உலகில் அதிகளவு பயன்படுத்தப்படும் பானங்கள். Most used beverages in the world

         
பானங்கள் என்பது மனிதன் தன் தாகத்தை நிறைவேற்றிக் கொள்ளவும் உற்சாகமாக இருப்பதற்கும் பயன்படுத்தி கொள்வதாகும். சூடான சூழலை சமாளிக்க குளிர்பானங்களும் குளிரான சூழ்நிலைகளை சமாளிக்க சூடுபறக்கும் பானங்களும் எமக்கு உதவி புரிகின்றன. நீங்களும் நானும் இன்றும் ஏதாவது ஒரு பானத்தை பயன்படுத்தி இருப்போம். அந்த அளவுக்கு அனைவரின் வாழ்க்கையிலும் இது இடம் பிடிக்கிறது. உலகில் அதிக அளவாக மனிதர்கள் பாவிக்கும்ள் பானங்கள் எவை என்று தெரியுமா?

1. நீர்

நீரின்றி உயிரோ உடலோ உயிரினங்களோ அமையாது. மனிதன் விரும்பியோ விரும்பாமலோ உலகில்  அதிகளவு பயன்படுத்தப்படும் குடிபானங்களில் நீர் முதலிடம் பெறுகிறது. உணவின்றி சிறிது காலம் வாழ்ந்தாலும் நீர் இன்றி யாரும் வாழ முடியாது. மனித உடலுக்குத் தேவையான கனியுப்புகள் நீர் மூலம் கிடைக்கப் பெறுகின்றன.

2. தேநீர்

உலகில் அதிகம் விரும்பி அருந்தும் பானங்களில் தேனீர் முதலிடம் பெறுகிறது. தனித்துவமான வாசனை கலந்த இந்த பானம் தேயிலையின் மேல் சுடு நீர் ஊற்றுவது மூலம் பெறப்படுகிறது. தேநீரில் பல வகைகள் உண்டு. டார்ஜிலிங் மற்றும் சைனா கிரீன் டீ ஆகியன சிறிது கசப்பு கலந்த சுவையில் அதிகம் விரும்பப்படும் தேநீர் வகைகள் ஆகும்.

3. கோப்பி

தேனீருக்கு அடுத்ததாக மக்களால் அதிகம் விரும்பப்படும் பானம் காபி ஆகும். காபி மரத்தின் விதைகளை பதமாக வறுத்து அதைத் திரிப்பது மூலம் பெறப்படுகிறது. இது 85 வீதம் பெரியவர்களை அருந்துகின்றனர். குளிர் தாங்கும் சக்தி இதற்கு அதிகம். மருத்துவ குணங்கள் கொண்டது. nescafe என்ற கோப்பி வகை மிகப் பிரபலமானது.

4. சூப்

சூப் என்பது மரக்கறிகள் கோழி அல்லது இறைச்சிகளை நீரில் போட்டு பதமாக வேக வைப்பது கிடைக்கப்பெறுகிறது. சிக்கன் சூப், மட்டன் சூப், பீப் சூப், டொமேட்டோ சூப், வெஜ் சூப், ஸ்வீட் கார்ன் சூப், டொம் யம் சூப் என ஏராளமான வகைகளில் இது கிடைக்கப்பெறுகிறது. அதிகம் வெயிட்டை சமாளிக்க மக்கள் சிறிது சாப்பாட்டுடன் சூப்பை விரும்பி அருந்துகின்றனர்.

5. எனர்ஜி ட்ரிங்க்

அதிகளவான மக்களால் உடனடி சக்திக்காக இந்த பானம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதில் அதிகளவான சைக்கோவேடிவ் வேதிப்பொருட்கள் அதாவது காப்ஃபைன் போன்றவைகள் அடங்கியுள்ளன. எனவே இதன் மூலம் சிறிய energy boost பண்ண படுவதாக நம்பப்படுகிறது. பெருமளவாக உடலுக்கு கெடுதல் என பேசப்படுகிறது. இதில் காபனேற்றப்பட்ட நீர், சர்க்கரை மற்றும் செயற்கையான வாசனைப் பொருட்கள் அடங்கியுள்ளன.

