தாய்லாந்தை சேர்ந்த 12 கால்பந்தாட்ட சிறுவர்களும் ஒரு கால்பந்து பயிற்சியாளரும் பயிற்சிகளை முடித்து விட்டு அதே அணியில் உள்ள ஒரு சிறுவனின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடலாம் என நினைக்கின்றனர்.
எனது தாய்லாந்தின் வடபகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான "தாம் லுவாங்" என்ற குகைக்கு சென்று வர தீர்மானித்தனர். இது தாய்லாந்தில் "சியாங் ராய்" என்ற பகுதியில் அமைந்துள்ளது.
அந்த குகைக்குள் நுழைய அனைவரும் அனுமதி எடுத்து உள்நுழைகையிலேயே அவர்கள் வாழ்வில் சற்றும் எதிர்பாராதவிதமாக அந்த அசம்பாவிதம் நடக்கிறது.
வளைவும் நெளிவும் ஆன அலை போன்ற வடிவம் உள குகையில் நுழைந்து சுமார் நாலு கிலோ மீட்டர் தூரம் சென்ற வேலை எதிர்பாராத விதமாக மழை பெய்தது எனவே குகை நீரால் நிரம்பியது.
எனவே இவர்கள்
சிறுது மேட்டுப் பகுதியில் சென்று அமர்ந்திருக்க மழை விட்டுவிட்டு பெய்தது. குகை நீரோ வடியவேயில்லை.
கிட்டத்தட்ட 13 நாட்கள் உண்ண உணவின்றி இருட்டில் எங்கும் போக வழியின்றி அங்கிருக்கும் நீரைக்குடித்து ஒரே இடத்தில் அமர்ந்தபடி இருந்துள்ளனர்.
இதற்கிடையில் வெளியில் குழந்தைகளை காணாத பெற்றோர்கள் தேடி குழந்தைகள் குகையினுள் போனதை கண்டுபிடிக்கிறார்கள். அரசாங்கத்திற்கு தகவல் பறக்கிறது தேடுதல் வேட்டை ஆரம்பிக்கின்றது. அரசாங்கத்தின் கடற்படைகள் தேட எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. விஷயம்சர்வதேச மயமாகிறது.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா என சர்வதேச நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 1000 பேர் தேடுதல் வேட்டையை மேற்கொள்கிறார்கள். காணாமல் போனோர் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்ற தகவலே தெரியவில்லை அனைவருக்கும் பீதி கிளம்புகிறது.
குகையில் நீரை பம்ப் பண்ணி வெளியே எடுக்க திட்டம் போடப்படுகிறது. ஒருபுறம் சுழியோடிகளும தேடுகின்றனர். இன்னொருபுறம் குகையில் ஏதும் துளைபோட்டு தேடலாம் என்றாலும் குகை மொத்தமாகச் சரிய வாய்ப்புள்ளது என அத்திட்டம் போடப்பட்டு பின்னர் கைவிடப்படுகிறது.
ஒரு வாரு 12 13 நாட்களுக்கு பிறகு சிறுவர்கள் இருக்கும் இடத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த சில வீரர்கள் கண்டுபிடிக்கின்றனர். எனினும் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவர்கள் எங்கனம் எடுப்பது? சவால் வலுக்கிறது...
பின் ஒருவாறு சிறுவர்களுக்கு நீச்சலின் மிகவும் அடிப்படையான விடயங்கள் மாத்திரம் கற்பிக்கப்பட்டு சிறுவர்கள் நன் நான்கு பேராக பிரிக்கப்படுகின்றனர்.
ஒரு சிறுவருக்கு இரு சுழியோடிகள் வீதம் ஒரு சுழியோடி முன்பக்கம் ஒக்சிசன் சிலிண்டர் உடன் செல்ல பின்பக்கம் மற்ற சுழியோடி காவலாக வருகிறார். கயிறுகளால் இவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
குகையினுள் உள் நீந்த ஆறு மணி நேரம் வெளிவர 5 மணி நேரம் எடுக்கிறது. அந்தளவுக்கு சவாலான மிகவும் குறுகலான குகை...
குறுகலான பாதையில் ஆக்சிஜன் சிலிண்டரை கொண்டு செல்வது ஒரு பெரிய சவாலாகவே இருந்தது. எப்படியோ உலக மக்களின் பிரார்த்தனைகளாலும் இறைவன் உதவியாலும் நான்கு நான்கு பேராக
மீட்கப்படுகின்றனர்.
இதில் சோகமான விடயம் என்னவெனில் சிறுவர்களை தேடுவதற்கு உதவிக்காக வந்த ரிடையரான ஒரு கடற்படையைச் சேர்ந்தவர் இறந்தது தான். தற்போது சிறுவர்கள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுகின்றனர். சிறுவர்கள் பெற்றோர் ஊர் மக்கள் உலக மக்களும் மகிழ்ச்சி அடைகின்றனர்... அவர்கள் உயிரோடு மீட்க பட்டதை எண்ணி...
இந்தக் கதையில் நாம் பெறும் படிப்பினைகள் என்னவெனில்
- மனிதாபிமானமும் நல்ல மனிதர்களும் உலகில் இன்னமும் இருக்கின்றனர்
- விண்வெளிக்கு செல்ல இயந்திரம் கண்டுபிடித்த மனிதன் ஒரு குகையில் சிக்கியவரை காப்பாற்ற எந்த இயந்திரமும் கண்டுபிடிக்கவில்லை.
- கடவுளின் படைப்பு களில் உள்ள அதிசயங்களும் சவால் களும் எக்காலத்திலும் மனிதனால் விஞ்ச முடியாது. கடவுளுக்கு அடிபணிந்தே ஆக வேண்டும்.
No comments:
Post a Comment