Latest news in tamil தமிழில் சிறந்த அறிவியல்பூர்வமான தகவல்கள்
உலகின் பயங்கரமான ஆபத்துகள் நிறைந்த இடங்கள். World most dangerous places
நாம் உலகின் அழகிய அதிகம் கண்டு களிக்கிறோம். அழகு இருந்தாலே ஆபத்தும் இருக்கும் என்பது நமக்கு தெரிந்த விடயம் தானே... இந்த அழகான பூவுலகில் அமைதியாகவும் ரகசியமாகவும் இருக்கும் சில ஆபத்தான இடங்கள் பற்றி பார்ப்போமா?
டெத் வெலி- அமெரிக்கா
Death Valley- USA
இந்த இன் உலகின் பேக்கிங் அவன் (baking oven) போன்ற இடம் இது. ஏனெனில் உலகின் அதி உயர் வெப்பநிலை பதிவாகியுள்ள இடம் இதுவாகும். இந்தப் பாலைவன பகுதியில் அதிகூடிய வெப்பம் 134*f (56.7*c) ஆகும். நீங்கள் எவ்வளவு வலிமை உள்ளவராக இருப்பினும் விரைவில் உடலின் நீர் தன்மையை இழந்து மரணத்தை தழுவ காத்திருக்க வேண்டியதுதான்... இந்த இடத்தின் ஆகக்கூடிய உயிர் வாழும் நேரம் 16 மணித்தியாலங்கள் ஆகும்.
டனாகில் பாலைவனம்- எரிட்ரியா
Danakil desert- Eritrea
உலகின் சுட்டெரிக்கும் இடங்களில் இதுவும் ஒன்று .இதன் அதி கூடிய வெப்பநிலை பதிவு 120*f (50*c) ஆகும். இங்கே இயங்கு நிலையில் உள்ள எரிமலைகள் வெந்நீரூற்றுக்கள் அதிலிருந்து வெளிவரும் நச்சு வாயுக்கள் என எண்ணிலடங்கா ஆபத்துக்கள் உண்டு. இதை உலகில் உள்ள நரகம் என வர்ணிக்கிறார்கள். இந்த இடத்துக்கு தகுந்த அனுபவம் உள்ள சுற்றுலா ஆலோசகர் இல்லாமல் விஜயம் செய்வது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.
சினா பங்க் எரிமலை -இந்தோனேஷியா
Sinabung volcano-Indonesia
இது இந்தோனேசியாவின் சுமாத்திரா பகுதியில் இயங்கு நிலையில் இருக்கும் ஒரு எரிமலையாகும். எரிமலை வெடிக்கும் நிகழ்வு இங்கே அடிக்கடி நடைபெறுகிறது. இதனால் இங்கே சுற்றியுள்ள கிராமங்களில் மக்கள் வெளியேறிய வண்ணமே உள்ளனர். ஏனெனில் எரிமலை வெடிக்கும்போது சுற்றியுள்ள கிராமங்கள் எரிமலை குழம்புகளாலும் கரிகளாலும் சூழப்படுவதுதான். இது 2010,2013,2014 மற்றும் 2015ம் ஆண்டுகள் நடந்தேறி வந்துள்ளன. கடைசியாக 2016 பிப்ரவரி 27ஆம் திகதி எரிமலை வெடித்து சிதறியது. எரிமலை வெடிக்கும்போது கடும் புகையுடன் கூடிய எரிமலை வாயுக்கள், கற்கள் ,எரிமலை குழம்பு மற்றும் கரி ஆகியன 2500 மீற்றர் உயரத்திற்கு வீசியபடி ஆக்ரோஷமாக வெளிவருகிறது. நாளை இந்த இடத்தில் என்ன நடைபெறும் என்று யாருக்கும் தெரியாது.