6. கொக்கா கோலா

நூற்றுக்கணக்கான வெளியீடுகளை கொக்கா கோலா நிறுவனம் உற்பத்தி செய்கிறது. பழரசங்கள் மென்பானங்கள் மற்றும் வேறு பல பானங்கள் இதில் உள்ளடங்குகின்றது. இது carbon ஏற்றம் செய்யப்பட்ட ஒருவகை பானம். இது கடைகள் உணவகங்கள் மற்றும் தானியங்கி இயந்திரங்கள் மூலம் உலகில் ஒரு நாளைக்கு 1.9 பில்லியன் ரூபாய்களுக்கு விற்பனை ஆகிறது. அண்மையில் கொக்ககோலாவின் ஆல்கஹால் கலந்ததாக சர்ச்சை எழுப்பப்பட்டது நீங்கள் அறிந்ததே..

7. பால்

அமெரிக்காவில் மாத்திரம் ஒரு வருடத்திற்கு சராசரியாக 20.2 Gallon பால் நுகரப்படுகிறது. சோடாவிற்கு பதிலாக பால் பரிந்துரை செய்யப்படுகிறது பாடசாலை மாணவர்களுக்கு சமச்சீரான ஊட்டச்சத்து வழங்குவதில் இது முக்கிய இடம் பிடிக்கிறது. மேலும் பாலில் புரோட்டீன் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

8. ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸ் ஆரஞ்சு பழங்களை பிழிந்து நீர் சேர்த்து செய்யப்படுகிறது. செயற்கையான ஆரஞ்சு பானங்களைவிட இயற்கையான ஆரஞ்சு பானத்தையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். விட்டமின் சி எல் அதிகமாக இருக்கும் இந்த பானத்தை மில்லியன்ள் காலன்கள் மக்கள் பயன்படுத்துகின்றனர். இது விட்டமின் சீ சிறந்ததாக அவர்களால் கருதப்படுகிறது.

9. எலுமிச்சை பானம்

மற்றுமொரு விட்டமின் சி  அதிகமாக கொண்டது இந்த பானம். அனைத்து தர மக்களும் மிக விரும்பி அருந்தும் பானமாக இது கருதப்படுகிறது. ஆசிய நாடுகளில் அதிகமாக உலக காலநிலை உள்ள பகுதிகளில் தாகம் தீர்ப்பதற்காக இது பயன்படுத்தப்படுகிறது.

10.லெஸி

இந்திய பான வகைகளில் ஒன்றாக கருதப்படும் இது உடம்பை குளிர்மையாக  வைக்க பயன்படுத்தப்படுகிறது. காரமான சாப்பாட்டுக்குப் பிறகு தயிர் அல்லது யோகட்டினால் செய்யப்படும் இது சீரகம் மற்றும் கொத்தமல்லி பயன்படுத்தி காரை சுவையிலும் ரோஸ் வாட்டர் மற்றும் சர்க்கரை பயன்படுத்தி இனிப்பு சுவை யிலும் உட்கொள்ளப்படுகிறது.

11. மில்க் ஷேக்

பாலில் பல சுவையூட்டி மற்றும் இனிப்பு பழரசங்கள் சேர்த்து செய்யப்படுகிறது. இந்திய மற்றும் ஆசிய நாடுகளில் மிகவும் பிரபல்யமாக உணவகங்களில் பரிமாறப்படுகிறது. பலவகையான பல ரசங்களின் சுவைகளில் இது கிடைக்கக்கூடியது. அனைத்து தரப்பினராலும் விரும்பி குடிக்கப்படுகிறது.








உலகில் இப்படியும் பூக்கள் உள்ளனவா? Different types of flowers


நீண்ட நாட்களுக்கு ஒரு முறை பூக்கும் பூக்கள்

பிரம்ம கமலம்


இது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் ஒரு வகை பூ. அதுவும் இரவில் மட்டுமே பூத்து ஒரே நாளில் வாடிவிடும். அப்படி பூக்கும் போது சில மீட்டர் தூரத்திற்கு இதன் வாசனை வீசும். இதன் நறுமணமும் மிக வித்தியாசமானது. பூத்து நாலு மணி நேரத்தில் உதிர்ந்துவிடும்.

குயின் ஆப் தெயான்டீஸ்

காட்டுப்பூச் செடியான இந்த மலர் நூறாண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் வகையாகும். பனை மர வடிவில் 30 அடி வரை நீண்டு உயர்ந்து செல்லும் இதன் மரமானது நடுப்பகுதியில் கற்றாழை போல் தோன்றும் இதன் செதில்களில் இருந்து வெளிவரும் தாழைகள் நீண்ட மட்டை போல காணப்படும். இந்த மரங்களில் ஒரே சமயத்தில் 30 ஆயிரம் பூக்கள் பூக்கும். ஒருமுறை பூத்து விட்டு மரமே அழிந்துவிடும்.

