புத்திசாலிகளின் 10 அடையாளங்கள். Top 10 facts about smart people



புத்திசாலி மனிதர்கள் தம் அனைத்தையும் அறிந்தவர்கள் என்ற எண்ணம் கொள்ள மாட்டார்கள். ஆனால் சாதாரண மனிதர்கள் புத்திசாலியாக தங்களைநினைத்துக் கொள்வார்கள்."டெய்னிங் க்ரூஜர்" எனும் ஆய்வு இதை உறுதிப்படுத்துகிறது. நகைச்சுவை, இலக்கணம், தர்க்கம் போன்ற நான்கு வகையான துறைகளில் கேள்விகள் கேட்கப்பட்டு ஆராய்ச்சி செய்யப்பட்டது.
சாதாரண மனிதர்கள் 12% மதிப்பெண் எடுத்தாலும் அவர்கள் 62% மதிப்பெண் எடுத்து இருக்கலாம் என சராசரியாக நினைத்தார்கள்.

புத்திசாலி மனிதர்கள் சரியான கருத்துகளுடன் தங்கள் கூற்றை நிரூபிப்பார்கள் அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதால் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் உறவுகள் பாதிக்கப்படாமல் அதேசமயம் கருத்துக்களையும் ஆணித்தனமாக சொல்வதில் புத்திசாலி மனிதர்கள் வெற்றியடைவார்கள். நரம்பியலாளர் Jason s. Moser என்பவர் கூறுகையில்'புத்திசாலி' மனிதர்களின் மூளை மற்றவர்களின் தவறுகளின் போது வித்தியாசமாக செயற்படுவதை கண்டுபிடித்தார்.

புத்திசாலி மனிதர்கள் தனிமையில் இருப்பதை அதிகம் விரும்புவார்கள். அதனால் மகிழ்ச்சியும் அடைவர். LSE மற்றும் Singapore management University என்ற நிறுவனம் 15000 மக்கள் 18-28 வயதுக்குட்பட்டவர்களுக்கு சோதனை நடத்தினார்கள். இதில் கூடுதலான மற்றும் குறைவான புள்ளிகளை எடுத்தவர்கள் மனித  செரிவு அதாவது மக்கள்தொகை கூடிய பகுதிகளில் வாழ்வது மகிழ்ச்சி அற்றது. புத்திசாலித்தனத்தை பாதிக்கக்கூடியது போன்று கருதினார்கள். அதிக அறிவார்ந்த நபர்கள் அதிக நண்பர்களுடன் பேசுவது பழகுவது என்பதில் பெரும்பாலும் திருப்தி காண மாட்டார்கள்.

புத்திசாலி மனிதர்கள் சிறிது உடல் சோம்பேறித்தனத்துடன் இருப்பர் இவர்களின் புத்தி வேலை செய்யும்போது உடல் இயக்கம் குறையும் ஆனால் சாதாரண மனிதர்கள் புத்திக்காக செலவிடும் நேரம் சக்தி ஆகியவற்றை உடல் உழைப்பில் காட்டுவார்கள். புத்திசாலி மனிதர்களின் ஆழமான சிந்தனை உடல் இயக்கத்தை தடை செய்கிறது எனவே எமக்கு சோம்பேறித்தனமாக இருப்பது போலத் தெரியலாம்.

புத்திசாலி மனிதர்கள் தங்களது நேரத்தை வித்தியாசமான தலைப்புகளை வாசித்து தங்கள் அறிவைப் பெருக்கிக் கொள்வதில் செலவிடுவார்கள். இவர்கள் இந்த தலைப்பில் நீங்கள் கேட்டாலும் சொல்லித்தருவதற்கு தரவுகளை சேர்த் வைத்திருப்பார்கள். எதைப்பற்றியும் பேச முடியுமான தைரியத்தில் இருப்பார்கள்.

புத்திசாலி மனிதர்கள் அதிகம் இன்டர்நெட் பாவித்து தகவல்களை அறிந்து கொள்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு ஆன்லைன் சர்வேயில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இன்டர்நெட் மூலம் தமது அறிவை வளர்த்துக் கொள்வதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களது வாசிப்பு மற்றும் எழுத்து திறமைகள் மேம்படுவது தெரிகிறது.

புத்திசாலி மனிதர்கள் இரவில் விழிப்புடனும் மூளை செயல்திறன் கூடுதலாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சாதாரண மனிதர்கள் பகலுடன் தங்கள் வேலைகளை மட்டுப்படுத்தி முடித்துக்கொள்ள முற்படுகிறார்கள் என ராபர்ட் எலிசன் என்று விலங்கியல் நிபுணர் ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடித்து தெரிவித்துள்ளார். இவர் குறிப்பிட்ட ஒரு குழுவை "காலை உணர்வுடையவர்"  "மாலை உணர்வுடையவர்" என இரண்டாகப் பிரித்து மேற்குறித்த ஆய்வு மேற்கொண்டார்.