வாஷிங்டன் மலை -அமெரிக்கா
Mount Washington-USA
உலகின் அதிக வேகத்தில் காற்று வீசும் இடம் என உலக அளவில் பதியப்பட்டுள்ள இடம் இதுவாகும். இங்கே மணித்தியாலத்திற்கு 203 மைல் வேகத்தில் காற்று வீசுகிறது(327km/h). இங்கே வேகமாக காற்று வீசுவது மட்டும் அல்ல குறைந்த வெப்பநிலை கொண்ட சூழலாகவும் காணப்படுகிறது.-40 எனும் மறை வெப்பநிலை கொண்ட உறைய வைக்கும் காலநிலையும் உக்கிரமான பனிப்பொழிவும் காணப்படும் மிகவும் அபாயகரமான இடமாகும். இதன் உயரம் 6288அடி(1917 மீற்றர்) ஆகும். மவுண்ட் வாஷிங்டன் என்பது உலகின் உயரமான சிகரங்களில் ஒன்றாகும். எவரெஸ்ட் மலைச் சிகரத்தின் உச்சியில் அனுபவங்களை ஒத்த அனுபவங்கள் இங்கே கிடைகின்றது.
பாம்புத் தீவு -பிரேசில்
Snake Island-brazil
பிரேசில் கரையோரத்தில் ஒதுக்குப்புறமாக மறைந்திருக்கும் இந்த தீவு உலகின் மிக ஆபத்தான இடம் என பரவலாக அறிய முடிகிறது. இந்த இடத்தில் உலகின் மிகக் கொடிய விஷம் கொண்ட பாம்புகள் காணப்படுகின்றன. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 5 பாம்புகள் என ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர். இங்கே பாம்புகளால் தாக்கப்பட்டு பலர் இறந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் இங்கே உள்ள கலங்கரை விளக்கத்தின் பாதுகாவலர் ஒருவர் தாக்கப்பட்டு இறந்த பின்னர் பிரேசிலிய அரசாங்கம் இந்த இடத்தில் நடை பயணம் மேற்கொள்வதை தடை செய்துள்ளது.
மதிதி தேசிய பூங்கா-பொலிவியா
Madidi National Park-Bolivia
முதல் பார்வைக்கு அழகிய ஒரு இடம் போன்று இது தென்பட்டாலும் இது முற்றிலும் பயங்கரமான ஒரு இடமாகும். ஏனெனில் இங்கே விஷமுள்ள பயங்கரமான சில நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. இந்த பூங்காவில் உள்ள எந்த ஒரு தாவரத்தை தொட்டாலோ முகர்ந்தாலோ அது பயங்கரமான சொறிகளையும் சிறங்குகளையும் மயக்கத்தை ஏற்படுத்தும். சிறிய புண்கள் காயங்கள் உடம்பில் இருப்பின் அதன் ஊடாக இந்த நுண்ணுயிர்கள் புகுந்து தாக்கி உயிர் ஆபத்துகளையும் ஏற்படுத்தலாம்.
வெலி ஒப் டெத் - ரஷ்யா
Valley of death-Russia
ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதியில் கம்கட்சா என்ற இடத்தில் இந்த சாவு சமவெளி உள்ளது. இது அங்குள்ள பிரபலமான வெந்நீரூற்று சமவெளிக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த இடத்தில் செறிவு மிகுந்த நச்சுவாயு வெளிப்படுவதால் சுற்றுச்சூழலும் நச்சு டைய சூழலாகவே காணப்படுகிறது. இங்கிருக்கும் மரங்களும் உயிரினங்களும் வெகு சீக்கிரத்தில் இறந்து விடும் நிலையில் மனிதன் சென்றால் நிலைகுலைந்து காய்ச்சல் ஏற்பட்டு மயக்க நிலையை அடைந்து குளிர்ந்த நிலைக்கு மாறி பின்னர் இறப்பை அடைகிறான்.
பிகினி அடோல்- மார்ஷல் தீவுகள்
Bikini atoll- the Marshall Island
இந்த கடற்கரை தீவு எவ்வளவு அழகாக உள்ளது இதில் என்ன ஆபத்து உள்ளது என்று நினைக்கிறீர்களா? இங்க தீவில் எண்ணிலடங்கா அணுச் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. எனவே அழகான இந்த தீவு அணு கதிர்களின் குப்பை தீவாக உருமாறியுள்ளது. கண்ணுக்கு தெரியாத இந்த அணுக்கதிர் தாக்கத்தால் இங்கு வாழும் உயிரினங்கள் கட்டாயமாக தாம் வாழும் இடத்தை விட்டுச் செல்லும் சூழல் உருவாகியுள்ளது. இந்த உயர் கதிர்வீச்சின் எதிரொலியாக இந்தக் கதிர்கள் உயிரினங்களில் பட்டால் கேன்சர் வருவது உறுதி.