குறிஞ்சி மலர்

2 முதல் 3 அடி வரை வளரக்கூடிய செடிகளில் நீல நிறத்தில் பூ பூப்பவை குறிஞ்சி மலர்கள் ஆகும். இதன் சிறப்பம்சம் என்னவெனில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே பூக்கும். இதில் 32 வகைகள் உள்ளன. கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரம் தாண்டி வளரக்கூடியது. ஆகஸ்ட் -நவம்பர் காலத்தில் பூக்கக்கூடிய இந்த தாவரம் உடனே தேனீக்களால் ஆற்கொள்ளப்படுகின்றன. பல மருத்துவப் பயன்களைக் கொண்டது.

அழகிய ஆபத்தான விஷ பூக்கள்

கெஸ்டர் பூக்கள்

ஆமணக்கு எண்ணெய் செய்யப்படும் இந்த செடியில் சிவப்பு நிறத்தில் பூக்கள் பூத்திருக்கும். பூக்கள் விஷத்தன்மை கொண்டது. இதன் விதைகளை சாப்பிட்டால் மரணம் நேரிட வாய்ப்புண்டு. கின்னஸ் புத்தகத்தில் அதிக விஷமுடைய பூவென பதியப்பட்டுள்ளது. இந்தியாவின் இது பரவலாகக் காணப்படுகிறது.

ஏன்ஜல் ட்ரம்பட்

இந்தப் பூவின் அமைப்பு ட் ரம்பட் இசைக்கருவி போன்று காணப்படுகிறதால்இப் பெயரைப்  பெற்றுள்ளது. தென்னமெரிக்கக் காடுகளில் அதிகமாக காணப்படுகிறது. கொடிய விஷத்தன்மை கொண்ட இந்த பூக்களை பயன்படுத்தினால் இதன் விஷம் காரணமாக உளவியல் ரீதியாக பாதிப்புகள் ஏற்படும்.

சங்குனேரியா கனாடெனிஸிஸ்

பெயரளவில் சங்கு வைத்திருக்கும் இந்த செடி மனிதனுக்கு உண்மையில் சங்கு ஊதும் அளவுக்கு விஷத்தன்மை கொண்டது. இப்பூக்கள் தோலில் உள்ள செல்களை தாக்கி அழித்து விடக்கூடியது. கர்ப்பிணிப் பெண்கள் இதனை முகர்ந்தால்
 தாய்மை நிலை பாதிக்கப்படும். கரு கலையும் வாய்ப்புண்டு.

மிகப்பெரிய பூ

உலகின் மிகப் பெரிய பூ ரவலேசியா ஆனல்ட் ஆகும். இந்த அரியவகை பூ இந்தோனேஷியாவின் இறைவனே காடுகளில் உள்ளது. தனி பூவாகவே வளரும் இந்தச் செடி 3 அடி உயரமும் 15 பவுண்ட் பாரமும் கொண்டது. இது மலர்ந்தவுடன் நறுமணம் வீசும் அதற்கு பதிலாக அழகிய இறைச்சியின் துர்மணம் வீசுகிறது. ஏனெனில் இரைகளை கவர்ந்திழுத்து மகரந்த சேர்க்கை நடத்தவே..

உலகின் மிகவும் துர்நாற்றம் கொண்ட பூ

டைட்டன் ஆரம் என்ற பெயர்கொண்ட இந்த பூ உலகின் மற்றும் ஒரு பெரிய வகை பூவாகும். எனினும் துர்மணத்தில் முதலிடத்தை பிடிக்க வல்லது. மென்மையான இந்த மலர் பிணம் பூ என்ற பெயரையும் கொண்டது. அரிதான இந்த வகை பூவின் வாசம் அழுகிய சதையினை ஒத்ததாக உள்ளது. இதன் உயரம் கிட்டத்தட்ட 10 அடிகளாகும். இதன் அழுகிய வாசனை பூச்சிகளையும் ஈக்களையும் மகரந்த சேர்க்கைக்காக ஈர்ப்பதாக உள்ளது. இது மேற்கு இந்தோனேஷியாவின் மழை காடுகளில் காணப்படுகிறது.

