இந்த நாட்களில் சைபர் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக FBI அமைப்பு தெரிவித்துள்ளது. இதனூடாக சிறிய காலத்தில் அதிக பணத்தை அடைவதே இவர்களின் நோக்கமாக உள்ளது.
ஐரோப்பா நாடுகள் உட்பட உலகம் முழுதும் இந்த சைபர் தாக்குதல் நடைபெற வாய்ப்புகள் உள்ளதாக யூகம் வெளியிடப்பட்டுள்ளது.
எனவே ஏடிஎம் பயனாளர்கள் கண்காணிப்போடு இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உலகின் அதிகம் சம்பளம் கிடைக்கும் தொழில்கள் high paid jobs in the world..
மனிதன் ஒருவன் உலகில் வாழ்வது என்றால் கட்டாயம் பணம் தேவை. பணத்தை தேட ஏதாவது ஒரு தொழில் தேவை. நாம் அன்றாடம் ஏதாவது தொழில் செய்து கொண்டே இருக்கிறோம். வரும் வருமானம் வாழ்க்கையை நடத்தவே சரியாக உள்ளது. இல்லை போதுமானதாக இல்லை. சிலருக்கு அளவுக்கு மிஞ்சி உள்ளது.
எனினும் கல்வி சொத்தை தொழிலாகக் கொண்டவர்களுக்கே அதிக சம்பளம் கிடைப்பதாகU.S. news மற்றும் 2018 ன் சிறந்த தொழில் உலக அறிக்கை ஆகியன இணைந்து நடத்திய ஒரு ஆய்வில் தெரியவருகிறது.
தற்போது அதிக வருமானம் தரும் தொழில்களாக பொறியியல் (இன்ஜினியரிங்) மற்றும் வியாபாரம் உள்ளதாகவும் 2026 ம் ஆண்டளவில் சுகாதாரத் துறை சார்ந்த தொழில்களால் அதிக வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும் என u.s. news ன் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
உலகின் அதிக சம்பளம் பெறும் தொழில்கள்25 ஐ நாம் தற்போது பார்க்கலாம்.
- அறுவை சிகிச்சை மயக்க மருந்து நிபுணர் (anesthesiologist )வருட வருமானம்-$269,600
- அறுவை சிகிச்சை நிபுணர் (surgeon) வருட வருமானம்-$252,910
- மகப்பேறு குழந்தை நல மருத்துவர்(obstetrician and gynaecologist) வருட வருமானம்-$234,310
- வாய் மற்றும் முக அறுவை சிகிச்சை நிபுணர் (oral and maxillofacial) வருட வருமானம்-$232,870
- பல் அமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் (orthodontist) வருட வருமானம்-$228,782
- பொதுமருத்துவர் (physician) வருட வருமானம்-$201,840
- உளவியல் நிபுணர் (psychiatrist) வருட வருமானம்-$200,220
- குழந்தை நல மருத்துவர்(pediatrician) வருட வருமானம்-$184,240
- பல் வைத்தியர்(dentist) வருட வருமானம்-$173,860
- முக அமைப்பு பல்லமைப்பு சீராக்கும் நிபுணர்(prosthodontist) வருட வருமானம்-$168,140
- தாதி மயக்க மருந்து நிபுணர்(nurse anesthetist) வருட வருமானம்-$164,030
- பெட்ரோலிய பொறியியலாளர் (petroleum engineer) வருட வருமானம்-$147,030
- ஐ.டீ. முகாமையாளர் (IT manager) வருட வருமானம்-$145,740
- சந்தை முகாமையாளர் (marketing manager) வருட வருமானம்-$144,140
- கால் பாத சிகிச்சை நிபுணர்(podiatrist) வருட வருமானம்-$144,110
- வழக்கறிஞர்(lawyer) வருட வருமானம்-$139,880
- நிதி முகாமையாளர் (financial manager) வருட வருமானம்-$139,720
- விற்பனை முகாமையாளர் (sales manager) வருட வருமானம் -$135,090
- நிதி ஆலோசகர்(financial advisor) வருட வருமானம்-$123,100
- வியாபார நடவடிக்கை முகாமையாளர் (business operations manager) வருட வருமானம்-$122,090
- மருந்து விற்பனையாளர்(pharmacist) வருட வருமானம்-$120,270
- கண் சிகிச்சை நிபுணர் (optometrist) வருட வருமானம்-$117,580
- முதலீட்டு முகாமைத்துவ நிபுணர்(actuary) வருட வருமானம்-$114,120
- அரசியல் விஞ்ஞானி(political scientist) வருட வருமானம்-$112,250
- மருத்துவ மற்றும் சுகாதார சேவை முகாமையாளர்(Medical and Health Services manager) வருட வருமானம்-$109,370
நீங்கள் எந்த நிற கண்களை கொண்டவர் ? What is your eye colour?