எலிபன்ட் கிங்டோம்- தாய்லாந்து
Elephant Kingdom-Chonburi, Thailand.
இங்கு முதலைப் பண்ணை வைத்து நடத்தும் ஒருவர் பிளாஸ்டிக் பெரல்களால் இணைக்கப்பட்டு கூரைகளையும் கொண்ட ஒரு சிறிய படகை வாடகைக்கு விடுகிறார். கையில் ஒரு மீன் தூண்டில் போன்ற உபகரணமும் கொடுக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் முதலைகள் வாழும் ஏரிகளில் இந்த படகின் மூலம் சென்று மீன் தூண்டில்கள் மூலம் அவைகளுக்கு இறைச்சித் துண்டுகளை வழங்கி மகிழலாம். சிலர் மீன் தூண்டிலை இறைச்சி துண்டுடன் தூக்கும்போது முதலைகள் பாய்ந்து உணவை கவ்வும் காட்சிகளை காணலாம். மிகவும் பயங்கரமான இந்த விளையாட்டில் சற்றே சறுக்கினாலும் உயிராபத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அபார் டீப்ரஷன் - எத்தியோப்பியா
Afar depression- Ethiopia
எர்டா அலி எனும் இந்தப் பிராந்தியத்தில் இருக்கும் ஒரு எரிமலையால் அபார் என்று பகுதியை அடிக்கடி ஆழமாக குலுங்கி கொண்டிருக்கிறது. இந்த எரிமலை உச்சியில்ரி இரண்டு லாலா ஏரிகள் இருப்பதால் இது நிகழ்கிறது. இந்த எரிமலைக் குழம்புகளில் அளவு கூடி குறைவதால் இந்த நிலத்தின் மேற்பரப்பு மேலும் கீழுமாக மாறிக்கொண்டே இருக்கிறது. தொடர்ந்து பூகம்பங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
லேக் நெட்ரோன்- தன்சானியா
Lake natron- Tanzania
இது வேற்றுக் கிரகத்தில் ஒரு பகுதி போன்று தோற்றமளித்தாலும் உண்மையில் தன்சானியாவில் உள்ள லேக் நெட்ரொன் என்ற ஏரியின் புகைப்படமாகும். இந்த ஏரியில் அல்காலி உப்பு என்ற ஒருவகையான நஞ்சு வெளிப்படுவதால் உயிரினங்கள் வாழமுடியாது இறந்துவிடும். இது மேனியில் பட்டாலே ஆபத்துதான். எனவே இந்த ஏரியில் நீச்சலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியில் இருந்து ஹைட்ரஜன் சல்பைடு என்ற ரசாயனத்தினால் வெளி வரும் துர்நாற்றமானது பார்வையாளர்களை இங்கிருந்து சீக்கிரமே வெளியேற்றி விடும். அந்தளவு துர்மணம் கொண்டது.
உலகின் பிரபல்யமான உணவு வகைகள் world most famous foods
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு கலாச்சாரம் உண்டு. கலாச்சாரத்தில் ஒரு பங்கு உணவு எனலாம். உணவுக்கு மயங்காத மனிதனே இல்லை. ஒரு சுவை பிடிக்கவில்லை என்றால் மற்றொரு சுவை கட்டாயமாக பிடிக்கும். அப்படி வித விதமாக சமைக்கப்படும் உணவுகளை பற்றி உங்களுக்கு தெரியுமா? உலகின் சில நாடுகளில் மனிதர்களால் விரும்பி சாப்பிடப்படும் சில உணவு வகைகளை பார்ப்போமா?