புத்திசாலி மனிதர்கள் அதிகம் இலத்திரனியல் உபகரணங்கள் (கையடக்கத் தொலைபேசி, தொலைக்காட்சி, வானொலி) போன்றவைகளை அதிகம் உபயோகிக்க ஆர்வமாக உள்ளனர். ஏனெனில் அதில் வரும் தகவல்களை தெரிந்து கொள்ளவே... ஹெவல் பெக்கார்ட் என்ற ஒரு கல்வியாளர் கூறுகையில் "இது ஒரு தகவல் அறியும் நோய் (infomania) இதற்குக் காரணம் அறிவுப்பசி ஆகும். இது வேலை பார்ப்பவர்களின் வேலைகளையும் பாதிக்கிறது. மெசேஜ்கள் அறிவது ஈமெயில்களை சரி பார்ப்பது  போன்ற வேலைகளால் அலுவலக வேலைகளும் குடும்பத்தின் கடமைகளும் பாதிக்கப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.

புத்திசாலி மனிதர்கள் திறந்த அறிவு உள்ளவர்களாகவும், சந்தர்ப்பத்தை புரிந்து கொள்பவர்களாக வும் இருப்பார்கள். இது இவர்களை சமூகத்தில் ஊடறுத்து பழகுவதில் எளிமையை ஏற்படுத்தும். 'Encyclopaedia Britannica' என்ற நூலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் சூழலில் மாற்றம் ஏற்பட்டு முற்றிலும் புதியவை கண்டுபிடிப்பதற்கு ஏற்றதாக உள்ளது.

புத்திசாலி மனிதர்கள் புதிய புதிய கேள்விகளைக் கேட்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள். இதனால் புதியவற்றை அறிந்து கொண்டே இருப்பார்கள். ஆர்வத்தை தூண்டும் புதிய புதிய விஷயங்களில் இருந்து கேள்வி எழுப்புவார்கள். இது அவர்களின் மூளை அமைப்புக்கேற்றவாறு அமைந்திருக்கும். மேலும் பிழைகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள்.

உங்களுக்குத் தெரிந்த புத்திசாலி நண்பர்கள் இருந்தால் மேற்கூறிய பதிவை பகிர்ந்து கொள்ளுங்கள். அல்லது நீங்களே புத்திசாலியாக இருந்தால் உங்களைப் பற்றி மற்றவர்கள் அறிய பகிர்ந்து கொள்ளுங்கள்.



உலகின் மிக அழகான 10 இடங்கள் world most beautiful place


கெவ்கென்ஹொப் கார்டன்ஸ் நெதர்லாந்து
(Keukenhof gardens Netherlands)

இதை உலகின் மிக அழகான இலைத்துளிர் பூங்கா (spring garden) என அழைப்பர். இங்கே 7 மில்லியன் டியுலிப் பூக்கள் ஒரே தடவையாக பூக்கும். காணக்கண்கோடி வேண்டும் இந்த இயற்கை அழகை... ஆனால் இது மார்ச் முதல் மே மாதம் வரையே பூத்துக் குலுங்கும். எனவே இதைச் சென்று பார்ப்பவர்கள் அந்த நேரங்களிலே தமது பயணங்களை அமைத்துக் கொள்ளலாம்.

அன்டிலோப் கன்யொன்- அரிசோனா
Antelope canyon- Arizon



அன்டிலோப் என்பது ஒருவகையான மான். மான் நிறத்தில் இருப்பதாலோ என்னவோ ' மான் பள்ளத்தாக்குகள்' என்ற பெயரைப் பெற்றுள்ளது. இது மணலில் சென்ற மழைநீரால் பெற்றுக்கொள்ளப்பட்ட வடிவம் அல்லது காற்று மணலை அள்ளி அடுக்கப்பட்டிருப்பதால் கிடைக்கப் பெற்ற வடிவமாக இருக்கலாம். புகைப்பட கலைஞர்களை கவர்ந்த இடமாக உள்ளது. இதன் ஊடாக சூரிய கதிர்கள் ஊடுருவும்போது அந்த ஒளி பட்டுத் தெறிக்கும் போது வரும் அழகை இரசிக்க காணக் கண்கோடி போதாது.

பிலிட்வைஸ் லேக் - குரோஷியா
Plitvice lake- Croatia


இது குரோஷிய நாட்டின் மிகப்பெரிய தேசிய பூங்கா ஆகும். இங்கே  நீர்வீழ்ச்சிகளும் குகைகளும் குளியல் குளங்களும் இயற்கையாகவே அமையப் பெற்றுள்ளன. இந்த மகத்தான அழகை கண்டு களிக்க வசந்தகாலம்(summer) செல்வது சிறந்த காலம். ஏனெனில் குளிர்காலத்தில் இந்த நீர்வீழ்ச்சிகளிலும் குளங்களிலும் உள்ள நீர்  ஐஸ்கட்டியாக மாறிவிடும்.(அதுவும் ஓர் அழகே...)
(ஐஸ் கட்டியாக மாறிய படம்)

வயிட் ஹெவன் பீச்- அவுஸ்த்ரேலியா
Whitehaven beach- Australia


'வெள்ளைச் சுவனம்' என அர்த்தம் கொள்ளும் பெயருடைய இந்த கடற்கரை
ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ளது. பரந்து விரிந்த கடலில் வெள்ளை மணலை விரித்தது போல காணப்படும்.
இதன் பரப்பு 7 கிலோமீட்டர் ஆகும். இதைப் பர்க்கும்போது சகல கவலைகளையும் மறந்து மன அமைதி ஏற்படும் என்பதில் ஐயமில்லை. ஹாமில்டன் தீவுகளிலிருந்து படகு வழியாகவும் ஷூட் துரைமுகம் மற்றும் ஏர்லி பீச் துறைமுகங்களிலிருந்தும் இந்த கடற்கரையை அணுகலாம். சிறந்த
பார்வை காட்சிகள் அனுபவிக்க டங் பாயிண்ட் என்ற இடத்திலிருந்தும் அணுகலாம்.