நாம் அன்றாடம் நம் வாழ்வில் பல நபர்களை சந்தித்து இருப்போம். அவர்களின் கண்கள் ஒவ்வொரு நிறத்தில் இருப்பதை அவதானித்து இருப்போம். குறிப்பிட்ட சில நிறக் கண்கள் அதிர்ஷ்டம் என்று சிலர் குறிப்பிடுவார்கள். இது உண்மையா? நம் கண்களின் நிறம் எவ்வாறு மாறுபடுகிறது?
நம் தோலைப் போலவே கண்களுக்கும் நிறத்தைத் தீர்மானிப்பது நமது மெலனின் தான். கண்ணின் ஐரிஸ் (கருவிழி) என்னும் பகுதி கண்ணின் கோர்னியா என அழைக்கப்படும் வெளிப்புற அடுக்கிற்கு பின்னால் அமைந்துள்ளது. கோர்னியா பல அடுக்குகளை கொண்டது. கடைசி இரண்டு அடுக்குகளும் ஒருசேர முன்புற அல்லது வெளிப்புற எல்லை என அழைக்கப்படுகிறது (anterior border). இந்த அடுக்கில் மெலனோ சைட்டுகள் என்று அழைக்கப்படும் நிறமி உற்பத்தி செல்கள் உள்ளன. எல்லோருக்கும் மெலனோ சைட்டுகள் ஒரே அளவு உள்ளது. எனினும் நமது நிறத்தை தீர்மானிக்கும் மெலனின் எவ்வளவு நிறமிகளை தீர்மானிக்கின்றன என்பதை பொறுத்தே கண்களின் நிறம் அமைகிறது.
இருண்ட அல்லது கருத்த நிறமுடைய வரின் கண்கள் பிரவுன் எனப்படும் கபில நிறத்தை அடைகின்றன. வெளிர் நிறத்தை உடையவர்கள் நீலம் அல்லது பச்சை கண்களுக்கு சொந்தம் ஆகின்றனர்.
நீல நிற கண்கள் எவ்வாறு தோன்றுகின்றன?
நீலநிறக் கண்களின் வெளிப்புற எல்லை வழியாக ஒளி செல்கிறது. கருவிழியின் உள்ள சாம்பல் நிற செல்களுடன
இந்த ஒளி குறைந்த மெலனின் கொண்ட கண்மணிகளில் பட்டு தெறிக்கும் போது நீல நிற கண்கள் தோன்றுகின்றன.
Subscribe to:
Posts (Atom)
திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா??
திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா வடிகட்டி-உணணும் திமிங்கலங்கள் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டை உட்கொள்கின்றன, ஒரு...

-
மனிதன் சராசரியாக 10 செக்கன்களுக்கு ஒரு முறை கண் சிமிட்டுகிறான் கண்கள் மற்ற உறுப்புகளை விட காயம்பட்டால் விரைவில் குணமாகும் தன்மை உடையத...
-
"உப்பில்லா பண்டம் குப்பையிலே"என்றொரு பழமொழி உண்டு. நமக்கு தெரிந்தது ஒன்றோ இரண்டோ வகை சமையல் உப்புக்கள் தான். ஆனால் அதில் பல வகை...
-
கெவ்கென்ஹொப் கார்டன்ஸ் நெதர்லாந்து (Keukenhof gardens Netherlands) இதை உலகின் மிக அழகான இலைத்துளிர் பூங்கா (spring garden) என அழைப...