அவுஸ்திரேலியா-மீட் பை (Australian meat Pie)
அவுஸ்திரேலியாவில் மிகப் பிரபலமான உணவாகும். அங்குள்ள மக்கள் இதனை விரும்பி சாப்பிடக்கூடிய வர்களாகவும் இருக்கிறார்கள். இதை உணவகங்களில் தக்காளி சாஸ் தொட்டு சாப்பிடுவதில் அவர்களுக்கு அலாதி பிரியம்...
அவுஸ்திரியா- அப்பெல்ஸ்டூடல் (Austrian apfelstrudel)
இதனை வியட்நீஸ் அப்பெல்ஸ்டூடல் எனவும் அழைப்பர். இது அமெரிக்காவின் ஆப்பிள் பையை ஒத்த ஒரு உணவாகும். புளிப்பு சுவையுடைய பின் பழம் இனிப்பு சுவையுடைய மாவினால் சுற்றப்பட்டு இருக்கும்அருமையான சுவை கொண்டது. இதை இவர்கள் மதிய சிற்றுண்டியாக சாப்பிடுகிறார்கள்.
பிரேசில்- புடிம் (Brazilian puddim)
இது புடின் வகையை சேர்ந்தது போல் காணப்பட்டாலும் அதை விட மென்மையான பஞ்சு போன்று உள்ள ஒரு டெசர்ட் வகை ஆகும். பிரேசிலில் எல்லா உணவுகளிலும் இது கிடைக்கும்.
பின்லாந்து- ஸ்கூவிகி சீஸ் (Finland squeaky cheese)
இதை "ழைபஜுஸ்டோ" என்ற பெயரிலும் அழைப்பர். பாலாடைக்கட்டியை பேனில் இருபக்கமும் பொரித்து க்ளவுட் பெரி ஜாமுடன் மாலைப் பொழுதில் காபியுடன் பரிமாறப்படுகின்றது. இனிய சிற்றுண்டி வகை ஒன்றாகும்.
இத்தாலி-பொரித்த ஒளிவ் (Italian fried olives)
இத்தாலி என்றாலே நமக்கு பாஸ்தாவும் பீட்சாவும் தான் நினைவுக்கு வரும். ஆனால் ஆலிவ் காயில் வித்தியாசமான பூரணங்களை நிரப்பி அதைப் பொறுத்து சாப்பிடும் இன்னொரு பிரபலமான உணவு வகையும் அங்கு உண்டு. இந்த சுவைக்கு அலாதியான ரசிகர் பட்டாளமும் உண்டு.
போலந்து-க்ளொட்நிக் (Poland chlodnik)
இது வெயில் காலங்களில் புத்துணர்ச்சியை அளிக்கக் கூடிய குளிர்மையான ஒருவகை இளம் சிவப்பு நிற சூப் வகையாகும். இதற்கு பீட்ரூட் வெள்ளரி யோகட் என்பன சேர்க்கப்படுகிறது. அவித்த முட்டையின் அலங்கரிக்கப்படுகிறது. மிகவும் சத்தான சுவையான உணவு வகையாகும்.
இந்தியா-மசாலா தோசை (Indian masala dosa)
மசாலா தோசை எனப்படும் இந்திய உணவு வகை இந்தியாவில் மட்டுமல்ல இலங்கை ,மலேசியா போன்ற தமிழர் வாழும் இடமெல்லாம் பிரபலமானதாகும். அரிசியால் தயாரிக்கப்பட்ட உருளைக்கிழங்கு சேர்க்கப்பட்டு தேங்காய் சட்னியில் சுடச்சுட மொறுமொறுப்பாக இருக்கும் இதன் சுவையை சொல்லவும் வேண்டுமா?
சுவீடன்-சாக்லேட் (Sweden chocolate)
இங்கே தான் முதலில் சாக்லேட் பிறந்த ஊர் என்று கூறலாம். இங்கே உள்ளவர்கள் சுவையான சாக்லேட் எப்படி செய்வது என்ற ரகசியத்தை அறிந்து வைத்துள்ளனர். பால் சாக்லேட் நட்ஸ் சாக்லேட் என பல வெரைட்டிகள் இங்கு உண்டு. சுவீடன் வந்தால் சாக்லெட் சாப்பிட மறந்து விடாதீர்கள்.