சலார் டீ உயூனி-பொலிவியா
Salar de uyuni- Bolivia


உலகின் மிகப்பெரிய உப்புச் சுரங்கமான இது அழகிய அதிசயங்களில் ஒன்று. இது தென் அமெரிக்காவின் தீட்டப்பட்ட சித்திரங்கள் போன்று பார்ப்பதற்கு ஓர் எழில் கொஞ்சும் இடம். ஒரு நீரூற்று வற்றியதால் ஏற்பட்ட இடம் பதினோராயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இங்கே சுற்றிவர வறட்சியாகவும் பாலைவன நிலப்பரப்பு உள்ளதால் அதிகப்படியான உயிரினங்களைக் காணமுடியாது ஒருவகையான நாரை இனங்களை தவிர.. வெள்ளை படுக்கை போன்று காட்சியளிக்கும் இந்த இடத்தில் திட்டுதிட்டாக உப்புப் படிந்துள்ளதை காணலாம்.

மொரைன் லேக்- கனடா
Moraine lake- Canada


கனடாவின் குன்றுகளின் 10 சிகரங்களின் பள்ளத்தாக்கில் தொலைவான ஒரு பகுதியில் அமைந்துள்ளது. இந்த 'மொரைன் லேக்' மரகத அழகு என வர்ணிக்கப்படும். இந்த இடத்தைச் சூழவும் மலைகள், சிறிய பெரிய பனிப்பாறைகள், பெரும் நீர்வீழ்ச்சிகள், பழங்கால குன்றுகள், என்பவை காணப்படுகின்றன.
பனிப்பாறைகள் உருகினால் ஏரிநீர் உயர்ந்து  காணப்படும். பல வித்தியாசமான இயற்கைக் காட்சிகளை இங்கு கண்டு ரசிக்க முடியும்.'கயாக்' அல்லது 'கோனோ' பகுதிகளிலிருந்து அதன் அழகை முழுமையாக அனுபவிக்க முடியும்.

யெல்லோ ஸ்டோன் நேசனல் பாக் -யூ .எஸ்.ஏ
Yellowstone National Park-U.S.A


இது மிகவும் பழமையான தேசியப் பூங்கா அமெரிக்காவில் உள்ளது. இது 3500 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. சுற்றி வரக் காடுகளும் கட்டுக்கடங்காத இயற்கை அழகையும் கொண்டுள்ளது. வேறுபட்ட இயற்கை அம்சங்களைக் கொண்ட பொழுதுபோக்கு பகுதி. அதிக வேகம் கொண்ட ஆறுகள், நீறு பூத்த நெருப்பு போன்ற எரிமலைகள், வெந்நீரூற்றுக்கள், ஆழமான பள்ளத்தாக்குகள், அடர்த்தியான பண்டைய காடுகள், பனிமூடிய மலையுச்சி கள் பாதைகள் முழுதும் திணறவைக்கும் காட்சிகள் நிறைந்தது.

மேலும் இங்கு சில உயிரினங்களின் உறைவிடங்கள் உண்டு. கரடி, ஓநாய், காட்டெருமை, மான்மறைகள் போன்றவைகள் இங்கே வாழ்கின்றன. இது ஒரு சிறந்த மகிழ்ச்சி நிறைந்த பொழுதுபோக்கு இடமாகும். அதுமட்டுமன்றி தேசிய சொத்தாகும்.


கிரேட் பெரியர் ரீப்- ஆஸ்திரேலியா
Great Barrier Reef- Australia


கிரேட் பெரியர் ரீப் கடற்கரை மிகப்பெரியது.குயின்ஸ்லாந்தின் கடற்கரைக்கு அருகிலுள்ள வடகிழக்கு ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள இந்த இடம் 2300 கிலோமீட்டர் நீளம் கொண்டது.
3000ற்கும் மேற்பட்ட பாறை அமைப்புகள்,
பவளப்பாறைகள் மற்றும் நூற்றுக்கணக்கான மிகச் சிறிய பெரிய தீவுகள் வெள்ளை நிறமான மணற் கடற்கரைகளை இங்கே காணலாம்.
இதன் உண்மையான அழகே கடலுக்கடியில் உள்ள பவளப்பாறைகள் தான். இங்கு 600க்கும் அதிகமான வகைகள் மென்மையான மற்றும் வன்மையான பவளப்பாறைகளை காணலாம். இந்த வசீகர அழகுடன் உள்ள இந்த இடத்தில் கடல் மீன்கள், நட்சத்திர மீன்கள், மொல்லஸ்க் , டால்பின், மற்றும் சுறாமீன்கள் ஆமைகள் ஆகிய உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது.
இந்த இடத்தின் அழகை அரை கண்ணாடி படகின் மூலம் சுற்றிப் பார்ப்பது, படகு சவாரி செய்வது, அரை நீர்மூழ்கிக் கப்பலில் பயணிப்பது, மற்றும் வெற்று நீச்சல் ஆகியவற்றின் மூலம் பார்க்கலாம் அனுபவிக்கலாம்.

