உலகின் வித்தியாசமான பிறந்தநாள் கொண்டாட்டங்கள். Different birthday celebration around the world..

 
பிறந்தநாளை சிறப்பித்து வித்தியாசமாக கொண்டாடுவது எப்படி என நாம் யோசித்து புதுமையாக முயற்சிகள் செய்கிறோம். புது வகையான ஆடைகள் புது வகையான உணவுப் பண்டங்கள் என அசத்துகிறோம். ஆனால் கலாச்சார ரீதியாகவே புதுமையாக கொண்டாடப்படும் சில பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

மெக்சிகோ
மெக்சிகோவில் பிறந்த நாள் கொண்டாடப்படும் நபருக்காக ஒரு பினாடா செய்து தொங்க வைக்கப்படும்.பினாடா என்றால் கடதாசியால் செய்யப்பட்ட ஒரு காகித கூடு ஆகும். அதனுள் சிறு விளையாட்டு பொருட்களும் ,இனிப்புகளும் இருக்கும். பிறந்தநாள் கொண்டாடுபவர் அதை அடித்து உடைத்து இனிப்பு மழை பொழிய கொண்டாடுவார்.


கனடா
கனடாவில் பிறந்த நாள் கொண்டாடும் நபரின் மூக்கில் வெண்ணை அல்லது பிசுபிசுப்பான ஏதாவது ஒரு பொருள் தடவப்படும். அது அவர்களின் அந்த வருடத்தின் கெட்டதை விலக்கி நல்லது நடைபெற வேண்டும் என செய்யப்படும் ஒரு சம்பிரதாயம் ஆகும்.


அயர்லாந்து
இங்கே பிறந்தநாள் கொண்டாடுபவர் பிறந்தநாள் தினத்தன்று தலைகீழாக தொங்க வைக்கப்பட்டு நிலத்தின் லேசாக தலை முட்டப்பட்டு எடுக்கப்படும். வருடத்துக்கு ஒருமுறை இப்படி செய்வது நல்லதைக் கொண்டு வரும் என்பது மக்களின் நம்பிக்கையும் சம்பிரதாயமும் ஆகும்.


ஜெர்மனி
ஜெர்மனியில் ஒரு சில இடங்களில் ஒருவருக்கு 30 வயது ஆகிவிட்டால் அங்கிருக்கும் சர்ச் அல்லது நகர மண்டபத்தில் முன் படிகளை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும். இதனால் சுத்தமாக நாட்டையும் வீட்டையும் வைக்க வேண்டும் என்ற பாடம் கற்பிக்கப்படுகிறது.


கரீபியன் தீவுகள்
கரி பியாவின் ஜமைக்காவின் சில பகுதிகளில் பிறந்தநாள் கொண்டாடும் நபரின் மேல்
 நண்பர்கள் உறவினர்கள் ஆகியவர்கள் மாவு வீசி கொண்டாடுகிறார்கள். கேளிக்கையை கூட்டுவதற்காக தண்ணீரும் மாவும் பிசைந்து ஊற்றப்படுகிறது.


வெனிசுவேலா மற்றும் அமெரிக்கா
வெனிசுவேலாவில் பிறந்தநாள் கொண்டாடும் நபரின் முகத்தில் முழு கேக்கும் அடித்து கொண்டாடப்படும். வரப்போகும் வருடத்தின் நன்மை அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்து அவ்வாறு நடத்தப்படும்.
அமெரிக்காவிலும் கிட்டத்தட்ட அதே போன்றுதான். பெற்றோர்களால் மேலதிக கேக்குகள் தயாரிக்கப்பட்டு குழந்தைகள் மேல் அதை வீசியும் பீய்த்து எறிந்தும் தமது ஆசைகளை தீர்த்துக் கொள்வார்கள் .


சீனா
சீனாவில் பிறந்தநாள் கொண்டாடும் நபருக்கு ஒரு தட்டு நிறைய நீளமான நூடுல்ஸ் சாப்பிட வழங்கப்படுகிறது. ஏன்  அந்த நாளில் நீளமான நூடுல்ஸ்சாப்பிடுவது அவர்களின் ஆயுளை நீட்டிக்கும் என நம்பப்படுகிறது.


வியட்நாம்
வியட்னாமில் ஒவ்வொரு புதுவருடத்திலும் தமது பிறந்த நாளை மக்கள் கொண்டாடி மகிழ்வர். அதற்கு 'டெட்' என்று சொல்லப்படும். அவர்களைப் பொறுத்தவரை உண்மையான பிறந்த நாளை யாரும் கணிப்பது கஷ்டமானது. எனவே ஒவ்வொரு வருடமும் வயது ஏறுவதை புதுவருடத்தில் கொண்டாடுகிறார்கள். குழந்தைகளுக்கு இந்நாளில் பெற்றோர்களால் சிவப்பு நிற க
வரில் வைத்து பண அன்பளிப்புகள் வழங்கப்படும்.


அர்ஜென்டினா
இங்கே குழந்தைகள் எத்தனை வருட பிறந்த நாள் என்பதை பொறுத்து அத்தனை தடவைகள் அவர்களின் காதுகள் இழுக்க படுகிறது.


ஆஸ்திரேலியா
இங்கே 'fairy bread'  என்ற உணவுபிறந்தநாளை யொட்டி தயாரிக்கப்படுகிறது. அது பிறந்தநாள் கொண்டாடும் நபருக்காக தயாரிக்கப்படும் அலங்காரமான ஒரு வகையான பிரட் வகை ஆகும்.

No comments:

Post a Comment

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா??

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா வடிகட்டி-உணணும் திமிங்கலங்கள் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டை உட்கொள்கின்றன, ஒரு...