தாய்லாந்து-டொம் யம் சூப் (Thailand-Tom Yum Soup)
டொம் யம் என்றால் புளிப்பு காரம் என்ன பொருள். தாய்லாந்தின் பிரபலமான உணவு வகை. இதில் பால் சேர்க்கப்பட்ட ஒரு வகையும் பால் சேர்க்கப்படாத ஒரு வகையும் உண்டு. நம்மூர் ரசத்துக்கு ஒத்துப் போகிறதோ..
மத்திய கிழக்கு நாடுகள் -ஹம்மூஸ்
( Middle East countries- hummus)
இது கடலை (பட்டாணி) ஆலிவ் ஆயில், சிவப்பு மிளகாய் தூள், எலுமிச்சம் சாறு போன்றவைகள் சேர்க்கப்பட்டு நன்றாக அடிக்கப்பட்டு பெறப்படும் கலவையாகும். கிட்டத்தட்ட மயோனிஸ் போன்றது. பிரட் ரோஸ்ட் போன்றவற்றுக்கு தொட்டு சாப்பிடலாம். மத்திய கிழக்கு நாடுகளில் பிரபல்யமானது.
தாய்லாந்தில் குகையில் மாட்டிக்கொண்ட சிறுவர்கள் நடந்தது என்ன? Cave rescue operation in Thailand..
தாய்லாந்தை சேர்ந்த 12 கால்பந்தாட்ட சிறுவர்களும் ஒரு கால்பந்து பயிற்சியாளரும் பயிற்சிகளை முடித்து விட்டு அதே அணியில் உள்ள ஒரு சிறுவனின் பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடலாம் என நினைக்கின்றனர்.
எனது தாய்லாந்தின் வடபகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலாத் தலமான "தாம் லுவாங்" என்ற குகைக்கு சென்று வர தீர்மானித்தனர். இது தாய்லாந்தில் "சியாங் ராய்" என்ற பகுதியில் அமைந்துள்ளது.
அந்த குகைக்குள் நுழைய அனைவரும் அனுமதி எடுத்து உள்நுழைகையிலேயே அவர்கள் வாழ்வில் சற்றும் எதிர்பாராதவிதமாக அந்த அசம்பாவிதம் நடக்கிறது.
வளைவும் நெளிவும் ஆன அலை போன்ற வடிவம் உள குகையில் நுழைந்து சுமார் நாலு கிலோ மீட்டர் தூரம் சென்ற வேலை எதிர்பாராத விதமாக மழை பெய்தது எனவே குகை நீரால் நிரம்பியது.
எனவே இவர்கள்
சிறுது மேட்டுப் பகுதியில் சென்று அமர்ந்திருக்க மழை விட்டுவிட்டு பெய்தது. குகை நீரோ வடியவேயில்லை.
கிட்டத்தட்ட 13 நாட்கள் உண்ண உணவின்றி இருட்டில் எங்கும் போக வழியின்றி அங்கிருக்கும் நீரைக்குடித்து ஒரே இடத்தில் அமர்ந்தபடி இருந்துள்ளனர்.
இதற்கிடையில் வெளியில் குழந்தைகளை காணாத பெற்றோர்கள் தேடி குழந்தைகள் குகையினுள் போனதை கண்டுபிடிக்கிறார்கள். அரசாங்கத்திற்கு தகவல் பறக்கிறது தேடுதல் வேட்டை ஆரம்பிக்கின்றது. அரசாங்கத்தின் கடற்படைகள் தேட எந்தத் துப்பும் கிடைக்கவில்லை. விஷயம்சர்வதேச மயமாகிறது.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா என சர்வதேச நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 1000 பேர் தேடுதல் வேட்டையை மேற்கொள்கிறார்கள். காணாமல் போனோர் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்ற தகவலே தெரியவில்லை அனைவருக்கும் பீதி கிளம்புகிறது.
குகையில் நீரை பம்ப் பண்ணி வெளியே எடுக்க திட்டம் போடப்படுகிறது. ஒருபுறம் சுழியோடிகளும தேடுகின்றனர். இன்னொருபுறம் குகையில் ஏதும் துளைபோட்டு தேடலாம் என்றாலும் குகை மொத்தமாகச் சரிய வாய்ப்புள்ளது என அத்திட்டம் போடப்பட்டு பின்னர் கைவிடப்படுகிறது.
