உலகின் மிக உயர்ந்த மனிதனும் மிக குள்ள மனிதனும்

உலகின் மிக உயர்ந்த மனிதனும் மிக குள்ள மனிதனும்

உலகில் ஒருவரும் உயரமானவரை பார்த்து குள்ளமானவர் ஏங்குவதும் குள்ளமான வரை பார்த்து உயரமானவர்ஏங்குவதும்  எங்கும் நடப்பதுதான். சாதாரண உயரம் பெற்றிருப்பது கூட ஒரு வரம்தான்.
இங்கே நான் குறிப்பிட உள்ளவர்களைப் பார்த்த பிறகு யாரும் யாரையும் பார்த்து ஏங்க மாட்டீர்கள். ஏனெனில்  அசாத்திய உயர குள்ளர்களை பார்க்கப் போகிறீர்கள்.



பெயர்-சுல்தான் கோசென்
உயரம்-251cms/8ft
இடம்-துருக்கி(அங்காரா)
கண்டறியப்பட்ட தினம்-9 Feb 2011

இவர் ஒரு பகுதிநேர விவசாயி. இவரது மூளையின் வளர்ச்சி சுரப்பி பகுதியில் ஏற்பட்ட ஒரு சிறு கட்டியினால் அந்தப் பகுதி பாதிக்கப்பட்டு அதிகமான வளர்ச்சி ஹார்மோன் வெளியேற்றப்பட்டு இவர் அதிக உயரமும் நீண்ட கைகளும் வலியுள்ள எலும்புகளும் மூட்டுக்களும் பெற்றார்.
பின் 2010ல் அமெரிக்காவில் ஒரு மருத்துவமனையில் சிறிய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதால்
வளர்ச்சி ஹார்மோன் தடைபட்டது.
இவரது குடும்பத்தில் ஐந்து பேர் இருப்பதாகவும் இவரைத் தவிர மற்றவர்கள் சாதாரண உயரத்தின் இருப்பதாகவும் இவர் அதீத உயரத்தினால் பாடசாலைப் படிப்பை முடிக்க முடியாமல் போல் பகுதிநேரவிவசாயம் செய்து குடும்பத்திற்கு உதவுகிறார்.
மிக உயரமாக இருப்பதால் தனது தாய்க்கு திரைச்சீலைகள் மின்குமிழ்கள் மாற்றவும் இவர் உதவுகிறாராம்.
ஆனால் இவரது உயரத்திற்கு துணிகாலனிகள் எடுப்பதற்கு சிரமப்படுவதாகவும் கார்களில் பயணம் செய்வதற்கு சிரமப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
எப்படி இருந்தாலும் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்ததை நினைத்து பூரிப்பு அடைவதாகவும் அவை பற்றி நினைக்கவும் இல்லை என சர்ப்ரைஸ் அடைகிறார்.


உலகின் குள்ள மனிதர்

பெயர்-சந்திரா பகதூர் தாங்கி
உயரம்-54.6cms/அடி9 1/2 அடி
இடம்-நேபாள் (தாங்க்) மாநிலம்
கண்டுபிடிக்கப்பட்டது-feb2012

இவரது தொழில் விவசாயம், கைவினை சருமம் கூட
இவர் நேபாளைபிறப்பிடமாகக் கொண்டவர். இவருக்கு ஐந்து சகோதரர் கள். ஐவரில் மூவர் கிட்டத்தட்ட4 அடி உயரம் கொண்டவர்கள். மற்ற இருவரும் சாதாரணமானவர்கள். இவருக்கு இரு சகோதரிகள் உண்டு . அவர்களும் சாதாரண உயரம் கொண்டவர்கள்.
தற்போது இவர் உயிருடன் இல்லை . இறப்பும் நியூமோனியாவால் ஏற்பட்டது. இவருக்கு அடுத்து வாழும் நிலையில் உள்ள ஒரு குள்ள மனிதரை அடுத்து பார்ப்போம்.

பெயர்-காகேந்திரா தாபா பாகர்
உயரம்-67.08 cms /2.41 ft
இடம்-நேபாள்
கண்டுபிடிக்கப்பட்ட நாள்-21ஏப்ரல்2016


உயர மனிதனும் குல்ல மனிதனும் சந்தித்த போது எடுத்த படம்

No comments:

Post a Comment

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா??

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா வடிகட்டி-உணணும் திமிங்கலங்கள் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டை உட்கொள்கின்றன, ஒரு...