1G,2G3G.. தொழில்நுட்பங்கள் பற்றி தெரியுமா?Do you know about 1G,2G3G... Technologies?


நாம் மொபைல் பாவிக்கும் போது இன்டர்நெட் பாவித்து இருப்போம். அப்போது 2G,E,3G,H,H+போன்ற அடையாளங்கள் டேட்டாவை ஆன் செய்த உடன் வந்திருக்கும். அப்படி என்றால் என்ன?
1G என்பது முதலில் தோன்றிய தொழில்நுட்ப புரட்சி. இதுவே செல்லிட தொலைபேசி தொழில்நுட்பத்தை பயன்படுத்த உதவியது. 2ஜி 3ஜி என பின்னாட்களில் அது வளர்ச்சி கண்டது. 'G'என்றால் generation என்று அர்த்தம்.
2G என்று மொபைல் டேட்டா இணைப்புக்குப் பிறகு ஏற்படுமாயின் இதன் பொருள் GPRS (general packet Radio Service) இணைப்போடு நமது தொலைபேசி இணைக்கப்பட்டுள்ளது என்பதாகும். இது 2000-2010 ஆண்டுகளில் அதிக பாவனையின் பார்த்திருப்போம் .இதன் வேகம் மிக குறைவானது .
1GB data download-------   165hr மணி
1GB data upload_----------165hrமணி

அடுத்ததாக வந்தது'E' என்ற அடையாளம் ஆகும். இதன் அர்த்தம் enhance data access for GSM evolution என்பதாகும்.2008-2009ம் ஆண்டுகளுக்குப் பிறகு இதன் பாவனை அதிகமானதை கண்டு கொள்ளலாம். இதன் மூலம் நாம்
1GB data download-------44hr மணி
1GB data upload---------89hr மணி
பாவனை செய்து கொள்ளலாம்.

அதற்கு அடுத்ததாக வந்த வேகமான இணைய பாவனை முறை 3ஜி என்பதாகும். இதை ஸ்மார்ட்போன்களிலேயே  பயன்படுத்த முடியும். இதுUMTS அதாவது Universal Mobile Telecom systemsல் தொடர்பு கொண்டே நாம் பயன்படுத்துகிறோம்.
1GB data download ------6hr
1GB data upload-------- 18hr

அடுத்ததாக வந்த வேகமான இணைப்பு முறை 'H'என்பதாகும். இதையும் ஸ்மார்ட்போன்களின் பயன்படுத்த முடியும். இதன் பொருள் HSPA , அதாவது high speed packet access என்பதை தொடர்பு கொண்டதால் தோன்றும் அறிகுறி ஆகும்.
1GB data download------ 25min நிமிடங்கள்
1GB data upload --------45min நிமிடங்கள்
என்று வேகங்களில் அனுப்பவும் டவுன்லோடு செய்யவும் முடியும்.

இதன் அடுத்த முன்னேற்ற கட்டமாக தோன்றியது தான் H+ முன்பு சொன்ன முறையை விட வேகம் கூடிய புதிய முறையாகும். இதற்கும் ஸ்மார்ட் போன்களே தேவைப்படுகிறது.
1GB data download-------5-20 min நிமிடங்கள்
1GB data upload -------- 15-39min நிமிடங்கள்

இறுதியாக சேவையிலுள்ள வேக ப்புரட்சி கூடிய மக்கள் பாவனையிலுள்ள முறை' 4G' . இது அதிக வேகம் உடையது.
LTE அதாவது long term evolution தொழில் ட்பத்தை பயன்படுத்தி இயங்குகிறது. அதிக வேகமுடையது இதற்கும் ஸ்மார்ட்போன் பாவனையே தேவை. தொழில்நுட்ப புரட்சியின் நிகழ்கால இறுதி அடையாளமாக திகழ்கிறது.
1GB data download------3min நிமிடங்கள்
1GB data upload -------5min நிமிடங்கள்

4.5 G தொழில்நுட்பம் சில இடங்களில் பாவனையில் உள்ளது. LTE advanced தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. 4G தொழில்நுட்பத்தை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு வேகம் கூடியது.

இது இதனுடன் முடிவடையப் போவதில்லை. அடுத்ததாக 5G தொழில்நுட்பம் ஆராய்ச்சியில் உள்ளது.2020ம் ஆண்டளவில் பாவனைக்கு வரலாம்.
இன்னும் அதிக தொழில்நுட்ப புரட்சியை சந்திக்க எதிர்காலத்தில் காத்திருங்கள்..

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா??

திமிங்கலத்தினுள் பிளாஸ்டிக்கா வடிகட்டி-உணணும் திமிங்கலங்கள் ஒரு நாளைக்கு மில்லியன் கணக்கான மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாட்டை உட்கொள்கின்றன, ஒரு...