Latest news in tamil தமிழில் சிறந்த அறிவியல்பூர்வமான தகவல்கள்
உலகின் பயங்கரமான ஆபத்துகள் நிறைந்த இடங்கள். World most dangerous places
நாம் உலகின் அழகிய அதிகம் கண்டு களிக்கிறோம். அழகு இருந்தாலே ஆபத்தும் இருக்கும் என்பது நமக்கு தெரிந்த விடயம் தானே... இந்த அழகான பூவுலகில் அமைதியாகவும் ரகசியமாகவும் இருக்கும் சில ஆபத்தான இடங்கள் பற்றி பார்ப்போமா?
டெத் வெலி- அமெரிக்கா
Death Valley- USA
இந்த இன் உலகின் பேக்கிங் அவன் (baking oven) போன்ற இடம் இது. ஏனெனில் உலகின் அதி உயர் வெப்பநிலை பதிவாகியுள்ள இடம் இதுவாகும். இந்தப் பாலைவன பகுதியில் அதிகூடிய வெப்பம் 134*f (56.7*c) ஆகும். நீங்கள் எவ்வளவு வலிமை உள்ளவராக இருப்பினும் விரைவில் உடலின் நீர் தன்மையை இழந்து மரணத்தை தழுவ காத்திருக்க வேண்டியதுதான்... இந்த இடத்தின் ஆகக்கூடிய உயிர் வாழும் நேரம் 16 மணித்தியாலங்கள் ஆகும்.
டனாகில் பாலைவனம்- எரிட்ரியா
Danakil desert- Eritrea
உலகின் சுட்டெரிக்கும் இடங்களில் இதுவும் ஒன்று .இதன் அதி கூடிய வெப்பநிலை பதிவு 120*f (50*c) ஆகும். இங்கே இயங்கு நிலையில் உள்ள எரிமலைகள் வெந்நீரூற்றுக்கள் அதிலிருந்து வெளிவரும் நச்சு வாயுக்கள் என எண்ணிலடங்கா ஆபத்துக்கள் உண்டு. இதை உலகில் உள்ள நரகம் என வர்ணிக்கிறார்கள். இந்த இடத்துக்கு தகுந்த அனுபவம் உள்ள சுற்றுலா ஆலோசகர் இல்லாமல் விஜயம் செய்வது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.
சினா பங்க் எரிமலை -இந்தோனேஷியா
Sinabung volcano-Indonesia
இது இந்தோனேசியாவின் சுமாத்திரா பகுதியில் இயங்கு நிலையில் இருக்கும் ஒரு எரிமலையாகும். எரிமலை வெடிக்கும் நிகழ்வு இங்கே அடிக்கடி நடைபெறுகிறது. இதனால் இங்கே சுற்றியுள்ள கிராமங்களில் மக்கள் வெளியேறிய வண்ணமே உள்ளனர். ஏனெனில் எரிமலை வெடிக்கும்போது சுற்றியுள்ள கிராமங்கள் எரிமலை குழம்புகளாலும் கரிகளாலும் சூழப்படுவதுதான். இது 2010,2013,2014 மற்றும் 2015ம் ஆண்டுகள் நடந்தேறி வந்துள்ளன. கடைசியாக 2016 பிப்ரவரி 27ஆம் திகதி எரிமலை வெடித்து சிதறியது. எரிமலை வெடிக்கும்போது கடும் புகையுடன் கூடிய எரிமலை வாயுக்கள், கற்கள் ,எரிமலை குழம்பு மற்றும் கரி ஆகியன 2500 மீற்றர் உயரத்திற்கு வீசியபடி ஆக்ரோஷமாக வெளிவருகிறது. நாளை இந்த இடத்தில் என்ன நடைபெறும் என்று யாருக்கும் தெரியாது.