விஸ்டேரியா டனல்-கவாசி புஜி காடன் ஜப்பான்
Wisteria tunnel- kawachi Fuji garden Japan



இது பூக்களால் வேயப்பட்ட வேலி பாதை போன்று செய்யப்பட்ட ஒரு இடமாகும். வண்ண வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த இடம் டோக்கியோவில் இருந்து ஐந்து மணிநேர தூரத்தில் அமைந்துள்ளது.
இங்கே 150 விஸ்டேரியா என்ற வகை பூ தாவரங்களினால் கிட்டத்தட்ட 20 வகையான பூக்கள் பயன்படுத்தப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெள்ளை, நீலம், கருநீலம், ஊதா மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களில் காட்சியளிக்கிறது. இதனால் இங்கே வண்ணமயமாகவும் அழகாகவும் உள்ளது
இங்கே விஜயம் செய்வதற்கு பொருத்தமான நேரம் ஏப்ரல் முதல்மே நடுப்பகுதிவரை. அந்நேரமே பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. ஏப்ரல் 21 முதல் மே 6 வரை இங்கே விடுமுறை (கோல்டன் வீக்) அனுஷ்டிக்கப்படுகிறது. எனவே கூட்டம் அலைமோதும்.
500 முதல் 1000 ஜப்பானிய யென்கள் வரை பூக்கள் பூப்பதற்கு ஏற்ப  அறவிடப்படுகிறது. முற் பதிவு டிக்கெட் மூலமே உள்ளே அனுமதிக்கப்படகிறார்கள்.


இந்தப் பாதையால் நடந்து போனால் வாழ்வின் அனைத்து துன்பங்களும் மறந்து சொர்க்கத்தின் நடப்பதுபோல தோன்றுமே..


ரேன்போ மவுண்டென்-சீனா
Rainbow mountain-China



வானவில் மலை எனப் பெயர் கொண்ட 'சங்கய் டங்சியா லேண்ட்போம் பாக்' என்ற பெயர் கொண்ட புவியியல் பூங்காவில் சீனா கன்சூ மாகாணத்தில் அமைந்துள்ளது. மணலும் கனிமங்களும் கலந்து பல வருடங்கள் அழுத்தப்பட்ட தாலும் இயற்கை சீற்றங்கள், அரிப்பு  போன்றவற்றுக்கு உள்ளான தாலும் வரிவரியான வானவில் போன்ற கோடுகள் இந்த மலைமேல் உருவானது. இது வித்தியாசமான நிறங்கள் சிவப்பு, பச்சை, நீலம் மற்றும் மஞ்சள் நிறங்களில் அமைந்தன. பார்ப்பதற்கு வானவில் போன்று இந்த கோடுகள் உயிரோட்டமாகவும் துடிப்பாகவும் அமைந்துள்ளன. யுனெஸ்கோ இதை உலக பாரம்பரிய இடம் பட்டியலில் சேர்த்துள்ளது. காண்பதற்குக் கண்களுக்குக் குளிர்ச்சி யூட்டும் பிரமிப்பூட்டும் வனப்புடன் அமைந்துள்ளது.

இந்த தலையங்கத்தை top 10 அழகான இடங்கள் என எழுத நினைத்தேன். இடங்களின் அழகைப் பார்த்ததும் ஒவ்வொன்றும் அதற்குரிய தனித்தன்மை வாய்ந்ததாக இருப்பதால் தரம் பிரிக்க (rating பண்ண) மனது வரவில்லை.

கண்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் interesting facts about eye