ஜப்பானின் ஒளி சொர்க்கம் "டிஜிட்டல் ஆர்ட் மியூசியம்" Japan's light Paradise "Digital Art Museum"


மனிதன் தனது தொழில்நுட்பத்தை பாவித்து இருப்பதை அழிக்கிறான். இல்லாததை உருவாக்குகிறான். இதற்கு நன்மை தீமை போன்று இறு பக்கங்கள் இருப்பினும் தொழில்நுட்ப வளர்ச்சி எல்லையில்லாமல் வளர்ந்து கொண்டே போகிறது என்பது மட்டும் நிச்சயம். கருவில் குழந்தையின் தன்மையை அறிகிறான். அதுபோலவே வானவெளியில் கோள்களைப் பற்றி ஆராய்கிறான். அணுகுண்டையும் கண்டுபிடிக்கிறான். அளவிலா இன்பம் தரும் களியாட்ட பூங்காக்களையும் உருவாக்குகிறான்(theme parks). இதுபோன்று ஜப்பான் நாட்டில் உருவாக்கப்பட்ட ஒரு ஒளி சொர்க்கம் பற்றி தெரியுமா?

இது டிஜிட்டல் ஆர்ட் மியூசியம் என அழைக்கப்படுகிறது(full name-Mori building digital Art Museum teamlab borderless). இது டோக்கியோவில் உள்ள ஒடைபா என்ற நகரில் அமைந்துள்ளது.

ஆக்கப்பூர்வ கலைத் திறமை மிக்க 400 ஜப்பனீஸ்  தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த அருங்காட்சியகம். இது கிட்டத்தட்ட பத்தாயிரம் சதுர மீட்டர் (107,639 சதுர அடி) கொண்ட மனிதனால் உருவாக்கப்பட்ட டோக்கியோ விரிகுடாவில் பெலட் டவுன் (pallet town) ல் அமைந்துள்ளது.


இது கலை ஆர்வம் கொண்டவர்களை நிச்சயமாக கவர்ந்திழுக்கும் வகையிலும் திகைப்பூட்டும் சூழலில் செல்பி எடுப்பவர்களுக்கு கலைத் தீனியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இதன் சிறப்பம்சம் என்னவெனில் டிஜிட்டல் ஒளியில் சில இயற்கை காட்சிகள், பூந்தோட்ட காட்சிகள், நீர் அருவி காட்சிகள், செயற்கையாக உருவாக்கப்பட்ட வண்ணமயமான காட்சிகளை தொழில்நுட்பம் மூலம் உருவாக்கி அதில் நன்மை நடக்க வைத்து அனுபவிக்க வைப்பதுதான். உண்மையிலே இதனை அனுபவிக்க எத்தனை கோடி கொடுத்தாலும் தகுமே..

இந்த இடம் கண்டுபிடிக்க மூலகாரணமாக இருந்தவர் Toshiyuki Inoko என்ற கணித பொறியியலாளராவார். இவர் மட்டுமன்றி கலை நிபுணர்கள், கணனி வடிவமைப்பாளர்கள், அனிமேட்டர்கள், பொறியியலாளர்கள் போன்ற பலர் சேர்ந்து கூட்டுமுயற்சியில் உருவாகியுள்ளது. இதன் முழு அழகு கீழ்காணும் வீடியோவில் கண்டு ரசிக்கலாம்.


உலகின் பயங்கரமான பாலங்கள் world dangerous bridges


பாலங்கள் என்பது அக்காலம் முதல் இக்காலம் வரை மனிதர்களால் நீர் நிலைகளையோ பள்ளங்களையோ கடக்க உபயோகப்படுத்தப்படுகிறது. தென்னை மரக் கட்டை மரத்தின் தடித்த தண்டு பகுதிகளில் பாலம் கட்ட தொடங்கி தற்போது கட்டிடக்கலை வளர வளர பாலங்களின் தன்மைகளிலும் முன்னேற்றம் ஏற்பட்டது. தற்காலத்தில் உபயோகமாகும் பாலங்களில் ஆபத்தான பாலங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Millau viaduet, France

உலகின் மிக உயர்ந்த பாலமாக கருதப்படுகிறது. இது அந்நாட்டின் ஈபிள் டவரை விட உயரமானது. அண்ணா நாட்டின் முக்கியமான A7F வாகன வீதியாக உள்ளது. இதன் கட்டிடக் கலையின் அழகு தனி ரசனை உடையதாகும். மேகத்தில் மிதப்பது போன்ற தோற்றம் கொண்ட இது அழகானது போலவே ஆபத்தானதும் கூட...

Langkawi Sky Bridge, Kedar ,Malaysia

2004 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலம் ஒரு பாதசாரிகள் பாலமாகும். கடல் மட்டத்தில் இருந்து 700 மீட்டர் உயரமான இந்த பாலம் தற்போது பாவனைக்கு இல்லாமல் மூடப்பட்டது துக்கமான செய்தியே..