வாஷிங்டன் மலை -அமெரிக்கா
Mount Washington-USA
உலகின் அதிக வேகத்தில் காற்று வீசும் இடம் என உலக அளவில் பதியப்பட்டுள்ள இடம் இதுவாகும். இங்கே மணித்தியாலத்திற்கு 203 மைல் வேகத்தில் காற்று வீசுகிறது(327km/h). இங்கே வேகமாக காற்று வீசுவது மட்டும் அல்ல குறைந்த வெப்பநிலை கொண்ட சூழலாகவும் காணப்படுகிறது.-40 எனும் மறை வெப்பநிலை கொண்ட உறைய வைக்கும் காலநிலையும் உக்கிரமான பனிப்பொழிவும் காணப்படும் மிகவும் அபாயகரமான இடமாகும். இதன் உயரம் 6288அடி(1917 மீற்றர்) ஆகும். மவுண்ட் வாஷிங்டன் என்பது உலகின் உயரமான சிகரங்களில் ஒன்றாகும். எவரெஸ்ட் மலைச் சிகரத்தின் உச்சியில் அனுபவங்களை ஒத்த அனுபவங்கள் இங்கே கிடைகின்றது.
பாம்புத் தீவு -பிரேசில்
Snake Island-brazil
பிரேசில் கரையோரத்தில் ஒதுக்குப்புறமாக மறைந்திருக்கும் இந்த தீவு உலகின் மிக ஆபத்தான இடம் என பரவலாக அறிய முடிகிறது. இந்த இடத்தில் உலகின் மிகக் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் காணப்படுகின்றன. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 5 பாம்புகள் என ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர். இங்கே பாம்புகளால் தாக்கப்பட்டு பலர் இறந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் இங்கே உள்ள கலங்கரை விளக்கத்தின் பாதுகாவலர் ஒருவர் தாக்கப்பட்டு இறந்த பின்னர் பிரேசிலிய அரசாங்கம் இந்த இடத்தில் நடை பயணம் மேற்கொள்வதை தடை செய்துள்ளது.
மதிதி தேசிய பூங்கா-பொலிவியா
Madidi National Park-Bolivia
முதல் பார்வைக்கு அழகிய ஒரு இடம் போன்று இது தென்பட்டாலும் இது முற்றிலும் பயங்கரமான ஒரு இடமாகும். ஏனெனில் இங்கே விஷமுள்ள பயங்கரமான சில நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. இந்த பூங்காவில் உள்ள எந்த ஒரு தாவரத்தை தொட்டாலோ முகர்ந்தாலோ அது பயங்கரமான சொறிகளையும் சிறங்குகளையும் மயக்கத்தை ஏற்படுத்தும். சிறிய புண்கள் காயங்கள் உடம்பில் இருப்பின் அதன் ஊடாக இந்த நுண்ணுயிர்கள் புகுந்து தாக்கி உயிர் ஆபத்துகளையும் ஏற்படுத்தலாம்.
வெலி ஒப் டெத் - ரஷ்யா
Valley of death-Russia
ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதியில் கம்கட்சா என்ற இடத்தில் இந்த சாவு சமவெளி உள்ளது. இது அங்குள்ள பிரபலமான வெந்நீரூற்று சமவெளிக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் செறிவு மிகுந்த நச்சுவாயு வெளிப்படுவதால் சுற்றுச்சூழலும் நச்சு டைய சூழலாகவே காணப்படுகிறது. இங்கிருக்கும் மரங்களும் உயிரினங்களும் வெகு சீக்கிரத்தில் இறந்து விடும் நிலையில் மனிதன் சென்றால் நிலைகுலைந்து காய்ச்சல் ஏற்பட்டு மயக்க நிலையை அடைந்து குளிர்ந்த நிலைக்கு மாறி பின்னர் இறப்பை அடைகிறான்.
பிகினி அடோல்- மார்ஷல் தீவுகள்
Bikini atoll- the Marshall Island
இந்த கடற்கரை தீவு எவ்வளவு அழகாக உள்ளது இதில் என்ன ஆபத்து உள்ளது என்று நினைக்கிறீர்களா? இங்க தீவில் எண்ணிலடங்கா அணுச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. எனவே அழகான இந்த தீவு அணு கதிர்களின் குப்பை தீவாக உருமாறியுள்ளது. கண்ணுக்கு தெரியாத இந்த அணுக்கதிர் தாக்கத்தால் இங்கு வாழும் உயிரினங்கள் கட்டாயமாக தாம் வாழும் இடத்தை விட்டுச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது. இந்த உயர் கதிர்வீச்சின் எதிரொலியாக இந்தக் கதிர்கள் உயிரினங்களில் பட்டால் கேன்சர் வருவது உறுதி.