  1. மனிதன் சராசரியாக 10 செக்கன்களுக்கு ஒரு முறை கண் சிமிட்டுகிறான்
  2. கண்கள் மற்ற உறுப்புகளை விட காயம்பட்டால் விரைவில் குணமாகும் தன்மை உடையது (48 மணிநேரம்) சாரியான பாராமரிப்பு இருந்தால்...
  3. குழந்தைகளுக்கு கண்ணீர் வராது அது தகவல் பரிமாறுவதற்கே அழுகிறது. கண்ணீர் வருவதற்கு 4-13 வாரங்கள் வரை பிடிக்கும்.
  4. உலகினில் 39 மில்லியன் மக்கள் சராசரியாக குருடாக உள்ளனர்
  5. கண்மணியை மற்றும் சத்திரசிகிச்சைகளை பற்றிய ஆய்வு தற்போதும் வைத்தியர்களால் மேற்கொள்ளப்படுகிறது. கண்களுக்கும் மூளைக்கும் தொடர்புடைய நரம்புகளை எவ்வாறு இணைப்பது என்பது பற்றிய ஆராய்ச்சிகளும் நடைபெறுகிறது.
  6. கண்களின் கோள வடிவ செல்கள் (ராட் செல்) வடிவத்தையும் கூம்பு வடிவ செல்கள்(கோன் செல்) நிறங்களையும் பார்க்க உதவுகின்றன.
  7. உங்கள் கண்களின் அளவு கிட்டதட்ட 1inch அகலம் கொண்டது. பாரம் கிட்டத்தட்ட 0.25 அவுன்ஸ்.
  8. சிலருக்கு இயற்கையாகவே ஒரு கண்ணில் ஒரு நிறமும் மற்ற கண் இன்னொரு நிறமுமாக பிறந்திருப்பார்கள். இது ஒரு நோய் பெயர் ஹீடகோமியா.(heterochromia)
  9. மற்ற தசைகளை விட கண் தசைகள் எந்நேரமும் சுறுசுறுப்பாகவும் விரைந்து இயங்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கின்றன.
  10. 80% கண்நோய்கள் உலகில் தீர்க்கப்படக் கூடியதாகவும் நிவாரணம் பெற கூடியதாகவும் உள்ளது.
  11. உலகில் பொதுவான கண் நிறம் கபிலம் (பிரவுன்) ஆகும். கண்களின் நிறம் கருவிழி படலத்தில்( iris) உள்ள மெலனினை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.
  12. நாங்கள் கண்களால் பார்த்தாலும் உண்மையான பார்வையாளன் மூளை தான். அதுதான் பார்த்தவற்றை அறிந்துகொள்ளவும் வகைப்படுத்தவும் உதவுகிறது.
  13. நாம் பிறந்ததிலிருந்து அனைத்து உறுப்புகளும் வளர்கின்றன கண்களை தவிர. கண்கள் பிறப்பில் உள்ள அளவுதான் எப்போதும் இருக்கும் .
  14. கண்கள் திறந்தபடி தும்முவது சிரமமானது பெரும்பாலும் முடியாது.
  15. தீக்கோழியின் மூளையை விட கண்கள் பெரிதாக இருக்கும்.
  16. புகைப்பிடிப்பது கண்களைப் பாதிக்கும் குறிப்பாக இரவு கண் பார்வையை..
  17. எமது கண்களுக்குள் இரண்டு மில்லியனுக்கும் அதிகமாக வேலை செய்யும் உறுப்புக்களைக் கொண்டுள்ளது.
  18. மனிதக் கண்களுக்கு மனிதக் கண்களுக்கு சிவப்பு, நீலம், பச்சை நிறங்களை மட்டுமே பார்க்க முடியும். ஆற்ற நிறங்களைப் பார்ப்பது இதன் கலவையை களாகவே உருவாக்கப்படுகிறது.
  19. பல்லிகள் மனிதனைவிட நிறங்களை அறிவதிலும்  மந்த ஒளியில் பார்ப்பதிலும் 350 மடங்கு சிறந்ததாக விளங்குகிறது.
  20. டால்பின்கள் ஒரு கண் திறந்தபடியே படுக்கும்.
  21. தேனிக்கு 5 கண்கள் உண்டு.
  22. மூளைக்குப் பிறகு சிக்கலான உறுப்பு கண்கள்தான்.
  23. கண் முடியில் (eyelashes) கண்களுக்குப் புலப்படாத, தீங்கு செய்யாத நுண்ணுயிர்கள் வாழ்கின்றன.
கண்கள்் பற்றி மேலும் பல தகவல்கள் உள்ளன. சுவாரஸ்யமானவைை தொகுக்கப்பட்டுள்ளது.

ஏன் பகலிலும் bike light ஒளிர்கிறது? Why bike lights always switch on day and night?


