ஆப்பிளின் மேல் ஏன் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது? Why sticker on the Apple?


நீங்கள் சில வேளை ஆப்பிளை சாப்பிடும் போது ஸ்டிக்கரை உரிக்க சிரமப் பட்டிருப்பீர்கள். இதேபோன்று வாழைப்பழம் வேறுவகையான மரக்கறி வகைகளிலும் ஸ்டிக்கர் ஒட்டி இருப்பதை கண்டிருப்பீர்கள். இந்த ஸ்டிக்கர் சொல்லும் அர்த்தம் உங்களுக்கு தெரியுமா? அதில் இருக்கும் இலக்கங்களைPLU code எனக் குறிப்பிடுவார்கள். அதாவது(price lookup number) விலைச்சுட்டெண் என வைத்துக்கொள்ளலாம். இதைப் பார்த்தால் பழம் காய்கறிகளின் தரம் புரியும்.


  1. PLU codeல் 4 இலக்கங்கள் இருந்தால் அது வேதி உரம் கலந்தது . மரபார்ந்த முறையில் உற்பத்தி செய்யப்பட்டது. நிச்சயம் பூச்சிக்கொல்லி உபயோகப்படுத்தி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.(உதாரணமாக 4011 இலக்கமுடைய வேதி உரம் கலந்தது உற்பத்தி செய்யப்பட்ட ஒரு வாழைப்பழத்தின் இலக்கம்)
  2. PLU code ல் 5 இலக்கங்கள் இருந்து அது 8ல் தொடங்கினால் அது முழுக்க முழுக்க மரபணு மாற்றம் செய்யப்பட்டது. உடலுக்குத் தீங்கானது. அலர்ஜி ஏற்படலாம்.(உதாரணமாக 84011 என்ற இலக்கமுடைய வாழைப்பழம் ஒரு மரபணு மாற்றப்பட்ட வாழைப்பழம் ஆக இருக்கலாம்.)
  3. PLU codeல் 5 இலக்கங்கள் இருந்து அது 9ல் தொடங்கினால் அது இயற்கையாக விளைந்தது. மரபணு மாற்றம் இல்லாதது. உடலுக்கு உகந்தது.(உதாரணமாக 94011 என்ற இலக்கமுடைய ஒரு வாழைப்பழம் இயற்கையாக விளைந்த தாக இருக்கலாம்.)
எனவே இதை கவனித்து வாங்கி பயன்படுத்தவும். இலக்கம் 3 ல் குறிப்பிட்டவாறு தேர்ந்தெடுப்பது சிறந்தது. இது அனைத்து பழங்களுக்கும் காய்கறிகளுக்கும் செல்லுபடியாகும்.

No comments:

Post a Comment

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா??

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா வடிகட்டி-உணணும் திமிங்கலங்கள் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டை உட்கொள்கின்றன, ஒரு...