ஒரு வாரு 12 13 நாட்களுக்கு பிறகு சிறுவர்கள் இருக்கும் இடத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த சில வீரர்கள் கண்டுபிடிக்கின்றனர். எனினும் கண்டுபிடிக்கப்பட்ட சிறுவர்கள் எங்கனம் எடுப்பது? சவால் வலுக்கிறது...
பின் ஒருவாறு சிறுவர்களுக்கு நீச்சலின் மிகவும் அடிப்படையான விடயங்கள் மாத்திரம் கற்பிக்கப்பட்டு சிறுவர்கள் நன் நான்கு பேராக பிரிக்கப்படுகின்றனர்.
ஒரு சிறுவருக்கு இரு சுழியோடிகள் வீதம் ஒரு சுழியோடி முன்பக்கம் ஒக்சிசன் சிலிண்டர் உடன் செல்ல பின்பக்கம் மற்ற சுழியோடி காவலாக வருகிறார். கயிறுகளால் இவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.
குகையினுள் உள் நீந்த ஆறு மணி நேரம் வெளிவர 5 மணி நேரம் எடுக்கிறது. அந்தளவுக்கு சவாலான மிகவும் குறுகலான குகை...
குறுகலான பாதையில் ஆக்சிஜன் சிலிண்டரை கொண்டு செல்வது ஒரு பெரிய சவாலாகவே இருந்தது. எப்படியோ உலக மக்களின் பிரார்த்தனைகளாலும் இறைவன் உதவியாலும் நான்கு நான்கு பேராக
மீட்கப்படுகின்றனர்.
இதில் சோகமான விடயம் என்னவெனில் சிறுவர்களை தேடுவதற்கு உதவிக்காக வந்த ரிடையரான ஒரு கடற்படையைச் சேர்ந்தவர் இறந்தது தான். தற்போது சிறுவர்கள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறுகின்றனர். சிறுவர்கள் பெற்றோர் ஊர் மக்கள் உலக மக்களும் மகிழ்ச்சி அடைகின்றனர்... அவர்கள் உயிரோடு மீட்க பட்டதை எண்ணி...
இந்தக் கதையில் நாம் பெறும் படிப்பினைகள் என்னவெனில்
- மனிதாபிமானமும் நல்ல மனிதர்களும் உலகில் இன்னமும் இருக்கின்றனர்
- விண்வெளிக்கு செல்ல இயந்திரம் கண்டுபிடித்த மனிதன் ஒரு குகையில் சிக்கியவரை காப்பாற்ற எந்த இயந்திரமும் கண்டுபிடிக்கவில்லை.
- கடவுளின் படைப்பு களில் உள்ள அதிசயங்களும் சவால் களும் எக்காலத்திலும் மனிதனால் விஞ்ச முடியாது. கடவுளுக்கு அடிபணிந்தே ஆக வேண்டும்.
Football எனப்படும் கால்பந்தாட்டத்தை பற்றி நீங்கள் அறிந்ததும் அறியாததும்.. history of Football
உலகின் பல நாடுகளில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து ஆகும். தற்போது 2018ம் ஆண்டுக்கான சாம்பியன் மோதல் நடைபெறும் வேளை அதன் வரலாறு பற்றி உங்களுக்கு தெரியுமா?
1930ம் ஆண்டு முதல் உலக கால் பந்து கிண்ண கோப்பைக்கான போட்டி உருகுவேயில் ஆரம்பிக்கப்பட்ட"Federation International e de Football Association"(FIFA) என்ற நிறுவனத்தால் நடத்தப்பட்டது. அதிலிருந்து நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இது நடைபெற்றது இரண்டாம் உலக யுத்த நேரத்தை தவிர..