தற்போது வீதிகளில் பயணம் செய்யும்போது பகலிலும் ஒளிரும்  இருசக்கர வாகன விளக்குகளையும்கண்டிருக்கலாம். அதனை கைகாட்டி அணைக்கும் படியும் (off)சொல்லியிருக்கலாம். ஆனாலும் அணைக்காமல் செல்கிறார்களே என்ற கேள்வி எழும்பியதா?
இதற்கு AHO bikes(automatic headlights on) அல்லது DRL  bikes (daytime running lamp) என அழைக்கப்படுகிறது.
தற்போது பகல் நேரங்களிலும் ஒளிரும் விதமாக புதிய வருகை இருசக்கர வாகனங்களை அமைத்துள்ளனர். ஏனெனில் உருவத்தில் சிறியனவாகவும் இருக்கும் இருசக்கர வாகனங்கள் நெளிவு சுழிவுகளில் புகுந்து சென்று இன்றைய டிராபிக் பிரச்சனைகளை சமாளிப்பதற்கு ஏற்றப்படி உள்ளது.
இதன் தீமைகளில் ஒன்று அதிக விபத்தும் உயிர் ஆபத்துகளும். எப்படி தலைக்கவசம்(helmet) கட்டாயமோ அதன்படி பகல் விளக்குகளும் எதிர்வரும் காலங்களில் கட்டாயமாக்க படலாம்.
தூரத்தில் வரும் இரு சக்கர வாகனங்களில் பகல் நேரங்களிலும் விளக்குகள் ஒளிர்வதால் அது ஒரு எச்சரிக்கையாக இருக்கும். மேலும் விபத்துக்கள் குறையும் வாய்ப்புகள் இருப்பதாகவும் ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்குகளின் நன்மைகள் என்ன வென்றால் சிறிய வாகனங்களை தூரத்திலிருந்து காணமுடியும். மேலும் மழை நேரங்கள், பனிமூட்டம் ஆன நேரங்கள், பொழுது புலரும் நேரங்கள் பொழுது சாயும் நேரங்களில் விளக்குகள் ஒளிரும் போது இருசக்கர வாகனங்களை இலகுவாக அவதானிக்க முடியும். இதனால் விபத்துக்கள் குறையும்.
இதன் பேட்டரிகள் பகலிலும் ஒளிர்வதற்கு வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் பேட்டரி காலியாகிவிடும் என்ற பயமும் வேண்டாம். இந்த வகை பைக்குகளில் headlights on off switch கிடையாது. Bright dim பட்டன்களே உள்ளன.
கடந்தவருடம் 2017ஆம் ஆண்டு இருசக்கர வாகனங்களினால் இலங்கையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1269 ஆகும். மற்ற வாகனங்களை விட இது பல மடங்கு அதிகம். எனவே எப்படியோ விபத்து குறைந்தால் சரியே..
புதிதாக கிரிக்கெட்டில் ஸ்டம்ப்(stump) செய்யப்படும்போது ஆட்டம் இழந்ததை உன்னிப்பாக கவனிக்க விளக்கு எரியும் படி(lights on) அமைக்கப்பட்டதே அதுவும் இந்தத் தொழில்நுட்பத்தினால் கண்டுபிடிக்கப்பட்டதாக இருக்குமோ...?

April Fool வரலாறு தெரியுமா?


உலகத்தில் நாம் காலத்தைக் கணிக்க பயன்படுத்துவது கலன்டர் ஆகும். இப்படிப்பட்ட கலன்டரை முதன்முதலில் அடிப்படை வடிவில் ஒழுங்கு படுத்தியது ஜூலியர் சீசர் என்ற ஒரு மன்னன்.13 மாதங்கள் மாதம்தோறும் 28 நாட்கள் என்ற பழைய வழமையை மாற்றி அமைத்து 12 மாதங்களாக உள்ள அடிப்படை காலண்டரை உருவாக்கியவர் இவர்.
இவருக்கும் ஏப்ரல் பூலுக்கும் என்ன சம்பந்தம்?
இவரது காலண்டரில் ஏப்ரல் முதலாம் திகதி புத்தாண்டாக அமைந்திருந்தது. இது கிறிஸ்து பிறப்புக்கு முன் நிகழ்ந்த ஒரு சம்பவம்.
கிறிஸ்து பிறப்பிற்கு பின் 1500 ஆம் ஆண்டுகள் அளவில் போப் கிரகோரி என்பவர் ஜூலியன் காலண்டர் காலத்தைத் தவறாக கணித்தது என அடையாளம் கண்டு தற்போது நாம் பாவிக்கும் கிரகோரியன் காலண்டரை அமைத்தார். இதனை உலகம் முழுதும் 1752ம் ஆண்டளவில் நடைமுறைப்படுத்த படுத்துவது என உலகத் தலைமைகள் தீர்மானித்தன. இதில் இவர் புத்தாண்டாக ஜனவரி மாதம் முதலாம் திகதி மாற்றியமைத்தார்.
ஏற்கனவே பழைய கலாச்சார சம்பிரதாயங்களை பின்பற்றி வந்த ஒரு சில மக்கள் ஏப்ரல் முதலாம் திகதி கொண்டாடப்படும் புதுவருட பிறப்பை தான் சரியான தெனவும் ஜனவரி முதலாம் திகதி புத்தாண்டையும் ஏற்க மறுத்தார்கள் போராட்டம் செய்தார்கள்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐரோப்பா அரசாங்கங்கள் ஏப்ரல் முதலாம் திகதி புத்தாண்டைக் கொண்டாடுபவர்களை முட்டாள்கள் எனவே இது முட்டாள்கள் தினம் என்ற அறிவிப்பை வெளியிட்டது.
எனவே முட்டாள்களாக மக்கள் விரும்புவார்களா? திட்டம் இட்டு அரசு மக்களை அந்த நாளை விட்டும் திசை திருப்பியது.
இதை அமுல்படுத்தும் விதமாக முதலாம் உலகப்போரின்போது பிரான்ஸ் ஜெர்மன் மீது முதலாம் திகதி ஒரு குண்டை வீசினர். மக்கள் பயந்து ஓட தொடங்கினர் ஆனால் குண்டு வெடிக்கவில்லை. ஏனெனில் அருகில் சென்று பார்த்தால் April fool என எழுதப்பட்டிருந்தது. இது வரலாற்றில் அழிக்க முடியாத தடமாக ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் என நிறுவியது.
மக்களைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய அரசாங்கமே ஏப்ரல் 1 ஐ முட்டாள்கள் தினமாக பிரகடனப்படுத்தியது.
இது தெரியாமல் நாம் ஏப்ரல் முதலாம் திகதி நண்பர்களை பொய்சொல்லி யும்முட்டாள்களாக்கி யும் இந்த தினத்தை கொண்டாடுகிறோம்.இனியாவது சிந்திப்போமா?