Canopy walk ,Ghana

இந்தப் பாலம் கக்கும் தேசிய பூங்காவில் அமைந்துள்ளது. இதுவே ஆப்பிரிக்கக் காட்டு பகுதியில் அமைந்துள்ள ஒரே நடைபாதை ஆகும். இது பல மர உச்சிகளை இணைத்து கட்டப்பட்டுள்ளதால் பயங்கரமான மிருகங்களையும் காட்டு யானைகளையும் டயானா குரங்குகளையும் இங்கிருந்து கண்டு ரசிக்கலாம்.

Trift Bridge, Switzerland

இந்தப் பாலம் சுவிட்சர்லாந்தின் கட்மன் மலைத்தொடரில் அமைந்துள்ளது (Alps of gadman). இந்தப் பாலம் 180 மீட்டர் நீளமானது 110 மீட்டர் உயரமானது.

Royal gorge Bridge, Colorado, USA

இந்தப் பாலம் 1929 இல் கட்டப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் மனம் கவர்ந்த இந்த பாலம் 2001 வரை உலகின் உயர்ந்த பாலமாக இருந்து வந்தது. இதற்குக் கீழே உள்ள பூங்காவையும் மிருகக்காட்சிசலையையும் கண்டுகளிக்கலாம். மக்கள் நெரிசல் மிகுந்த இடமாக இருந்த இந்த பாலம் 2013 காட்டுத் தீயில் பெருமளவு பாதிக்கப்பட்டது. பின் 2014இல் புனர்நிர்மானம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Capilano suspension bridge, Canada

இந்த கேப்பில் ஆனோ பாலம் வடக்கு வன்கூவரில் கொலம்பியாவில் அமைந்துள்ளது. இந்தப் பாலம் 450 அடி நீளமானது. 230 அடி உயரமானது. மயிர்க்கூச்செறியும் இந்த தொங்குபாலமானது உலகின் மிக ஆபத்தானதாக கருதப்படுகிறது.

Ghasa , Nepal

காசா என்ற படுபயங்கரமான இந்த பாலம் கஸ் என்ற கிராமத்தில் நேபாளத்தில் அமைந்துள்ளது மிகவும் மோசமாக கட்டப்பட்ட இந்த பாலம் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. இது மனித பாவனைக்கு மட்டுமன்றி கால்நடைகள் போக்குவரத்திற்கும் பயன்படுகிறது.

Marian bruke, Germany

மற்றுமொரு அதிபயங்கரமான இந்தப் பாலம் ஜெர்மனியில் அமைந்துள்ளது. இரண்டு மலைகளின் உச்சிகளில் இணைப்பது போன்று அமைந்துள்ள இந்த பாலம் பவேரியன் மலைத்தொடர் அருகே கட்டப்பட்டுள்ளது.

Deception pass Bridge, Washington

இந்தப் பாலம் டிசெப்ஷன் நகர பூங்கா வாஷிங்டனில் அமைந்துள்ளது. இது 1486 அடி நீளமாகவும் 180 அடி நீர் நிலையிலிருந்து உயரமாகவும் உள்ளது. இந்த ஆபத்தான பாலத்தை உபயோகிக்கும் போது மயிர்க்கூச்செரிவது நிச்சயமே..

Zhangjiaji glass Bridge, China

இது சீனாவின் வுலிங்குயான் என்ற இடத்தில் அமைந்துள்ளது. சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் முற்றிலும் ஒளி ஊடறுக்கும் கண்ணாடியினால் இந்தப் பாலத்தின் கீழ் பகுதி கட்டப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் 20,2016 ல் கட்டப்பட்டுள்ளது. 430 மீட்டர் நீளமாகவும் 6 மீட்டர் அகலமாகவும் 260 மீட்டர் நிலத்திலிருந்து உயரமாகவும் இந்தப் பாலம் உள்ளது. இந்தப் பாலம் சங்ஜியாஜி என்ற தேசிய பூங்காவை ஊடறுத்து ஹூனான் என்ற மாகாணத்தில் கட்டப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 800 பேரை தாங்கக்கூடியது.

இந்தப் பாலத்தின் நடக்கும்போது மக்கள் சிலர் பயந்து மயிர்க்கூச்செறியும் விதமாக நடந்து கொண்டதை பல youtube வீடியோக்களில் வைரலாக பரவியதை காணலாம்.

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா??

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா வடிகட்டி-உணணும் திமிங்கலங்கள் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டை உட்கொள்கின்றன, ஒரு...