சர்வதேச ரீதியில் போட்டிகள் நடத்தப்பட்டு இறுதியில் 32 தேசிய அணிகள் தெரிவு செய்யப்படும். இது ஒலிம்பிக் உலக கிண்ணம் போல் வயதில்லை கட்டுப்பாடுகள் இல்லாமல் தளர்ந்த சட்டங்களை கொண்டதால் உலகின் சிறந்த போட்டியாளர்கள் இதில் தகுதி காணப்படுவார்கள். எனவே போட்டியும் விறுவிறுப்பாக இருக்கும்.
நடுவர்கள் தேசிய சங்கங்களின் பெயர் பட்டியலுக்கு ஏற்ப தெரிவு செய்யப்படுவார்கள்.
1930-1970 வரை இந்தக் கிண்ணம்' Jules Timer Trophy ' என்று இதனை ஆரம்பித்த பிரெஞ்சுக்காரரின் பெயர் கொண்டு நடத்தப்பட்டது.
1958, 1962 மற்றும் 1970 ஆகிய வருடங்களில் தொடர்ச்சியாக பிரேசில் அணி சாம்பியன் ஆனது ஏற்பட்ட மாற்றத்தின் பெயரில் பழைய பெயர் மாற்றப்பட்டு FIFA WORLD CUP என்ற பெயரில் இன்றளவும் நடந்து வருகிறது.
இதுவரை கிண்ணத்தை சுவீகரித்த உலக சாம்பியன்களின விபரங்களை கீழே காணலாம்
2014ம் ஆண்டு ஜெர்மனி மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கிடையில் நடைபெற்ற போட்டியில் ஜெர்மனி அணி 1-0 என்ற கணக்கில் வெற்றியீட்டியது நடப்பு சாம்பியனாக ஜெர்மனி அணியே உள்ளது.
2018 ம் ஆண்டுக்கான தேடல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.பொறுத்திருந்து பார்க்கலாம் யார் சாம்பியன் என்று...
உலகின் வித்தியாசமான பிறந்தநாள் கொண்டாட்டங்கள். Different birthday celebration around the world..
பிறந்தநாளை சிறப்பித்து வித்தியாசமாக கொண்டாடுவது எப்படி என நாம் யோசித்து புதுமையாக முயற்சிகள் செய்கிறோம். புது வகையான ஆடைகள் புது வகையான உணவுப் பண்டங்கள் என அசத்துகிறோம். ஆனால் கலாச்சார ரீதியாகவே புதுமையாக கொண்டாடப்படும் சில பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
மெக்சிகோ
மெக்சிகோவில் பிறந்த நாள் கொண்டாடப்படும் நபருக்காக ஒரு பினாடா செய்து தொங்க வைக்கப்படும்.பினாடா என்றால் கடதாசியால் செய்யப்பட்ட ஒரு காகித கூடு ஆகும். அதனுள் சிறு விளையாட்டு பொருட்களும் ,இனிப்புகளும் இருக்கும். பிறந்தநாள் கொண்டாடுபவர் அதை அடித்து உடைத்து இனிப்பு மழை பொழிய கொண்டாடுவார்.
கனடா
கனடாவில் பிறந்த நாள் கொண்டாடும் நபரின் மூக்கில் வெண்ணை அல்லது பிசுபிசுப்பான ஏதாவது ஒரு பொருள் தடவப்படும். அது அவர்களின் அந்த வருடத்தின் கெட்டதை விலக்கி நல்லது நடைபெற வேண்டும் என செய்யப்படும் ஒரு சம்பிரதாயம் ஆகும்.
அயர்லாந்து
இங்கே பிறந்தநாள் கொண்டாடுபவர் பிறந்தநாள் தினத்தன்று தலைகீழாக தொங்க வைக்கப்பட்டு நிலத்தின் லேசாக தலை முட்டப்பட்டு எடுக்கப்படும். வருடத்துக்கு ஒருமுறை இப்படி செய்வது நல்லதைக் கொண்டு வரும் என்பது மக்களின் நம்பிக்கையும் சம்பிரதாயமும் ஆகும்.
ஜெர்மனி
ஜெர்மனியில் ஒரு சில இடங்களில் ஒருவருக்கு 30 வயது ஆகிவிட்டால் அங்கிருக்கும் சர்ச் அல்லது நகர மண்டபத்தில் முன் படிகளை கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்ய வேண்டும். இதனால் சுத்தமாக நாட்டையும் வீட்டையும் வைக்க வேண்டும் என்ற பாடம் கற்பிக்கப்படுகிறது.