கொத்தமல்லி தழை வடிவில் ஒரு விஷம்



இந்திய சமையலில் கொத்தமல்லிக்கு ஒரு தனி இடம் உண்டு. ரசமோ, குழம்போ ,வரட்டல் ,பிரட்டல் எதுவென்றாலும் கொத்தமல்லி தழையை கடைசியில் சேர்க்காமல் அது முழுமைப் பெறுவதில்லை. அதன் வாசனையே தனி தான்.
ஆனால் கொத்தமல்லி தழை வடிவில் ஒரு விஷச் செடி உண்டு. அது பார்ப்பதற்கு கொத்தமல்லி இலை போலவே இருந்தாலும் சிறு சிறு வித்தியாசங்கள் காணப்படும். இதன் பெயர் 'பார்த்தீனியம்'. கொத்தமல்லி தல கட்டுடன் கலந்து வருகிறது.

இதன் பூர்வீகம் அமெரிக்கா. ஆனால் நம் நாட்டில் இது ஒரு களைச் செடி ஆகும்.
இது ஆக்டோபர்-நவம்பர் மாதங்களில் பூக்கும். பூக் கப்பட்ட பூக்களில் சிறுசிறு மகரந்தம் போன்ற பொருட்கள் காற்றில் கலந்து ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது.(allergy) விலங்குகளின் உடலில் படும்போது ஒருவகை அரிப்பு ஏற்படுகிறது.
இதனால் ஒவ்வாமை, ஆஸ்துமா ,கரப்பான், குருதிச் செவ்வனு நலிவு(ஈசினோபீலியா) போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
இந்தச் செடியை பசுக்கள், ஆடுகளும் போன்ற கால்நடைகள் உணவாக உட்கொள்ளும்போது பால் கசப்பாக மாறுவதுடன் சிறிதளவு நச்சுத்தன்மையும் கொண்டிருக்கும்.
                     கொத்தமல்லி 1
                      பார்த்தீனியம் 2



இது கொத்தமல்லி இலை போலவே இருந்தாலும் வித்தியாசங்கள் காணலாம் . இலைகளில் பூக்கள் வெள்ளை நிறத்தில் காணப்படும்.
மக்கள் வித்தியாசம் அறிந் வாங்கி பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பிளாஸ்டிக் யூஸ் பன்றீங்கலா? இதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று உலகமெங்கும் பிளாஸ்டிக் சர்வ சாதாரணமாக
உபயோகிக்கப்படுகிறது. அதன் மீள் சுழற்சியே ஒரு சில நாடுகளில் கேள்விக்குள்ளாக்கப் பட்டுள்ளது. கடலில் மலைப்போல் சேர்ந்த பிளாஸ்டிக் குப்பைகளை என்ன செய்வது எனத் தெரியாமல்  அகற்றுவது பற்றி யோசிக்க படுகிறது.

இவ்வளவு சிக்கல்கள் மத்தியிலும் நாம் பிளாஸ்டிக் உபயோகிக்காமல் இருப்பதாக இல்லை. எமது வாழ்விலும் அது தனி இடத்தைப் பிடித்துவிட்டது. அதன் உறுதித்தன்மை மற்றும் மலிவாக கிடைப்பதே இதற்குக் காரணமாகும்.

நீங்கள் உபயோகிக்கும் பிளாஸ்டிக்கில் இருக்கும் முக்கோண குறியீடுகள் அதன் எண்கள் பற்றி தெரியுமா? இது பெரும்பாலும் பிளாஸ்டிக் பொருட்கள் அடியில் இருக்கும்.

No 1 PET(polyethylene Terephthalate)


இது மினரல் வாட்டர் போத்தலகளிலும், மென் பானங்கள் குளிர்பானங்கள் சமையல் எண்ணெய் போத்தல்களிலும்   உபயோகிக்கப்படுகிறது. ஆனால் உபயோகிக்கப்படும் பொருட்களுடனும் அதிக சூடு , குளிர் காரணமாக பிளாஸ்டிக் ஊடுருவோ அல்லது பாக்டீரியா தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. மீள் சுழற்சி செய்யலாம். (Recycle). மீள் பாவனை செய்யக் கூடாது.(reuse).

No2 HDPE(high density polyethylene]


இது பால், சுத்தமாக்கும் திரவங்கள், சலவை திரவங்கள், வெளிற்றும் திரவங்கள், ஷாம்பு போத்தல்களிலும்
உபயோகிக்கப்படுகிறது. இது கடினமான தன்மை உடையதால் குளிர் சூடு தாங்கும் வகை ஆகும். எனினும் சுத்தம் செய்ய மறக்கக் கூடாது. சில பாடசாலை போத்தல்களிலும் இவ்வகையில் உண்டு. இது மீள் சுழற்சி செய்யலாம். மீள்ப்பாவனை செய்யலாம்.