எலிபன்ட் கிங்டோம்- தாய்லாந்து
Elephant Kingdom-Chonburi, Thailand.
இங்கு முதலைப் பண்ணை வைத்து நடத்தும் ஒருவர் பிளாஸ்டிக் பெரல்களால் இணைக்கப்பட்டு கூரைகளையும் கொண்ட ஒரு சிறிய படகை வாடகைக்கு விடுகிறார். கையில் ஒரு மீன் தூண்டில் போன்ற உபகரணமும் கொடுக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் முதலைகள் வாழும் ஏரிகளில் இந்த படகின் மூலம் சென்று மீன் தூண்டில்கள் மூலம் அவைகளுக்கு இறைச்சித் துண்டுகளை வழங்கி மகிழலாம். சிலர் மீன் தூண்டிலை இறைச்சி துண்டுடன் தூக்கும்போது முதலைகள் பாய்ந்து உணவை கவ்வும் காட்சிகளை காணலாம். மிகவும் பயங்கரமான இந்த விளையாட்டில் சற்றே சறுக்கினாலும் உயிராபத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அபார் டீப்ரஷன் - எத்தியோப்பியா
Afar depression- Ethiopia
எர்டா அலி எனும் இந்தப் பிராந்தியத்தில் இருக்கும் ஒரு எரிமலையால் அபார் என்று பகுதியை அடிக்கடி ஆழமாக குலுங்கி கொண்டிருக்கிறது. இந்த எரிமலை உச்சியில்ரி இரண்டு லாலா ஏரிகள் இருப்பதால் இது நிகழ்கிறது. இந்த எரிமலைக் குழம்புகளில் அளவு கூடி குறைவதால் இந்த நிலத்தின் மேற்பரப்பு மேலும் கீழுமாக மாறிக்கொண்டே இருக்கிறது. தொடர்ந்து பூகம்பங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
லேக் நெட்ரோன்- தன்சானியா
Lake natron- Tanzania
இது வேற்றுக் கிரகத்தில் ஒரு பகுதி போன்று தோற்றமளித்தாலும் உண்மையில் தன்சானியாவில் உள்ள லேக் நெட்ரொன் என்ற ஏரியின் புகைப்படமாகும். இந்த ஏரியில் அல்காலி உப்பு என்ற ஒருவகையான நஞ்சு வெளிப்படுவதால் உயிரினங்கள் வாழமுடியாது இறந்துவிடும். இது மேனியில் பட்டாலே ஆபத்துதான். எனவே இந்த ஏரியில் நீச்சலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியில் இருந்து ஹைட்ரஜன் சல்பைடு என்ற ரசாயனத்தினால் வெளி வரும் துர்நாற்றமானது பார்வையாளர்களை இங்கிருந்து சீக்கிரமே வெளியேற்றி விடும். அந்தளவு துர்மணம் கொண்டது.
Subscribe to:
Post Comments (Atom)
திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா??
திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா வடிகட்டி-உணணும் திமிங்கலங்கள் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டை உட்கொள்கின்றன, ஒரு...

-
மனிதன் சராசரியாக 10 செக்கன்களுக்கு ஒரு முறை கண் சிமிட்டுகிறான் கண்கள் மற்ற உறுப்புகளை விட காயம்பட்டால் விரைவில் குணமாகும் தன்மை உடையத...
-
"உப்பில்லா பண்டம் குப்பையிலே"என்றொரு பழமொழி உண்டு. நமக்கு தெரிந்தது ஒன்றோ இரண்டோ வகை சமையல் உப்புக்கள் தான். ஆனால் அதில் பல வகை...
-
கெவ்கென்ஹொப் கார்டன்ஸ் நெதர்லாந்து (Keukenhof gardens Netherlands) இதை உலகின் மிக அழகான இலைத்துளிர் பூங்கா (spring garden) என அழைப...
A very interesting article. The insights are really helpful and informative. Thanks for posting.
ReplyDeletelifestyle tours 2018
Thanks your positive feedback is giving more energy to write
Delete