உலகின் பிரபல்யமான உணவு வகைகள் world most famous foods


ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு கலாச்சாரம் உண்டு. கலாச்சாரத்தில் ஒரு பங்கு உணவு எனலாம். உணவுக்கு மயங்காத மனிதனே இல்லை. ஒரு சுவை பிடிக்கவில்லை என்றால் மற்றொரு சுவை கட்டாயமாக பிடிக்கும். அப்படி வித விதமாக சமைக்கப்படும் உணவுகளை பற்றி உங்களுக்கு தெரியுமா? உலகின் சில நாடுகளில் மனிதர்களால் விரும்பி சாப்பிடப்படும் சில உணவு வகைகளை பார்ப்போமா?

அவுஸ்திரேலியா-மீட் பை (Australian meat Pie)


அவுஸ்திரேலியாவில் மிகப் பிரபலமான உணவாகும். அங்குள்ள மக்கள் இதனை விரும்பி சாப்பிடக்கூடிய வர்களாகவும் இருக்கிறார்கள். இதை உணவகங்களில் தக்காளி சாஸ் தொட்டு சாப்பிடுவதில் அவர்களுக்கு அலாதி பிரியம்...

அவுஸ்திரியா- அப்பெல்ஸ்டூடல் (Austrian apfelstrudel)


இதனை  வியட்நீஸ் அப்பெல்ஸ்டூடல் எனவும் அழைப்பர். இது அமெரிக்காவின் ஆப்பிள் பையை ஒத்த ஒரு உணவாகும். புளிப்பு சுவையுடைய பின் பழம் இனிப்பு சுவையுடைய மாவினால் சுற்றப்பட்டு இருக்கும்அருமையான சுவை கொண்டது. இதை இவர்கள் மதிய சிற்றுண்டியாக சாப்பிடுகிறார்கள்.

பிரேசில்- புடிம் (Brazilian puddim)

இது புடின் வகையை சேர்ந்தது போல் காணப்பட்டாலும் அதை விட மென்மையான பஞ்சு போன்று உள்ள ஒரு டெசர்ட் வகை ஆகும். பிரேசிலில் எல்லா உணவுகளிலும் இது கிடைக்கும்.

பின்லாந்து- ஸ்கூவிகி சீஸ் (Finland squeaky cheese)


இதை "ழைபஜுஸ்டோ" என்ற பெயரிலும் அழைப்பர். பாலாடைக்கட்டியை பேனில் இருபக்கமும் பொரித்து க்ளவுட் பெரி ஜாமுடன் மாலைப் பொழுதில் காபியுடன் பரிமாறப்படுகின்றது. இனிய சிற்றுண்டி வகை ஒன்றாகும்.

இத்தாலி-பொரித்த ஒளிவ் (Italian fried olives)


இத்தாலி என்றாலே நமக்கு பாஸ்தாவும் பீட்சாவும் தான் நினைவுக்கு வரும். ஆனால் ஆலிவ் காயில் வித்தியாசமான பூரணங்களை நிரப்பி அதைப் பொறுத்து சாப்பிடும் இன்னொரு பிரபலமான உணவு வகையும் அங்கு உண்டு. இந்த சுவைக்கு அலாதியான ரசிகர் பட்டாளமும் உண்டு.

போலந்து-க்ளொட்நிக் (Poland chlodnik)


இது வெயில் காலங்களில் புத்துணர்ச்சியை அளிக்கக் கூடிய குளிர்மையான ஒருவகை இளம் சிவப்பு நிற சூப் வகையாகும். இதற்கு பீட்ரூட் வெள்ளரி யோகட் என்பன சேர்க்கப்படுகிறது. அவித்த முட்டையின் அலங்கரிக்கப்படுகிறது. மிகவும் சத்தான சுவையான உணவு வகையாகும்.

இந்தியா-மசாலா தோசை (Indian masala dosa)


மசாலா தோசை எனப்படும் இந்திய உணவு வகை இந்தியாவில் மட்டுமல்ல இலங்கை ,மலேசியா போன்ற தமிழர் வாழும் இடமெல்லாம் பிரபலமானதாகும். அரிசியால் தயாரிக்கப்பட்ட உருளைக்கிழங்கு சேர்க்கப்பட்டு தேங்காய் சட்னியில் சுடச்சுட மொறுமொறுப்பாக இருக்கும் இதன் சுவையை சொல்லவும் வேண்டுமா?

சுவீடன்-சாக்லேட் (Sweden chocolate)


இங்கே தான் முதலில் சாக்லேட் பிறந்த ஊர் என்று கூறலாம். இங்கே உள்ளவர்கள் சுவையான சாக்லேட் எப்படி செய்வது என்ற ரகசியத்தை அறிந்து வைத்துள்ளனர். பால் சாக்லேட் நட்ஸ் சாக்லேட் என பல வெரைட்டிகள் இங்கு உண்டு. சுவீடன் வந்தால் சாக்லெட் சாப்பிட மறந்து விடாதீர்கள்.

தாய்லாந்து-டொம் யம் சூப் (Thailand-Tom Yum Soup)


டொம் யம் என்றால் புளிப்பு காரம் என்ன பொருள். தாய்லாந்தின் பிரபலமான உணவு வகை. இதில் பால் சேர்க்கப்பட்ட ஒரு வகையும் பால் சேர்க்கப்படாத ஒரு வகையும் உண்டு. நம்மூர் ரசத்துக்கு ஒத்துப் போகிறதோ..


 மத்திய கிழக்கு நாடுகள் -ஹம்மூஸ்
( Middle East countries- hummus)


இது கடலை (பட்டாணி) ஆலிவ் ஆயில், சிவப்பு மிளகாய் தூள், எலுமிச்சம் சாறு போன்றவைகள் சேர்க்கப்பட்டு நன்றாக அடிக்கப்பட்டு பெறப்படும் கலவையாகும். கிட்டத்தட்ட மயோனிஸ் போன்றது. பிரட் ரோஸ்ட் போன்றவற்றுக்கு தொட்டு சாப்பிடலாம். மத்திய கிழக்கு நாடுகளில் பிரபல்யமானது.



No comments:

Post a Comment

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா??

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா வடிகட்டி-உணணும் திமிங்கலங்கள் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டை உட்கொள்கின்றன, ஒரு...