No3 PVC(polyvinyl chloride]


இது  இனிப்பு தட்டுக்கள், பழங்களை சுற்றும் bubble foil, foil paperகளாகவும்,
சமையல்எண்ணை போத்தல்கள், சில குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் செய்யவும், பிளாஸ்டிக் குழாய்களிலும், (PVC pipe) நீர் குழாய் களிலும் பயன்படுகிறது.
இதற்கு இன்னொரு பெயர் poison plastic அதாவது நஞ்சு பிளாஸ்டிக். இதில் எண்ணிலடங்கா நச்சுப்பொருட்கள் பாவிக்கும் திரவங்களுடன் விட வாய்ப்புண்டு.
இதில் 1% குறைவானpvc வகையை சேர்ந்த பிளாஸ்டிக் வகைகளை மாத்திரம் மீள்சுழற்சி செய்யலாம்.
மற்ற வகைகளை மீள் சுழற்சி செய்யவோ மீள் பாவனை செய்யவோ முடியாது.

No4-LDPE (low density polyethylene)


அழுத்தும் போத்தல்கள்(sauce mayonnaise bottles)ஷாப்பிங் பேக் , சாக்குகள் போன்றவை செய்வதற்கு பயன்படுத்தப்படுகிறது.
மற்ற வகைகளுடன் ஒப்பிடும்போது குறைந்த நச்சுத்தன்மை கொண்டது. பாவனைக்கும் உகந்தது. மீள் பாவனைக்கும் உகந்தது. பொதுவாக பெரும்பாலும் மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுகிறது.

No5 -PP(polypropylene)


இது பாரமற்ற தன்மையும் சூடு பிடித்து நிற்கும் தன்மை கொண்டது. இது குழந்தை டயாபர் களிலும் , வாளி, பிளாஸ்டிக் போத்தல்களின் மூடி, மார்ஜரின் யோகட் கப் வகைகளிலும்
உருளைக்கிழங்கு சிப்ஸ் பாக்கெட்,ஸ்ட்ரா போன்றவைகளை செய்வதற்கு உபயோகிக்கப்படுகிறது. இது ஈரப்பதனை உறிஞ்சும் தன்மையும் சாப்பாடு பொருட்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும் தன்மையும் கொண்டது. இது மீள்சுழற்சி குரியதாக பெரும்பாலோனாரால் ஏற்றுக்கொண்ட பட்டுள்ளது. மீள் பாவனையும் செய்யலாம்.

No6 PS (polystyrene)



இது விலை மலிவானது. பாரம் குறைந்தது. இது ஒருமுறை பாவிக்க கூடிய பிளாஸ்டிக் கப், சாப்பாடு பொதி, முட்டை பொதி, பிளாஸ்டிக் கரண்டி, முள்ளுக் கரண்டி, போன்றவைகள் தயாரிக்கப் பயன்படுகிறது.

இது இலகுவாக உடையக் கூடியது. இதில் 'ஸ்டய்ரின்' எனும் திரவம் உணவில் சூடு பண்ணும்போது கசியும் தன்மை கொண்டது. இதில் இருக்கும் கெமிக்கல்கள் மனித ஆரோக்கியத்திற்கு ஊறு விளைவிப்பதுடன் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தவல்லது.
இதற்கு மீள் சுழற்சிக்கு சந்தை வாய்ப்புக்கள் குறைவு. மீள்பாவனைக்கும் பெரிதளவாக ஏற்றது அல்ல. தவிர்ப்பது நலம்.


No 7 other (BPA, polycarbonate and LEXAN)


இது குழந்தை பாட்டில்கள், கோப்பைகள், நீர் உலர் போத்தல்கள், காரின் உதிரிப் பாகங்கள் செய்வதற்கும் பயன்படுத்தப்படும்.
இது மீள் பாவனை மீள் சுழற்சிக்கு வரையறுக்கப்படாத து. இதில் இருக்கும் விஷத்தன்மை சாப்பாட்டு பொருட்களுடன் ஊடுருவக் கூடியது.இதில் 'BPA' என்ற நச்சுப் பொருள் அடங்கியுள்ளது.BPA என்பது மூளை வளர்ச்சியையும் உடல் வளர்ச்சியையும் பாதிக்கும் பொதுவாக குழந்தைகளுக்கு இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.
இதில் சூடாகவோ குளிராகவோ பொருட்கள் பரிமாறப்படும் போது நச்சு கசியும் வாய்ப்புள்ளது. உங்கள் குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். இதனை மீள்சுழற்சி பண்ண முடியாது.

1,2,4 வகையான பிளாஸ்டிகள் பாதுகாப்பான தெரிவாக இருந்தாலும் பிளாஸ்டிக் பாவனையை குறைப்பது நல்லது. இதன் கோட்(code) களை புரிந்து  தெரிவு செய்துகொளங்கள். எவ்வளவுதான் நீங்கள் தெரிவு செய்து வாங்கினாலும் சூடு, குளிர் போன்ற காரணிகள் பிளாஸ்டிக்கில் தாக்கம் செலுத்துவதால் அதை தவிர்த்து வேறு ஊடகத்திற்கு மாறுவதே சிறந்தது.

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா??

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா வடிகட்டி-உணணும் திமிங்கலங்கள் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டை உட்கொள்கின்றன, ஒரு...