கரீபியன் தீவுகள்
கரி பியாவின் ஜமைக்காவின் சில பகுதிகளில் பிறந்தநாள் கொண்டாடும் நபரின் மேல்
நண்பர்கள் உறவினர்கள் ஆகியவர்கள் மாவு வீசி கொண்டாடுகிறார்கள். கேளிக்கையை கூட்டுவதற்காக தண்ணீரும் மாவும் பிசைந்து ஊற்றப்படுகிறது.
வெனிசுவேலா மற்றும் அமெரிக்கா
வெனிசுவேலாவில் பிறந்தநாள் கொண்டாடும் நபரின் முகத்தில் முழு கேக்கும் அடித்து கொண்டாடப்படும். வரப்போகும் வருடத்தின் நன்மை அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்து அவ்வாறு நடத்தப்படும்.
அமெரிக்காவிலும் கிட்டத்தட்ட அதே போன்றுதான். பெற்றோர்களால் மேலதிக கேக்குகள் தயாரிக்கப்பட்டு குழந்தைகள் மேல் அதை வீசியும் பீய்த்து எறிந்தும் தமது ஆசைகளை தீர்த்துக் கொள்வார்கள் .
சீனா
சீனாவில் பிறந்தநாள் கொண்டாடும் நபருக்கு ஒரு தட்டு நிறைய நீளமான நூடுல்ஸ் சாப்பிட வழங்கப்படுகிறது. ஏன் அந்த நாளில் நீளமான நூடுல்ஸ்சாப்பிடுவது அவர்களின் ஆயுளை நீட்டிக்கும் என நம்பப்படுகிறது.
வியட்நாம்
வியட்னாமில் ஒவ்வொரு புதுவருடத்திலும் தமது பிறந்த நாளை மக்கள் கொண்டாடி மகிழ்வர். அதற்கு 'டெட்' என்று சொல்லப்படும். அவர்களைப் பொறுத்தவரை உண்மையான பிறந்த நாளை யாரும் கணிப்பது கஷ்டமானது. எனவே ஒவ்வொரு வருடமும் வயது ஏறுவதை புதுவருடத்தில் கொண்டாடுகிறார்கள். குழந்தைகளுக்கு இந்நாளில் பெற்றோர்களால் சிவப்பு நிற க
வரில் வைத்து பண அன்பளிப்புகள் வழங்கப்படும்.
அர்ஜென்டினா
இங்கே குழந்தைகள் எத்தனை வருட பிறந்த நாள் என்பதை பொறுத்து அத்தனை தடவைகள் அவர்களின் காதுகள் இழுக்க படுகிறது.
ஆஸ்திரேலியா
இங்கே 'fairy bread' என்ற உணவுபிறந்தநாளை யொட்டி தயாரிக்கப்படுகிறது. அது பிறந்தநாள் கொண்டாடும் நபருக்காக தயாரிக்கப்படும் அலங்காரமான ஒரு வகையான பிரட் வகை ஆகும்.
Subscribe to:
Posts (Atom)
திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா??
திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா வடிகட்டி-உணணும் திமிங்கலங்கள் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டை உட்கொள்கின்றன, ஒரு...

-
மனிதன் சராசரியாக 10 செக்கன்களுக்கு ஒரு முறை கண் சிமிட்டுகிறான் கண்கள் மற்ற உறுப்புகளை விட காயம்பட்டால் விரைவில் குணமாகும் தன்மை உடையத...
-
"உப்பில்லா பண்டம் குப்பையிலே"என்றொரு பழமொழி உண்டு. நமக்கு தெரிந்தது ஒன்றோ இரண்டோ வகை சமையல் உப்புக்கள் தான். ஆனால் அதில் பல வகை...
-
கெவ்கென்ஹொப் கார்டன்ஸ் நெதர்லாந்து (Keukenhof gardens Netherlands) இதை உலகின் மிக அழகான இலைத்துளிர் பூங்கா (spring garden) என அழைப...